நேரலையில் கேவலார் திருத்தல திருயாத்திரை

08-08-2020

தற்போது நிலவும் அசாதாரான நிலைமை காரணமாக கேவலார் திருயாத்திரை வழமைபோல் இடம் பெறாது. எனினும் எல்லா மக்களும் விடுகளில் இருந்த படி திருத்தல திருயாத்திரையில் பங்கு பெறுவதற்கான ஒழுங்குகள் பணியகத்தினால் மேற்கொள்ள பட்டுள்ளது. இதன் பிரகாரம் வழிபாடுகளை நெறிப்படுத்தும் மட்டுப்படுத்தப்பட்ட, ஏற்கனவே அனுமதிக்கபட்டுள்ள ஒரு சிலருடன் திருவிழா வழிபாடுகள் இம்முறை நடைபெறும். எனினும் நீங்கள் அனைவரும் வீடுகளில் இருந்த படி முழுமையாக வழிபாடுகளில் பங்கெடுத்து, ஆண்டவர் இயேசுவின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுமாறு வேண்ட்டப்படுகின்றீர்கள்.

இத் திருவிழாவானது 08-08-2020 சனிக்கிழமை காலை 10:00 மணிமுதல் மதியம் 14:00 மணி வரை இடம்பெறும். வழமைபோல ஆயத்த செப வழிபாடுகளுடன் திரு யாத்திரை ஆரம்பமாகும். வழமை போல திருவிழாத்திருப்பலி காலை 10:15 மணிக்கு இடம்பெறும். அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் முடிவில் மரியன்னையின் திருச்சுரூபவப்பவணியும் இடம் பெறும்.

திருவிழா வாழிபாடுகள் நமது பணியக You-Tube இல் நேரலையாக ஒளிபரப்பாகும்.


அதிகமானவர்கள் ஒரே இடத்தில் கூடும் பட்சத்தில் வழிபாடுகளுக்கான அனுமதிகள் மறுக்கப்படும். என்வே அன்றைய தினம் நேரடியாக திருத்தலத்துக்கு வருகை தரவேண்டாம் என அன்புடன் வேண்டுகின்றோம்.