நாளுமொரு இறைவார்த்தை

இயேசு கிறிஸ்துவின் பெயரால்
இன்று ஆம் ஆண்டு ஆம் நாள் . இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.

இணைந்து செபிப்போம்

இரண்டாவது திருவழிபாடு ஆண்டு திருவருகையின் 2வது ஞாயிறு 2வது வாரம் வியாழக்கிழமை
2017-12-14ஆண்டவரே இயேசுவே,
அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை“ என்று திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளை இன்று வாசிக்க கேட்கிறேன் இறைவா. அவர் எந்தளவுக்கு தாழ்ச்சி நிறைந்தவராய் இருக்கின்றார் என்று இன்று அறிந்து கொள்ள ஞானத்தை, பக்தியை கொடுத்து வழிநடத்துகின்ற உமது கருணைக்கு நன்றி செலுத்துகிறேன். இறைவா திருவருகை காலத்தில் வருகின்ற அனைத்து திருவிவிலிய நபர்களும் தாழ்ச்சி என்ற உயரிய பண்பை கொண்டிருந்தார்கள், இந்த உயர்ந்த பண்பை இன்று எனக்கும் கொடுத்து வழிநடத்த உம்மை மன்றாடுகிறேன். தாழ்ச்சியோடு வாழ்ந்த அன்னை மரியாள், உமது மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததைப் போல என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உம்மை பற்றிய நற்செய்தியை பறைசாற்றும் கருவியாக என்னை உருவாக்கியருள மன்றாடுகிறேன். இதையெல்லாம் உம்திருநாமத்தின் பெயரில் மன்றாடுகிறேன் ஆமென்

13.12.2017AFP7351351_Articoloபளபளப்பான ஓடுகள் பதிக்கப்பட்டத் தரையில் நான் நடந்து சென்றபோது, திடீரென சறுக்கினேன். தடுமாறி விழப்போன என்னை, சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஒருவர், தாங்கிப் பிடித்தார். நான் விழுந்திருந்தால், தலையில் பலமாக அடிபட்டிருக்கும். சக்கர நாற்காலியில் இருந்தவர் என்னிடம், ‘நானும்... [2017-12-13 23:28:52]'Populorum progressio' வெள்ளி விழா - திருத்தந்தையின் செய்தி'மக்களின் முன்னேற்றம்' என்று பொருள்படும் 'Populorum progressio' என்ற அறக்கட்டளை, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் 4,400க்கும் மேற்பட்ட மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டுள்ளது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இலத்தீன் அமெரிக்க நாடுகளில்... [2017-12-13 23:18:32]திருத்தந்தையின் மறைக்கல்வியுரை: இறைவனில் மகிழும் நாள் ஞாயிறுஐரோப்பா முழுவதும் குளிர்காலம் துவங்கிவிட்டதால், கடந்த வாரம் போன்றே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்வியுரை சந்திப்பு, அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கிலேயே இடம்பெற்றது. திருநற்கருணை மற்றும் திருப்பலி குறித்த புதிய மறைக்கல்வித்தொடர் ஒன்றைத் துவக்கியுள்ள திருத்தந்தை... [2017-12-13 23:13:49]

மன்னார் மடுமாதா சிறிய குருமட ஒளிவிழாமன்னார் மறைமாவட்டத்தில் வருங்கால அருட்பணியாளர்களை தயார் செய்வதற்கான நாற்று மேடையாகத் திகழும் மன்னார் மடுமாதா சிறிய குருமட மாணவர்களின் கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டிய ஒளிவிழா 09.12.2017 சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு மன்னார் மடுமாதா சிறிய குருமட அதிபர் அருட்பணி.... [2017-12-12 23:28:06]‘இளையோர் நாம் - கிறிஸ்துவின் ஒளியில் மாறிடுவோம்இளையோர் நாம் - கிறிஸ்துவின் ஒளியில் மாறிடுவோம் மாற்றத்தை நோக்கி’ - குழு பாடல் போட்டி டிச.9 யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் அமரர் அருட்பணி சரத்ஜீவன் ஞாபகார்த்த கிறிஸ்து பிறப்பு குழு பாடல் போட்டி இன்று காலை... [2017-12-12 23:12:29]

பசுவைக் கொலை செய்பவருக்கு மரணதண்டனை அச்சுறுத்தலுக்கு எதிராக கண்டனம்ஆடுமாடுளைக் கொலை செய்கின்ற அல்லது மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கின்ற மக்களைத் தூக்கிலிடுவோம் என்று இந்து தீவிரவாதக் குழு ஒன்று அச்சுறுத்தியிருப்பதற்கு எதிராக, தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார், இந்திய ஆயர் ஒருவர்.

