திரு. செபமாலை அருட்பிரகாஸ் (கிளி) காலமானார்




யாழ். நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sucy-en-Brie, பிரித்தானியா London Croydon ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை அருட்பிரகாஸ் அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

இவர் நமது பணியக நற்செய்திப் பணிக்குழுவில் முழுமையாகத் தம்மையும் இணைத்து கொண்டவர். நமது வானொலிக்கு, "இயேசுவின் நற்செய்தி" என்ற வாராந்த நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கியவர் அத்தோடு மட்டுமல்ல திருவிழிப்பு நிகழ்ச்சிகளிலும் நேரலையில் தனது நற்செய்திப்பகிர்வை வழங்கி தனது பொதுப்பணியை முழு ஆர்வத்துடன் ஆற்றி வந்தவர்; இப்போது தனது ஓட்டத்தை முடித்துக் கொண்டார் என்பதை வருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.

இவரின் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர் அனைவருக்கும் யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு திருகி. திரு. செபமாலை அருட்பிரகாஸ் (கிளி) அவர்களின் ஆன்மா இறை சந்நிதியில் நித்தியத்திற்கும் நிறைவான அமைதியுடன் இறைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

"ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார், அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். "
(திருப்பாடல்கள் 34:22)