வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்தன்பாலின உறவு சட்டமயமானது தவறு - இந்தியத் திருஅவை

தன்பாலின உறவை ஆதரித்து, இந்திய உச்ச நீதி மன்றம் வழங்கியத் தீர்ப்பு, சட்டப்பூர்வமாக மாறியிருக்கலாமே தவிர, அது, நன்னெறி வழியில் சரியான முடிவு அல்ல கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் இந்திய உச்ச நீதி மன்றம், தன்பாலின உறவுகளை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளதை, இந்திய கத்தோலிக்கத் திருஅவை, நன்னெறி முறையில் சரியென்று ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளது. கத்தோலிக்கத் திருஅவை, தன்பாலின உறவை ஒருபோதும் ஆதரிக்காது என்றும், ஆண் பெண் உறவும், குடும்பமும் திருஅவையின் கருத்துக்களாக எப்போதும் இருக்கும் என்றும், இந்திய ஆயர் பேரவையின் துணைத் தலைவர், ஜோஷுவா மார் இஞ்ஞாதியோஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார். தன் பாலின உறவை குற்றம் என்று இதுவரை கூறிவந்த இந்தியச் சட்டத்தின் 377-A பிரிவை நீக்கி, கடந்த வாரம் செப்டம்பர் 6ம் தேதியன்று, இந்திய உச்ச நீதி மன்றம் வழங்கியத் தீர்ப்பு, சட்டப்பூர்வமாக மாறியிருக்கலாமே தவிர, அது, நன்னெறி வழியில் சரியான முடிவு அல்ல என்று, இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் முன்னேற்ற பணிக்குழுவின் செயலர் அருள்பணி ஸ்டீபன் பெர்னாண்டஸ் அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். மனித பாலின ஈர்ப்பும், உறவும், அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கென்று இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை என்றும், தன்பாலின ஈர்ப்பும், உறவும், இறைவனின் திட்டத்திற்கு முரணாகச் செல்கின்றன என்றும் அருள்பணி பெர்னாண்டஸ் அவர்கள் கூறினார். இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களும் குரல் எழுப்பி வருகின்றனர் என்று UCA செய்தியொன்று கூறுகிறது. (UCAN) [2018-09-14 01:15:58]


தன்பாலின உறவு சட்டமயமானது தவறு - இந்தியத் திருஅவை

தன்பாலின உறவை ஆதரித்து, இந்திய உச்ச நீதி மன்றம் வழங்கியத் தீர்ப்பு, சட்டப்பூர்வமாக மாறியிருக்கலாமே தவிர, அது, நன்னெறி வழியில் சரியான முடிவு அல்ல கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் இந்திய உச்ச நீதி மன்றம், தன்பாலின உறவுகளை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளதை, இந்திய கத்தோலிக்கத் திருஅவை, நன்னெறி முறையில் சரியென்று ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளது. கத்தோலிக்கத் திருஅவை, தன்பாலின உறவை ஒருபோதும் ஆதரிக்காது என்றும், ஆண் பெண் உறவும், குடும்பமும் திருஅவையின் கருத்துக்களாக எப்போதும் இருக்கும் என்றும், இந்திய ஆயர் பேரவையின் துணைத் தலைவர், ஜோஷுவா மார் இஞ்ஞாதியோஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார். தன் பாலின உறவை குற்றம் என்று இதுவரை கூறிவந்த இந்தியச் சட்டத்தின் 377-A பிரிவை நீக்கி, கடந்த வாரம் செப்டம்பர் 6ம் தேதியன்று, இந்திய உச்ச நீதி மன்றம் வழங்கியத் தீர்ப்பு, சட்டப்பூர்வமாக மாறியிருக்கலாமே தவிர, அது, நன்னெறி வழியில் சரியான முடிவு அல்ல என்று, இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் முன்னேற்ற பணிக்குழுவின் செயலர் அருள்பணி ஸ்டீபன் பெர்னாண்டஸ் அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். மனித பாலின ஈர்ப்பும், உறவும், அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கென்று இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை என்றும், தன்பாலின ஈர்ப்பும், உறவும், இறைவனின் திட்டத்திற்கு முரணாகச் செல்கின்றன என்றும் அருள்பணி பெர்னாண்டஸ் அவர்கள் கூறினார். இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களும் குரல் எழுப்பி வருகின்றனர் என்று UCA செய்தியொன்று கூறுகிறது. (UCAN) [2018-09-10 22:39:36]


மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்த ஆயர் மஸ்கரீனஸ்

இந்தியக் கிறிஸ்தவ சமுதாயம், அமைதியை விழையும் ஒரு சமுதாயம் என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர், அவர்கள் ஆற்றிவரும் ஒப்பற்ற சமுதாயப் பணிகள் தடையின்றி தொடர்வதற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாக வாக்களித்தார் ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர், ஆயர் தியோடோர் மஸ்கரீனஸ் அவர்களும், மேகாலயா மாநில முதல்வர், கொன்ராட் சங்மா அவர்களும், மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் அவர்களை, செப்டம்பர் 3, இத்திங்களன்று அவரது இல்லத்தில் சந்தித்தனர் என்று, இந்திய ஆயர் பேரவை, செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் குறித்தும், கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு தரப்படும் நெருக்கடிகள் குறித்தும், ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள் விளக்கிக் கூறியதை, அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் பொறுமையாக செவிமடுத்தார் என்று, இச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெற்று சமுதாயப்பணிகள் ஆற்றி வரும் 88 அரசு சாரா தன்னார்வக் குழுக்கள் மீது கடினமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும், இக்குழுக்கள் அனைத்தும், கிறிஸ்தவ குழுக்கள் என்றும், ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள் எடுத்துரைத்தார். ஆயரும், மேகாலயா முதல்வரும் கூறியவற்றை கவனமுடன் செவிமடுத்த அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், கிறிஸ்தவ சமுதாயம், அமைதியை விழையும் ஒரு சமுதாயம் என்றும், அவர்கள் ஆற்றிவரும் ஒப்பற்ற சமுதாயப் பணிகள் தடையின்றி தொடர்வதற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாகவும் கூறினார். (CBCI) [2018-09-07 00:39:12]


இந்திய கிறிஸ்தவர்கள் திருத்தந்தைக்கு கடிதம்

ஒடிசா மாநிலத்தில் 2008ம் ஆண்டில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற வன்முறையில் கொல்லப்பட்டவர்கள் மறைசாட்சிகளாக அறிவிக்கப்படுமாறு திருத்தந்தைக்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பம் கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் இந்தியாவின் கந்தமால் மாவட்டத்தில், 2008ம் ஆண்டில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற வன்முறைக்குப் பலியான கிறிஸ்தவர்கள், விசுவாசத்தின் மறைசாட்சிகளாக அறிவிக்கப்படுமாறு, இந்திய தேசிய கத்தோலிக்க கழகத்தின் முன்னாள் தலைவர், ஜான் தயாள் அவர்கள், திருத்தந்தைக்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில், கிறிஸ்தவர்க்கெதிராக வன்முறைகள் இடம்பெற்ற பத்தாமாண்டு நிறைவையொட்டி, இக்கடிதத்தை வெளியிட்டுள்ள, இந்திய சமூக ஆர்வலரான ஜான் தயாள் அவர்கள், கந்தமால் கிறிஸ்தவர்களின் விசுவாசம் திருஅவையில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இத்தகைய தியாகத்தை மேற்கொண்டவர்கள், திருஅவை வரலாற்றில் மறைசாட்சிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ள ஜான் தயாள் அவர்கள், கட்டக்-புபனேஸ்வர் பேராயர், இந்தியாவின் நான்கு கர்தினால்கள், மற்றும் தலத்திருஅவைத் தலைவர்களை, இவ்விவகாரத்தில் தீவிரம் காட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் சுவாமி லக்ஷ்மானந்தா அவர்கள், 2008ம் ஆண்டு ஆகஸ்டில் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில், கிறிஸ்தவர்கள் மீது குற்றம் சுமத்தி, இந்து தீவிரவாத அமைப்பினர், அதே ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதியன்று கந்தமால் மாவட்டத்தில், வன்முறையில் ஈடுபட்டனர். இவ்வன்முறையில், சிறார், பெண்கள், கர்ப்பிணி பெண்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகள் உட்பட அறுபதாயிரத்துக்கும் அதிகமானோர் காடுகளுக்குச் சென்று ஒளிந்துகொண்டனர். அவர்களில் முப்பதாயிரம் பேர் ஓராண்டு அளவாக, அரசின் முகாம்களில் வாழ்ந்தனர். ஆறாயிரத்துக்கு அதிகமான வீடுகளும், 300க்கு அதிகமான ஆலயங்களும் அழிக்கப்பட்டன. மேலும் 120 பேர் கொல்லப்பட்டனர். [2018-08-30 01:56:07]