விஷ்வ இந்து பரிஷத் குழுவின் அச்சுறுத்தல் பற்றி, யூக்கா செய்தியிடம்... [2017-12-10 12:27:01]ஆலப்புழை மறைமாவட்டத்தின் வாரிசு ஆயர் நியமனம்ஆலப்புழை மறைமாவட்டத்தின் வாரிசு ஆயராக, அருள்பணி ஜேம்ஸ் இரபேல் அனப்பரம்பில் (James Raphael Anaparambil) அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 7, வியாழனன்று நியமித்துள்ளார்.

1962ம் ஆண்டு, கேரளாவின் கண்டக்கடவு எனும் ஊரில் பிறந்த ஜேம்ஸ் இரபேல் அவர்கள், 1986ம்... [2017-12-10 12:21:55]

வூப்பேற்றால், பீலபெல்ட் மற்றும் பிரங்க்போர்ட் பணித்தளங்களின் ஒளிவிழா அழைப்பிதழ்கள்வூப்பேற்றால், பீலபெல்ட் மற்றும் பிரங்க்போர்ட் பணித்தளங்களின் ஒளிவிழா அழைப்பிதழ்கள்.[2017-12-13]


பணித்தள ஒளிவிழா நிரல் - 2017யேர்மனியின் ஒவ்வொரு பணித்தளங்களிலும் நடைபெறவுள்ள ஒளிவிழாக்கள் பற்றிய விபரம் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. யேர்மன் பணித்தள் ஒளிவிழாக்கள் அனைத்தும் இம்முறை "அன்பர் வருகின்றார், எனவே அன்பில் இணைந்த குடும்பங்களாவோம்!" என்ற மையக்கருத்தில் நடைபெறவுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். [2017-12-02]


நத்தார் புத்தாண்டு வழிபாட்டு நிரல் 2017 - 2017யேர்மனியின் ஒவ்வொரு பணித்தளங்களிலும் நடைபெறவுள்ள நத்தார் புத்தாண்டு வழிபாடுகள் பற்றிய விபரம் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வழிபாடுகளில் கலந்து கொண்டு ஆண்டவர் இயேசுவின் ஆசீரைப்பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம். [2017-12-14]


ஏக பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன் என்பதன் அர்த்தம் தான் என்ன?இயேசு அவர்களை அணுகிக் கூறியது: "விண்ணிலும் மண்ணிலும் எல்லா அதிகாரமும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள். இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் [2017-11-14 01:23:11]

எழுத்துருவாக்கம்:சகோதரர். அ. அன்ரன் ஞானராஜ் றெவல்( சலேசிய சபை )விழுந்தால் எழுவோம் தோல்விகள் வாழ்க்கையில்லை.கடவுள் அவனிடம் , “உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன். மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார். [2017-09-24 23:35:09]

எழுத்துருவாக்கம்: சகோ. அ. அன்ரன் ஞானராஜ் றெவல் SDB

ஓளிவிழா , நியுரன்பேர்க், யேர்மனி 2010


2017-12-14

கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது.

Pope John Paul II


2017-12-14

வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது.
பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.

