யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் “மெய்வல்லுனர் போட்டியும் கலாச்சாரவிழாவும்” -29.06.2024


இறை இயேசுவுக்குள் பிரியமானவர்களே!
இவ் வருடம் எமது பணியகத்தின் இன்னுமோர் புதிய முயற்சியாக எமது பணித்தள மக்களிடையே ஒரு மெய்வல்லுனர் போட்டியை நடாத்த எமது இயக்குனருடன் இணைந்து அருட்பணிப்பேரவை உறுப்பினர்களால் திட்டமிடப்பட்டு அதற்கான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். இவ் மெய்வல்லுனர் போட்டியிலும் கலாச்சாரவிழாவிலும் பங்கு பெற யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் உங்களை அன்புடன் அழைக்கிறது.

போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் போட்டியாளர்கள் பற்றிய முழுமையான விபரங்களை பணித்தளங்களின் தொடர்பாளர்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பதிவு செய்து ஒருங்கமைப்புக்குழுவினரிடம் எதிர்வரும் 20.06.2024 சமர்ப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

உங்கள் பணித்தள நகரில் வசிக்கும் நண்பர்கள் உறவினர்கள் யாராயினும் இவ்விழாவிலும் போட்டிகளிலும் பார்வையாளராக மட்டுமின்றி போட்டியாளராகவும் பங்கு பெற முடியும் என்பதனையும் மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.

மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபெற விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்களையும் போட்டி விதிமுறை தகவல்களையும் இணைத்துள்ளோம் அதை நீங்கள்பதிவிறக்கம் செய்யலாம்.


இடம் SG Castrop-Rauxel e.V.,
Bahnhofstraße 132A,
44575 Castrop-Rauxel
காலம் 29-06-2024 சனிக்கிழமை
நேரம் 9:00 மணி முதல் 18:00 மணிவரைதகவல் & விண்ணப்பம்

pdf பதிவிறக்க இணைப்பு

தகவல் PDF

விண்ணப்பம் PDFஇவ் மெய்வல்லுனர் போட்டியும் கலாச்சார விழாவிலும் பங்கு பெற யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் உங்களை அன்புடன் அழைக்கிறது.


"உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" ( இயேசு மாற்கு16:15)