37வது ஆண்டு நிறைவில்
|
18.00 மணி | செபமாலை பவனி (கேவலார் தொடருந்து நிலையத்திலிருந்து) |
19.00 மணி | மாலை நற்கருணை வழிபாடும் மரியன்னை வணக்கமும்.(மெழுகுதிரிப்பவனி) |
10.08.2024 சனிக்கிழமை
09.00 மணி | முதல் திருப்பலி |
10.45 மணி | திருவிழாத் திருப்பலி |
15.00 மணி | நற்கருணை வழிபாடும் ஆசீரும் |
திருவிழாவில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை
யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள்
யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் அழைப்பை ஏற்று, இவ்வாண்டு
எமது யாழ் மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் கேவலார் அன்னையின்
திருவிழாவிற்கு வருகை தரவுள்ளார்.இந்த ஆண்டு யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் குருத்துவ வாழ்வின் 50வது ஆண்டு என்பதும் ஒரு சிறப்பாகும்.
கேவலார் திருத்தல முகவரி
Wallfahrt Kevelaer Kapellenplatz 35, 47623 Kevelaer |
கேவலார் தமிழர் யாத்திரைக்கு வருபவர்களுக்கான முக்கிய அறிவித்த்தல்
இவ்வாண்டு கேவலார் தமிழர் யாத்திரைக்கு வருபவர்களுக்கான முக்கிய அறிவித்தல் ஒன்று தரப்பட்டுள்ளது. அதில் கேவலாரை அண்டிய பகுதியில் பாதை சீர்திருத்தப்பணிகள் நடை பெறுவதன் காரணமாக ஒரு சில மாற்றுப் பாதைகளைப் பாவிப்பதற்கான திட்டத்தை வகுத்துள்ளார்கள். அதன் படி, நெதர்லாந்தில் இருந்து வரும் பயணிகள் வழமை போலவே, A57 நெடுஞ்சாலை வழியாக வந்து Goch/Weeze வெளிச் செல்லும் பாதை வழியே கேவலாரை வந்து அடையலாம்.ஆனால், A57 நெடுஞ்சாலை Köln/Krefeld இருந்து வரும் பயணிகள் வழமை போலவே Sonbeck (5) வெளிச் செல்லும் பாதை இவ் ஆண்டு சில நேரங்களில் மூடப்பட்டு இருந்தால், நீங்கள் அடுத்த நெடுஞ்சாலை . Uedem (4) வழியாக வெளியேறி, இடதுபுறம் Schloß-Wissener-Straßeக்கு திரும்பவும், அங்கிருந்து B9 சாலை வழியாக Geldern/Kevelaer திசையில் பயணித்து கேவலாரை வந்து அடையலாம்.
அடுத்து, காவல் நிலையத்துக்கு முன்னால் உள்ள வாகன தரிப்பிடம் Peter-Plümpe-Platz, 47623 Kevelaer தற்போதைய கட்டுமான பணி காரணமாக முழுமையாக மூடப்பட்டுள்ளது எனவே, புனிதத்தலத்திற்கு வாகனங்ககளில் வருவோர் கேவலார் நகர நிர்வாகத்தினால் எமக்கு தரப்பட்டுள்ள அறிவுறுத்தலின்படி நீங்கள் உங்கள் வாகனங்களை இந்த இடங்களில் இலவசமாக தரிப்பிடம் செய்யலாம்.
Europaplatz இல் வாகனத்தை தரிப்பிட விரும்புபவர்கள் வழிசெல்லும் முகவரி: Am Europapl. 47623 Kevelaer
Hüls விளையாட்டுமைதானம்/உள்நீச்சல்குளத்தில் அண்மையாக வாகனத்தை தரிப்பிட விரும்புபவர்கள் வழிசெல்லும் முகவரி: Sportzentrum Hüls, 47623 Kevelaer
நீங்கள் கேவலாரை அண்மித்ததும் திருவிழாப்பணியாளர்களதும், நகர காவலர்களினதும் உதவியுடன் உங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு ஆலயத்தைச் சென்றடையலாம்.
அதேபோல், திருவிழா நிறைவு பெற்றதும் நகர உட்பாதைகளைத் தவிர்த்து, வந்த பாதையின் வழியே வீடு திரும்பலாம்.
குறிப்பாக இப்பாதை மாற்றத்தினால் ஏற்படும் நேர தாமதத்தைத் தவிர்க்க உங்கள் பயணத்தை முன்கூட்டியே தொடங்குங்கள்.
முதல்நன்மை சிறார்களை கேவலார் யாத்திரைப் பவனியில் பங்கேற்க அழைப்பு
கேவலார் திருவிழா வழிபாட்டு ஒழுங்குகள்
இம்முறை இரண்டு திருப்பலிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.முதலாவது திருப்பலி காலை 8:15 க்கு செபமாலையுடன் ஆரம்பமாகி 9.00 மணிக்கு திருப்பலி நடைபெறும்.
