கேவலார் தமிழர் யாத்திரைக்கு வருபவர்களுக்கான முக்கிய அறிவித்த்தல்
இவ்வாண்டு கேவலார் தமிழர் யாத்திரைக்கு வருபவர்களுக்கான முக்கிய அறிவித்தல் ஒன்று தரப்பட்டுள்ளது.
அதில் கேவலாரை அண்டிய பகுதியில் பாதை சீர்திருத்தப்பணிகள் நடை பெறுவதன் காரணமாக ஒரு சில மாற்றுப் பாதைகளைப் பாவிப்பதற்கான திட்டத்தை வகுத்துள்ளார்கள்.
அதன் படி, நெதர்லாந்தில் இருந்து வரும் பயணிகள் வழமை போலவே, A57 நெடுஞ்சாலை வழியாக வந்து Goch/Weeze வெளிச் செல்லும் பாதை வழியே கேவலாரை வந்து அடையலாம்.
ஆனால், A57 நெடுஞ்சாலை Köln/Krefeld இருந்து வரும் பயணிகள் வழமை போலவே Sonbeck (5) வெளிச் செல்லும் பாதை இவ் ஆண்டு சில நேரங்களில் மூடப்பட்டு இருந்தால்,
நீங்கள் அடுத்த நெடுஞ்சாலை Uedem (4) வழியாக வெளியேறி,
இடதுபுறம் Schloß-Wissener-Straßeக்கு திரும்பவும்,
அங்கிருந்து B9 சாலை வழியாக Geldern/Kevelaer திசையில் பயணித்து கேவலாரை வந்து அடையலாம்.
அடுத்து, காவல் நிலையத்துக்கு முன்னால் உள்ள வாகன தரிப்பிடம் Peter-Plümpe-Platz, 47623 Kevelaer தற்போதைய கட்டுமான பணி காரணமாக முழுமையாக மூடப்பட்டுள்ளது
எனவே, புனிதத்தலத்திற்கு வாகனங்ககளில் வருவோர் கேவலார் நகர நிர்வாகத்தினால் எமக்கு தரப்பட்டுள்ள அறிவுறுத்தலின்படி நீங்கள் உங்கள் வாகனங்களை இந்த இடங்களில் இலவசமாக தரிப்பிடம் செய்யலாம்.
Europaplatz இல் வாகனத்தை தரிப்பிட விரும்புபவர்கள் வழிசெல்லும் முகவரி: Am Europapl. 47623 Kevelaer
Hüls விளையாட்டுமைதானம்/உள்நீச்சல்குளத்தில் அண்மையாக வாகனத்தை தரிப்பிட விரும்புபவர்கள் வழிசெல்லும் முகவரி: Sportzentrum Hüls, 47623 Kevelaer
நீங்கள் கேவலாரை அண்மித்ததும் திருவிழாப் பணியாளர்களதும், நகர காவலர்களினதும் உதவியுடன வழமையான நீச்சல் தடாகத்த்திற்கு அண்மையிலுள்ள
வாகனத் தரிப்ப்பிடத்த்தில் உங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு ஆலயத்தைச் சென்றடையலாம்.
அதேபோல், திருவிழா நிறைவு பெற்றதும் நகர உட்பாதைகளைத் தவிர்த்து, வந்த பாதையின் வழியே வீடு திரும்பலாம்.
குறிப்பாக இப்பாதை மாற்றத்தினால் ஏற்படும் நேர தாமதத்தைத் தவிர்க்க உங்கள் பயணத்தை முன்கூட்டியே தொடங்குங்கள். இத்தகவலை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் தெரிவியுங்கள். இத்தகவலை எமக்குத் தந்துதவிய கேவலார் நகரசபையினருக்கும், காவல்துறையினருக்கும் எமது நன்றிகள்.
|