யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் தூய ஆவி திருவிழிப்பு ஆராதனைப்பெருவிழா - 2023


ஆண்டவர் யேசு விண்ணகம் செல்வதற்கு முன் தன்னுடைய சீடர்களுக்கு உங்களுக்கு ஒரு துணையாளரை அனுப்புவேன் என்று வாக்களித்தபடி சீடர்கள் வீட்டில் கூடியிருந்தபோது பெரும் காற்றும் இரைச்சலோடும் நெருப்பு போன்ற பிளவுற்ற நாவுகள் அவர்கள் மேல் வந்து அமர்ந்ததை சீடர்கள் கண்டார்கள்.அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர்

அதே பெந்தகோஸ்து நாளன்று நாமும் ஒன்றிணைந்து தூய ஆவியானவரை வரவேற்று அவருடைய அபிசேகத்தை பெறுவதற்காக யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் 27-05-2023 அன்று எசன் நகரில் முழு இரவு ஆராதனைப்பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.
இவ் முழு இரவு ஆராதனைப்பெருவிழா மாலை 19.00 மணி முதல் மறு நாள் காலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இடம் St.Bonifatius Halle,
Moltke Str-160,
45138 Essen
காலம் 27-05-2023 சனிக்கிழமை இரவு
நேரம் இரவு 19:00மணிமுதல் - காலை 06:00மணிவரை



திருவிழிப்பு ஆராதனைப் பாடல்கள்

mp3 & pdf பதிவிறக்க இணைப்பு

பாடல்கள் PDF வடிவம்



இவ் வழிபாட்டில் கலந்து ஆண்டவர் இயேசு வழங்கும் தூய ஆவியின் அபிஷேகத்தை பெற அன்புடன் அழைக்கின்றோம்.


அவர்கள் பரவசப்பேச்சுப் பேசிக் கடவுளைப் போற்றிப் பெருமைப்படுத்தியதைக் கண்டார்கள்.(திருத்தூதர் பணிகள் 10:46)