அருளின் விநாடிகள் - 2026-09-10
Downloadஇன்றைய இறைவாக்குத் துகள் – 2026-09-10
இன்றைய சிறிய வழிச் செபம் – திருப்தி
வாழ்வில் திருப்தியிடன் வாழ அழைக்கும் இறைவா, இன்று எல்லா சூழலிலும் திருப்தியான மனநிலையை தாரும் ஆமென்
இன்றைய துதி – 2026-09-10
இணைந்து செபிப்போம் – 2026-09-10
ஆண்டவரே இயேசுவே, பரிசுத்தரே! பரம்பொருளே! உம்மை ஆராதிக்கிறேன். என் மகிமையின் அரசரே! உம்மை வணங்குகிறேன். “நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்”என உமது இறைவார்த்தை கற்றுத்தருகிறதே! நானும் என் அயலாருடன் அன்பாக வாழும் மனதை தாரும். இயேசுவே! நீர் சிலுவை மரத்தில் கடைசி வேளையிலும் “தந்தையே இவர்கள் செய்வது இன்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை; இவர்களை மன்னியும்” என்று உம் அன்பினால் மன்னித்து; இறைவனிடமும் பரிந்து பேசி வாழ்ந்தும் காட்டினீர்; ஆனால் நான் உம் விருப்பத்திற்கு மாறாக பகை உணர்வோடு வாழ்கின்ற இதயத்தை நீக்கிவிடும். இயேசையா! செல்வராய் இருந்த நீர் அனைத்தையும் விட்டு ஏழையாகி என்னை செல்வராய் விண்ணகப் பாதையில் நடத்துகின்ற கிருபைக்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். இயேசுவே! ”கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி பெறுவதில் இல்லை” என்றவரே என்னிடம் இருப்பவற்றை வறுமையிலும் பகிர்ந்து வாழும் மனதை எனக்கு தந்தருளும். சோதிக்கப்படும் போதும்; உம்மில் மகிழ்ந்திருந்து நிறைவை அடையவும் அருள்தாரும். ஆண்டவரே இயேசுவே! நீர் நிறைவாய் எனக்களித்த அன்பு, அமைதி, மகிழ்ச்சிகளையும் இன்னும் நீர் எனக்கு தந்த அனைத்து ஆசிர்வாதங்களையும், மற்றவர்களோடு முழுமையாய் பகிர்ந்துவாழ அருள் தாரும். இந்த நாள் முழுவதும் கூட இருந்து வழி நடத்தும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் என் ஜெபம் கேட்ட பிதாவே ஆமென்.