இரண்டாவது திருவிழாதிருப்பலி காலை 10:15 மணிக்கு செபமாலை ஆரம்பமாகும். 10:45 மணிக்கு மரியன்னைப் புகழ்ச்சிப் பாடல் இடம் பெறும்.
10:00 மணிக்கு முதன் நன்மைச் சிறார்கள், பீடப்பணியாளர் மற்றும் தொடர்பாளர் அனைவரும் மெழுகுதிரி ஆலயத்தின் முன் கூட வேண்டும். 10:00 மணிக்கு பவனிக்கான ஒழுங்குகள் நடைபெறும். 10:20 மணிக்கு பவனி ஆரம்பித்து திருப்பலி நடைபெறும் கண்ணாடி மண்டபத்தை அடைந்து, வரவேற்பு நிகழ்வுகளைத் தொடர்ந்து 11:15 மணிக்குத் திருவிழாத் திருப்பலி ஆரம்பமாகும்.
இரு வாசகங்களுக்கும் மன்றாட்டுகளுக்கும் பொறுப்பான பணித்தளங்களும் பிறநாட்டுப் பணியகங்களும் 10:00 மணிக்கு முன்பாகவே திருவழிபாட்டுப் பொறுப்பாளரிடம் தங்கள் வரவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் சமுகம் அளிக்காதவிடத்து பிரதியாளரைத் தேடுவதற்கு அது ஏதுவாக அமையும்.
கேவலார் வெள்ளி மாலைப் பேரணிகள் 12.08.2022
அன்றைய வழிபாடுகள் திருவிழாவின் முதற்படியாக அமைவதனால், அதனைச் சிறப்பாகத் தொடங்குவதற்கான ஒழுங்குகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதன்படி 18:00 மணிக்குச் செபமாலைப் பேரணி ஆரம்பமாகும். பேரணியில் பணித்தளங்களை அடையாளப்படுத்தும் 40 கொடிகள் தாங்கியவர்கள் இரு மருங்கிலும் வர, நடுவில் அன்னை மரியாவின் திருவுருவை தாங்கியவர்களும், இறைமக்களும் பேரணியாகச் செல்வர்.நற்கருணை வழிபாடு 19:00 மணி ஆரம்பமாகும், 20:15 மணிக்கு மெழுகுதிரிப் பவனி வழிபாடு நடக்கும் இடத்தில் தொடங்கி காட்சி கொடுத்த இடம் வரை, அங்கு இறுதிச் செபமும் ஆசீர்வாதமும் நடைபெறும்.
தொடர்பாளர்கள் மேய்ப்புப்பணிப் பேரவை உறுப்பினர்க்கான அறிவித்தல்
தொடர்பாளர்கள், உதவித் தொடர்பாளர்கள், மேய்ப்புப்பணிப் பேரவை உறுப்பினர்கள் கேவலார்த் திருப்பணிக்காக இரு நாட்களும் நேர காலத்துடன் வருகை தரவும்.தொடர்பாளர்களும், உ. தொடர் பாளர்களும், மேய்ப்புப்பணிப் பேரவை உறுப்பினர்களும்,திருப்பலிப்பவனியில் பங்கு பற்றுபவர்களும் கட்டாயம் தமிழ் பண்பாட்டு முறைப்படி பெண்கள் சேலையும், ஆண்கள் வேட்டியும் அணிந்து வருமாறு கேட்டுக்கொள்கிறேம்.
மாலை வழிபாட்டின் பின் துப்புரவுப் பணிகளில் அனைவரும் பங்கு கொள்ளுங்கள்.
