நமது பணியகத்தின் மூத்த பணியாளர் திரு. ஸ்ரனிஸ்லாஸ் யோனாஸ் அவர்கள் காலமானார்நமது பணியகத்தின் மூத்த பணியாளரும் பணியக அருட்பணிப்பேரவையின் உறுப்பினருமான திரு.ஸ்ரனிஸ்லாஸ் யோனாஸ் அவர்கள் 31-05-2021 அன்று தனது 50 ஆம் வயதில் விண்ணக வாழ்வுக்கு ஆண்டவர் இயேசுவினால் அழைக்கப்பட்டு விட்டார், என்று செய்தியை உங்களுக்கு மிகுந்த வேதனையுடன் அறியத்தருகின்றோம். திரு.ஸ்ரனிஸ்லாஸ் யோனாஸ் அவர்கள் பிராங்க்போர்ட் பணித்தளத்திலும் பணியகத்தின் பல பணிகளில் தன்னை இணைத்து நீண்டகாலமாக ஆண்டவர் இயேசுவின் நற்செய்திப்பணியில் பணியாற்றியவரார். குறிப்பாக நமது பணியகத்தினால் நடாத்தப்பட்டு வரும் வானொலியில் நாளந்தம் இன்றைய புனிதர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் ஜெயந்தி யோனாஸ் அவர்களின் அன்பு கணவரும், யோனார்த்தன் ,யோகன்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் உடல் 07-06-2021 (திங்கட்கிழமை)அன்று 10:00-11:00 மணிநேரத்தில் Sancta Familia Ginnheim, Am Hochwehr 11, 60431 Frankfurt am Main என்ற முகவரியில் பார்வைக்கு வைக்கபட்டு, அதே முகவரியில் 11:00-12:00 இறுதிதிருப்பலி நிறைவேற்றப்படும்.

திரு.ஸ்ரனிஸ்லாஸ் யோனாஸ் அவர்கள் ஆண்டவர் இயேசுவின் பிரசன்னத்தில் நித்தியகாலத்திற்கும் வாழ்ந்திருக்க நாம் செபிக்கின்றோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்கு யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் தனது ஆழ்ந்த மனவருத்தத்தை செபங்களுடன் தெரிவிக்கின்றது.