பணியகத்தின் ஆரம்பகால பணியாளர் திரு.கி.பரிமளராஜா அவர்கள் இறைபதம் அடைந்தார்.



அன்புக்குரியவர்களே, எமது யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகத்தின் Meschede பணித்தள பங்குமகனும் மற்றும் நமது ஆன்மீக பணியத்தினால் வருடாந்தம் நடாத்தப்டும் கோவலர் திருயாத்திரைகளை சிறப்புற செய்வதற்கு நீண்டகாலமாக எமக்கு உறுதுணையாகவும் மேலும் திருயாத்திரைகளின் போது விற்பனைநிலையங்களுக்கு பொறுப்பு வகித்தவருமான திரு.கி.பரிமளராஜா அவர்கள் 13.03.2022 இறைவனடி சேர்ந்துள்ளார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இவரின் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர் அனைவருக்கும் யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு திருகி. பரிமளராஜா அவர்களின் ஆன்மா இறை சந்நிதியில் நித்தியத்திற்கும் நிறைவான அமைதியுடன் இறைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

இறுதிச்சடங்கு  23-03-2022
 நாள் புதன்கிழமை
நேரம் மாலை 3:30PM
இடம் Friedhof Eslohe
Zum Scharfenstein 9
59889 Eslohe



"ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார், அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். "
(திருப்பாடல்கள் 34:22)