புனித அன்னை தெரேசாவின் 108வது பிறந்தநாள் நினைவு

கொல்கத்தா பேராயர் இல்லத்தில் நடைபெற்ற, புனித அன்னை தெரேசாவின் 108வது பிறந்தநாள் நினைவுக் கொண்டாட்டத்தில், மாசிடோனியா குடியரசின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள் வாழ்வு என்பது, இறைவன், மனிதர்களுக்கு வழங்கிய ஒரு மாபெரும் கொடை என்பதையும், அந்தக் கொடை இறைவனுக்கு மட்டுமே உரியதொரு கொடை என்பதையும் அன்னை தெரேசா தன் வாழ்வின் வழியே உணர்த்தினார் என்று, கொல்கத்தா பேராயர் தாமஸ் டிசூசா அவர்கள் கூறினார். ஆகஸ்ட் 26 கடந்த ஞாயிறன்று, புனித அன்னை தெரேசா பிறந்ததன் 108வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்க, திருப்பலி நிறைவேற்றிய பேராயர் டிசூசா அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார். இத்தருணத்தில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அன்னை தெரேசா பிறரன்பு சகோதரிகள் சபையின் தலைவி மேரி பிரேமா அவர்கள், பலருடைய வாழ்க்கை, அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களை வைத்து அளக்கப்படும் வேளையில், அன்னை தெரேசாவின் வாழ்க்கை, அன்பை அளவுகோலாகக் கொண்டிருந்தது என்று கூறினார். அன்னையின் நினைவுத் திருப்பலியைத் தொடர்ந்து, பேராயர் இல்லத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், மாசிடோனியா குடியரசிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் என்றும், மாசிடோனிய குடியரசு வழங்கிய அன்னை தெரேசாவின் வெண்கலச் சிலையை, பேராயர் டிசூசா அவர்கள் அர்ச்சித்தார் என்றும் ஆசிய செய்தி கூறியுள்ளது. 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி, மாசிடோனியா குடியரசின் Skopje எனும் ஊரில் பிறந்த அன்னை தெரேசா அவர்கள், 1997ம் ஆண்டு, செப்டம்பர் 5ம் தேதி, கொல்கத்தாவில், தன் 87வது வயதில், இறையடி சேர்ந்தார். 2003ம் ஆண்டு, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் அருளாளராகவும், 2016ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராகவும் உயர்த்தப்பட்ட புனித அன்னை தெரேசா, கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் இணை பாதுகாவலராக அறிவிக்கப்பட்டுள்ளார். [2018-08-30 01:52:14]


ஏழு அப்பாவி கிறிஸ்தவர்களை விடுதலை செய்ய கையெழுத்துக்கள்

கந்தமால் மாவட்டத்தில் இடம்பெற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பாக, சிறையிலுள்ள ஏழு அப்பாவி கிறிஸ்தவர்களை விடுதலை செய்யுமாறு, ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கிறிஸ்தவ செய்தியாளரும், மனித உரிமை ஆர்வலருமான ஆன்டோ அக்காரா அவர்கள், இணையதளம் (www.release7innocents.com) வழியாக விடுத்த அழைப்பை ஏற்று, ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்டு, அக்கிறிஸ்தவர்களின் விடுதலைக்காக விண்ணப்பித்துள்ளனர். இலஷ்மானந்தா சரஸ்வதி எனப்படும் ஓர் இந்துமத சுவாமி அவர்கள், 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதியன்று கொலை செய்யப்பட்டது தொடர்பாக இடம்பெற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களின் பத்தாம் ஆண்டை முன்னிட்டு, அக்கிறிஸ்தவர்களின் விடுதலைக்காக, மேலும் கையெழுத்துக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளில், ஏறத்தாழ நூறு கிறிஸ்தவர்கள் உயிரிழந்தனர். ஏறத்தாழ 300 ஆலயங்களும், ஆறாயிரம் கிறிஸ்தவ வீடுகளும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இவ்வன்முறையில் ஈடுபட்ட பல இந்துக்கள் கல்வியறிவற்றவர்கள் என்றும், பழிவாங்கும் இந்நடவடிக்கையில் ஈடுபட இவர்கள் தூண்டப்பட்டார்கள் என்றும் செய்திகள் கூறுகின்றன. (ஆதாரம் : Fides/ வத்திக்கான் செய்திகள்) [2018-07-16 23:02:54]


