நேரலையில் தூய ஆவி திருவிழிப்புஆராதனைப்பெருவிழா - 2021![]() ஆண்டவர் யேசு விண்ணகம் செல்வதற்கு முன் தன்னுடைய சீடர்களுக்கு உங்களுக்கு ஒரு துணையாளரை அனுப்புவேன் என்று வாக்களித்தபடி, சீடர்கள் கூடியிருந்து செபித்த போது பெரும் காற்றும் இரைச்சலோடும் நெருப்பு போன்ற பிளவுற்ற நாவுகள் அவர்கள் மேல் வந்து அமர்ந்ததை சீடர்கள் கண்டார்கள்.அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர் அதே பெந்தகோஸ்து நாளன்று நாமும் ஒன்றிணைந்து தூய ஆவியானவரை வரவேற்று அவருடைய அபிசேகத்தை பெறுவதற்காக யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் 22-05-2021(சனிக்கிழமை) அன்று முழு இரவு நேரலை ஆராதனைப்பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.இவ் முழு இரவு ஆராதனைப்பெருவிழா இரவு 19.00 மணி முதல் மறு நாள் காலை 6.30 மணி வரை நடைபெறவுள்ளது. அதிகாலை 05:30 மணிக்கு ஞாயிற்றுக்கிழமைக்குரிய திருப்பலியும் நேரலையில் இடம்பெறும்.
நேரலையில் நமது பணியகத்தின், YouTube மற்றும் இணையத்தளம் ஆகியவற்றில் இவ்வழிபாடு ஒளிபரப்பாகும். செபவழிபாடுகள், நற்செய்திபகிர்வுகள், பாடல்களை பாடுவோர் மற்றும் ஆராதனைகளை நெறிப்படுத்துவோர் நேரலையில் video confrence call மூலம்
இணைத்துக் கொள்ளப்படுவர். உங்கள் வீடுகளில் இருந்தபடியே இந்த முழுஇரவு ஆராதனை வழிபாட்டில் கலந்து ஆண்டவர் இயேசுவின் ஆசீரையும், தூய ஆவியின் அபிசேகத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டுகின்றோம்.
திருவிழிப்பு ஆராதனைப் பாடல்கள்
இவ் வழிபாட்டில் கலந்து ஆண்டவர் இயேசு வழங்கும் தூய ஆவியின் அபிஷேகத்தை பெற அன்புடன் அழைக்கின்றோம். நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன் உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர் உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள.(யோவேல் 2:28) ![]() |