நேரலையில் கேவலார் திருயாத்திரை youtube links 09ம் திகதி முதல் 10ம் திகதி வரை
Live YouTube Links from 05.08.2024
https://youtu.be--09.08.2024 மாலை நற்கருணை வழிபாடும் மரியன்னை வணக்கமும்
https://youtu.be--10.08.2024 09.00 மணி திருப்பலி
https://youtu.be--10.08.2024 10.45 மணி திருவிழாத் திருப்பலி
https://youtu.be--10.08.2024 15.00 மணி நற்கருணை வழிபாடும் ஆசீரும்
கேவலாரில் அன்ன தான நிகழ்வுகளை தவிர்க்க வேண்டுகின்றோம்
பல்வேறு நல்ல நோக்கங்களுக்காக எமது கலாச்சாரத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் எம்மோடு பின்னிப்பிணைந்துள்ளன. ஆயினும் கேவலார் அன்னையின் திருவிழாவில் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இவ் அன்னதான நிகழ்வுகளில் செலவு செய்யும் பணத்தினை தாயகத்தில் வறுமையில் வாடும் எம் உறவுகளுக்கு பொது நிறுவனங்களுக்கூடாகவோ, குருக்களின் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்பி உங்களுடைய நோக்கத்தினை நிறைவு செய்ய வேண்டுகின்றோம். மேலும் கேவலார் பதி முழுவதும் உணவு பொதிகளாலும், மற்றும் இதர குப்பைகளாலும் மாசடைகின்றது. கேவலார் பதியினை திருவிழாவின் பின்னர் சுத்தம் செய்வது மிகவும் கடினமாக உள்ளது. எனவே கேவலார் திருப்பதியில் அன்ன தான நிகழ்வுகளை தவிர்த்து எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.கேவலார் திருத்தலத்தில் கவனிக்கப் பட வேண்டிய விடயங்கள்
இவ்வாண்டும் எமது மாநிலம் வழங்கியுள்ள உத்தரவுகளின்படி உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஒழுங்கு விதிகளையும் கவனத்துடன் பணியகம் மேற்கொள்ள வேண்டுமென பணிக்கப்பட்டுளதுடன். இப்புனிதப் பயணத்தில் பங்கேற்கும் மக்கள் அனைவரும் பணியகத்தினாலும் நகர நிர்வாகத்தினாலும் விடுவிக்கப்படும் ஒழுங்கு விதிகளை அக்கறையுடன் பின் பற்றி, புனிதப் பயணம் சிறப்பாகவும் அமைதியாகவும் இடம் பெற ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டப் படுகின்றீர்கள். கேவலார் புனித பயணத்தின் போது சிறப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒழுங்குகள்:
1. புனிதத்தலத்திற்கு சொந்த வாகனங்ககளில் வருவோர் கேவலார் நகர நிர்வாகத்தினால் நீச்சல் தடாகத்திற்கு அணமையாக இலவசமாக ஒழுங்கு
செய்யபட்டுள்ள வாகனதத் தரிப்பிடத்தில் தமது வாகனங்களை நிறுத்துமாறு கேடகப்படுகினறனர்.
இவ் வாகனத் தரிப்பிடம் சிறப்பாக தமிழ் புனிதப் பயணிகளுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்பதுடன் இவ்விடத்தில் ஒரு கழிவறையும்
பணியகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இத் தரிப்பிடத்திற்குச் செல்வதற்கான வழிகளை கேவலாருக்கு நுழையும் வீதிகளில் தமிழில் கண்டு
கொள்ளலாம்.
2. கடந்த காலங்களில் பலர் பிழையான இடங்களில் தமது வாகனங்ககளை நிறுத்திதியதால் ஏற்பட்ட பிரச்சினைகளைஸ் சுட்டிக் காட்டி, இனிமேல்
இப்படிப் பிழையாக நிறுத்தப்படும் வாகனங்கள் தூக்கிச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வாசலல்கள் மற்றும் வைத்திய உதவி
வாகனங்கள் வரும் வழிகளை மறைக்காமல் அனுமதிக்கப் பட்டுள்ள இடங்ககளில் மட்டுமே வாகனங்களை நிறுத்துமாறு
கேவலார் நகர நிர்வாகம் கண்டிபாகக் கேட்டுள்ளது.
3. குப்பைகளைப் போடுவதற்குரிய கொள்கலன்களைப் பல இருந்தும் பலர் தமது கழிவுகளை தாம் இருந்த இடங்களிலேயே
விட்டுச் செல்வதைத் தவிர்த்து, அனைத்துக் குப்பைகளையும் அதற்குரிய கொள்கலன்களில் போடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
4. வியாபாரக் கடைகள் மாலை 18.00 மணிக்கு கண்டிப்பாக விற்பனையை நிறுத்த வேண்டும் எனவும், இதற்கு ஏதுவாக 17.30 மணிக்கு
கடை வாசலுக்குள் நுழைவோர் தடுக்கப்பட வேண்டும் எனவும் கேவலார் நகர பாதுகாப்புப் பிரிவாலல் கேட்கப்பட்டுள்ளது. எனவே இதை விற்பனையாளர்களும் பொதுமக்களும் கவனத்திற் கொள்ளவும்.
5. ஆலய வளாகங்களுக்குள் நுழைவோர் தயவுசெய்து அமைதியைக் கடைப் பிடிக்கவும். செபித்துக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு தயவு செய்து இடைஞ்சல் செய்யாதீர்கள். இது குறித்து பணியக உதவியாளர்கள் விடுவிக்கும் வேண்டுகோள்களுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும்.
6. உங்கள் முகவரி மற்றும், திருபபலி பதிவு செய்தல், தொடுவானம் சாந்தா அல்லது கேவலார் திருத்தலம் பற்றிய விளக்கங்கள் மற்றும் பணியக விடயமான அனைத்துத் தேவைகளுக்கும் பணியகத்தால் அமைக்கப்பட்டுள்ள தகவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளவும்.