துன்புறும் இலங்கை தேசத்து மக்களுக்காக உபவாசத் தியானம்
28-04-2019


கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாடும் நேரத்தில் இலங்கையில் மிகப் பெரிய துன்பச் சம்பங்கள் நடந்தேறியுள்ளன. அங்கு நடந்த தொடர் குண்டுவெடிப்பு களினால் பல உயிர்கள் காவு எடுக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கும் மற்றும் வைத்தியசாலையில் பல காயங்களுடன் பரிதவிக்கும் மக்களுக்கும், அவர்களின் குடும்ப உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் நீங்களும் உங்கள் நாளாந்த செபங்களில் அவர்களுக்காக மன்றாடும் படியும் வேண்டிக் கொள்கின்றோம்.

இலங்கையில் குண்டுவெடிப்புச்சம்பவங்களினால் இறந்தவர்களுக்காகவும், அவர்களை இழந்து தவிக்கும் குடும்ப உறவுகளுக்காகவும் மற்றும் பலவித காயங்களினால் வைத்தியசாலைகளில் பரிதவிப்பவர்களுக்காகவும், உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவர்களுக்காகவும், இலங்கையில் தற்போது தோன்றியுள்ள அசாதாரண நிலைமை மாறி அமைதி திரும்ப வேண்டியும் டோட்முண்ட் நகரில் உள்ள Dreifaltigkeit Kirche, Flurstr-10, 44145 Dortmund இல் 28.4.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை உபவாசதியான வழிபாடும், நற்கருணை வழிபாடும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும் ஒப்புக் கொடுப்பதற்காக எமது ஆன்மீக பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இயலுமானவரை நீங்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு அவர்களுக்காக மன்றாடும் படி கேட்டுக் கொள்கின்றோம்.

இடம் திகதி நேரம் முகவரி
Dortmund 28.4.2019
(Sonntag)
11.00-17.00 Dreifaltigkeit Kirche,
Flurstr-10,
44145 Dortmund