தனது பாவங்களை நினைத்து வருந்துவோர் மீது முற்றிலும் இரக்கமுள்ளவராக இருக்கிறேன். ஓர் ஆன்மாவின் இழிந்த நிலை எனது சீற்றத்தைத் தூண்டிவிடுவதில்லை. மாறாக, எனது இதயம் அவ் ஆன்மாவின் மட்டில் பேரிரக்கத்தால் தூண்டப்படுகிறது.
பவுஸ்தீனாவிடம்-இயேசு
நான் அன்பும் இரக்கமும் ஆக இருக்கிறேன். ஒருவர் என்னை நம்பிக்கையுடன் அணுகும் போது நான் அவர்மேல் பொழியும் அருள்
வளங்கள் அவருடைய அளவுக்கும் அதிகமாகி மற்றவர்களிடமும் பரவும் அளவுக்கு அவரை நிரப்புவேன்.
நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். (எசாயா 53:5)
புனித கன்னி மரியாள்
இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்
(யோவான் 2:5)
இறைசித்தம்
இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)
வாக்குத்தத்தம்
உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்.
(யோவான் 14:16)
மன்றாட்டு
இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்.(லூக்கா 23:42)
நடுத்தீர்ப்பு
இதோ! நான் விரைவில் வருகிறேன்.(திருவெளிப்பாடு 22:7)
பற்றிமாவில் மரியன்னை
உலகில் சமாதனத்தைப் பெற்றுக்கொள்ள ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்லவும்