வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்.
(யோவான் 1:14)
ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்: அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும்.
(எசாயா 11:1)
என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்
( மத்தேயு 3:16)
ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க அவர் என்னை அனுப்பியுள்ளார்.
( லூக்கா 4:18)
மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது
( மத்தேயு 4:17)
இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்
(மாற்கு 10:48)
'ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா! '
(மாற்கு 11:10)
என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்: உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.
(திருப்பாடல் 16:10)
அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்து கொள்ளப்பட்டார். அவ்வாறே அவர் மீண்டும் வருவார்
(திருத்தூதர்பணி 1:10-11)
நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு: முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார்.
(நீதிமொழிகள் 22:6)
இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்: தங்களின் தொங் கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.
(திருவெளிப்பாடு 7:14)