பணியகத்தின் மூத்த நீண்ட நாள் பணியாளர் அன்ரனி அமிர்தநாதர் அவர்கள் இறைபதம் அடைந்தார்.
அன்புக்குரியவர்களே, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், யேர்மன் - ஒஸ்னாபுறூக் இடத்தை வாழிடமாகவும் கொண்ட, எமது யேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் ஒஸ்னாபுறூக் (Osnabrück) பங்கைச் சேர்ந்த,
முன்னாள் தொடர்பாளரும், அருட்தந்தை இன்பநாதன் அடிகளார் அவர்களின் அன்புத் தந்தையும், இப்போதைய உதவித் தொடர்பாளருமாகிய அமலா டில்சாந் அவர்களின் அன்புத் தந்தையுமாகிய அன்ரனி அமிர்தநாதர் அவர்கள்,
இன்று காலை 3 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை மிகவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவர் பாடகர் குழாம் (Keyboard player) ஆக பணியாற்றியவர். 30 ஆண்டுகளாக தன்னை இறை பணியில் இணைத்து அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்.
ஆரம்ப காலத்தில் தொடுவானப் பத்திரிகையில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் குடும்பத்திற்கு யேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆன்மா இறைவனின்
பாதத்தில் அமைதியுடன் இளைப்பாற இறைவனை வேண்டுகிறோம்.
"நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கெண்டேன்." (2 திமொத்தேயு 4:7)
|