2017-12-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே! நான் உங்கள் அன்னையாக, நீதிமான்களின் அன்னையாக, அன்பு செய்பவர்களதும் துன்பத்தில் இருப்பவர்களதும் அன்னையாக, புனிதர்களின் அன்னையாக உங்களிடம் வருகின்றேன். எனது பிள்ளைகளே, நீங்களும் புனிதர்களாக வாழலாம், ஆனால் அது உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. புனிதர்கள் எனப்படுவோர், வானகத் தந்தையை அளவில்லாமல் அன்பு செய்தவர்கள், அனைத்திலும் பார்க்க அவரை அன்புசெய்தவர்கள். ஆகவே, எனது பிள்ளைகளே எப்பொழுதும் சிறப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் நன்றாக இருப்பதற்கு முயற்சித்தால், நீங்கள்...
2017-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இந்த இரக்கத்தின் காலத்தில் செபிக்குமாறு உங்களை அழைக்கிறேன். எனது பிள்ளைகளே செபிப்பதுடன் சமாதானத்தைத் தேடுங்கள். உலகிற்கு வந்த கிறிஸ்து உங்களுக்கு அவரது சமாதானத்தைத் தரவே வந்தார், எனது மகனாகிய அவர், உங்கள் சகோதரன், என் மூலமாக மனம்திரும்புமாறு உங்களை அழைக்கின்றார், இறைவன் இல்லாமல் உங்களுக்கு எதிர்காலமோ அல்லது நித்திய வாழ்வோ இல்லை. ஆகவே, நம்பிக்கை கொள்வதுடன் செபியுங்கள், இரக்கத்தில் வாழ்வதுடன் அவரை நீங்கள் தனிமையில் சந்திக்க எதிர்பார்த்திருங்கள்....
2017-11-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! உங்கள் அன்னையாம், என்னைச் சுற்றிக் கூடிவந்திருக்கும் உங்களைப் பார்க்கும்போது, பல தூய்மையான ஆன்மாக்களை, அன்பு மற்றும் ஆறுதல் தேடும் எனது பல பிள்ளைகளைக் காண முடிகின்றது, ஆனால் அதை எவரும் அதை உங்களுக்குத் தரவில்லை. அத்துடன் எனது மகனைக் கண்டறியாத பலர், முன்மாதிரிகையாக இல்லாமல் பாவத்தில் வாழ்வதையும் காண முடிகின்றது. நல்லவை அமைதியாகவும், தூய இதயத்தின் ஊடாகப் பெருகுவதாலும், அது பலமடைந்து, இந்த உலகிற்கு வழங்கப்படுகின்றது. பல்வேறு...


திருவெளிப்பாட்டு ஆண்டு 2016/2017

27/11/2016-26/11/2017


மின்னஞ்சல் குழுமம்

ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை கீழே பதிவு செய்யவும்.

உங்கள் Email முகவரி

ETR வானொலியில் யேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் வானொலி நிகழ்வு

தினமும் காலை 7:45மணி முதல் 8:05 மணி வரை

இவ் நாளந்த நற்சிந்தனை எமது இணையத்தில் நாள்தோறும் காலை 8.30 மணி முதல் மறு நாள் காலை 8.30 மணி வரை உங்கள் ஆசீர்வாத்ததிற்காக ஒலிபரப்பாகின்றது. கேட்டு பயனடையுங்கள், மற்றவர்களுக்கும் அறிவியுங்கள்.

பயனடைந்தோர்

counts
தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடை யெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். (திருத்தூதர் பணி 1:8) உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள். (மாற்கு 16:15)

புனித கன்னி மரியாள்

இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்
(யோவான் 2:5)

இறைவாக்குத்தத்தம்

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
(யோவான் 16:20)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

திருத்தந்தை

பிரான்சிஸ்

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்
(மத்தேயு 16:18)

பரிசுத்த ஆவி

நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்
(யோவேல் 2:28)

பரிசுத்த ஆவி

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
(எசாயா 11:2)

இறைவாக்குத்தத்தம்

எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்: என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
(நீதிமொழிகள் 8:17)

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.
(எசாயா 53:5)

தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.
(யோவான் 3:16)

ஆவியின் அருட்கொடைகள்

தூய ஆவியார் ஞானம் நிறைந்த சொல்வளம், அறிவுசெறிந்த சொல்வளம், நம்பிக்கை, பிணிதீர்க்கும் அருள் கொடை, வல்ல செயல் செய்யும் ஆற்றல், இறைவாக்குரைக்கும் ஆற்றல், ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றல், பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றல், அப்பேச்சை விளக்கும் ஆற்றல் ஆகியவற்றை அருளுகிறார்.
(1கொரிந்தியர் 12:8-10)