இந்தியாவில் மறைபரப்புப்பணி குறித்து ஆயர்களின் ஆலோசனை

இந்தியத் தலத்திருஅவையின் முக்கியமான பணி, கிறிஸ்துவின் காயங்களைத் தொடுவது என்று, மும்பைப் பேராயரும், இந்திய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார். இந்தியாவில் கத்தோலிக்கத் திருஅவை மேற்கொள்ள வேண்டிய மறைபரப்புப் பணிகள் குறித்து கலந்து பேச, பல்வேறு மறைமாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயர்களின் கூட்டம், மும்பை நகரில் அண்மையில் நிறைவுற்றதையடுத்து, கர்தினால் கிரேசியஸ் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். இயேசுவின் காயங்கள் வழியே அவரது உயிர்ப்பை இன்னும் ஆழமாக உணர்ந்த புனித தோமா வழியே இந்திய நாடு பெற்றுக்கொண்ட நற்செய்தியை, இன்று மீண்டும் மக்களுக்குப் பறைசாற்ற, கிறிஸ்துவின் காயங்களாக விளங்கும் வறியோர், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரை இந்தியத் திருஅவை தொடவேண்டும் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறினார். இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்கள் அவை, கடந்த ஆண்டு போபால் நகரில் நிறைவேற்றிய தீர்மானங்களை மையப்படுத்தி இந்தக் கூட்டம் நடைபெற்றது என்று ஆசிய செய்தி கூறுகிறது. (ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் செய்திகள்) [2018-07-12 01:16:00]


மங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா

இந்தியாவின் மங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி பால் சல்தான்ஹா(Paul Saldanha) அவர்களை, இச்செவ்வாய்க்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். மங்களூரு மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய அலாய்சியஸ் பால் டி சூசா அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் உர்பானியானம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும், 54 வயது நிரம்பிய அருள்பணி பால் சல்தான்ஹா அவர்களை, மங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமித்துள்ளார். 1964ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி மங்களூரு மறைமாவட்டத்தின் Kinnigoli என்ற ஊரில் பிறந்த புதிய ஆயர் சல்தான்ஹா அவர்கள், 1991ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். உரோம் உர்பானியானம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், இறையியலில் முனைவர் பட்டமும், பெங்களூரு இறையழைத்தல் பயிற்சி நிறுவனத்தில் உளவியலில் சான்றிதழ் படிப்பும் முடித்துள்ள இவர், மங்களூரு மறைமாவட்டத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த பின்னர், 2015ம் ஆண்டு உர்பானியானம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார். இப்பல்கலைக்கழகத்தில் துணை ஆன்மீக இயக்குனராகவும் பணியாற்றிய மங்களூரு புதிய ஆயர், பால் சல்தான்ஹா அவர்கள், 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில், உலக ஆயர்கள் மாமன்ற பொதுச் செயலகத்தின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார். (ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்) [2018-07-04 01:15:23]


பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தமிழக ஆயர்கள் எதிர்ப்பு

தமிழகத்தின், சேலம் - சென்னை இடையே அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள பசுமை வழிச்சாலையை எதிர்த்து மக்கள் போராடி வருவதை, தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘தமிழக அரசே, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பசுமை வழிச்சாலை திட்டத்தைக் கைவிடுக’ என்ற தலைப்பில், தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரான, மதுரை பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் வாழ்வை அழித்து, அதன்மேல் உருவாகும் வளர்ச்சித் திட்டங்களை ஆயர்கள் ஏற்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. வளர்ச்சி என்ற பெயரில், அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் எவையுமே மக்களுக்குப் பயன்பட்டதாகத் தெரியவில்லை என்றும், தொழில் வளர்ச்சி என்றும், வேலை வாய்ப்பு அதிகரிப்பு என்றும், மக்களுக்கு ஆசைகாட்டி திசை திருப்பும் அரசின் போக்கைக் கண்டிக்கிறோம் என்றும், அவ்வறிக்கை கூறுகிறது. வளர்ச்சி என்ற பெயரில், இன்றைய அரசுகள் முன்னெடுக்கும் திட்டங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு ஏகபோகங்களுக்கும் துணைபோய்க்கொண்டிருக்கின்ற நிலையில், சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைச் சாலையும், மக்களுக்கான சாலையாக இருக்கப்போவதில்லை என்பதால், பசுமை வழிச்சாலை என்ற பெயரில், மக்களை, அவர்களின் வாழ்வாதாரம் எனும் அடிப்படை உரிமையைப் பறிக்கும் இவ்வன்முறை திட்டத்தைக் கைவிட தமிழக அரசை வேண்டுகிறோம் என்றும், தமிழக ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது. அபகரிக்கப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்குவது உரிய தீர்வாகாது என்றுரைக்கும், தமிழக ஆயர் பேரவையின் அறிக்கை, இழப்பீடு என்ற பெயரில், ஏழை மக்களிடம் ஆசைகாட்டி, நிலங்களை அபகரிப்பு செய்வது, விரும்பாத மக்களிடம் அச்சுறுத்தி நிலங்களைக் காப்பற்றுவது ஒருபக்கம் எனில், மக்களின் வாழ்வாதாரத்தைத் தொலையச் செய்து அமைக்கப்படும் சாலைகள், மக்களின் வாழ்வுரிமைக்கு எதிரானதென்பதால், மக்களைத் திரட்டிப் போராடும் சமூக ஆர்வலர்களை அச்சுறுத்தல், சிறைவைத்தல், அவர்களுக்கு சமூக விரோதிகள் அல்லது தீவிரவாதிகள் என்று பெயர்சூட்டி, போராட்ட நோக்கத்தையும் போராளிகளையும் அவமானப்படுத்தும் பணியையும் காவல்துறை வழியாக அரசு செய்து வருகிறது என்றும், குறை கூறியுள்ளது. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் எட்டு வழிகளைக் கொண்ட இந்த பசுமை வழிச்சாலை திட்டம், நூறு ஹெக்டர்கள் காடுகள் பகுதிக்கு அச்சுறுத்தல் எனவும், 274.3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இச்சாலையில், 23 கிலோ மீட்டர் தூரம், காடுகளில் அமைந்துள்ள 16 கிராமங்கள் வழியாகச் செல்லும் எனவும் செய்திகள் கூறுகின்றன. (ஆதாரம் : Ind.Sec./வத்திக்கான் வானொலி) [2018-07-01 00:14:49]


பாட்னா உயர்மறைமாவட்டத்திற்கு புதிய வாரிசு ஆயர்

இந்தியாவின் பாட்னா உயர்மறைமாவட்டத்திற்கு, பக்சர் மறைமாவட்ட ஆயர் செபஸ்டியான் கல்லுப்புரா (Sebastian Kallupura) அவர்களை, வாரிசு ஆயராக, இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 1953ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி, கேரளாவின் கொட்டியூரில்(Kottiyoor) பிறந்த ஆயர் செபஸ்டியான் கல்லுப்புரா அவர்கள், பாட்னா உயர்மறைமாவட்டத்திற்காக, 1984ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பாட்னா உயர்மறைமாவட்டத்தில் முக்கிய பொறுப்புக்களை வகித்த இவர், 2009ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதியன்று, பக்சர் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார். பாட்னா உயர்மறைமாவட்டத்தின் தற்போதைய பேராயராக, இயேசு சபையின் பேராயர் வில்லியம் டி சூசா அவர்கள், 2007ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார். இவர் 1946ம் ஆண்டு மார்ச் 5ம் நாளன்று பிறந்தவர். பீஹார் மாநிலத்திலுள்ள பாட்னா உயர்மறைமாவட்டத்தின்கீழ், Bettiah, Bhagalpu, Buxar, Muzaffarpur, Purnea ஆகிய மறைமாவட்டங்கள் உள்ளன. (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2018-06-30 01:47:18]