நமது பணியக இயக்குனர் அருட்பணி.நிரூபண் அவர்களின் தந்தை சிங்கராயர் தார்சீசியஸ் அவர்கள் இறைபதம் அடைந்தார்.
யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் இயக்குனர் அருட்பணி.நிரூபண் அவர்களின் தந்தை சிங்கராயர் தார்சீசியஸ் அவர்கள், 11.10.2019 வெள்ளிக் கிழமை அன்று காலமானார்.

இவர் காலம் சென்றவர்களான ஜோன் சிங்கராயர், மரிய சலோமை தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான வைரவப்பிள்ளை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், லீலாவதியின் அன்புக் கணவரும், சொபியாவதனி (ஓய்வு பெற்ற ஆசிரியை), ஆனந் (நோர்வே), நிஷாந்தினி, விமல் (VVMart and Construction உரிமையாளர்), தயானந் (பிரான்ஸ்), அருட்தந்தை நிரூபன் (தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம், யேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜோர்ஜ் (சுவிஸ்), ஜேன் பாமினி (நோர்வே), ஜொணி எல்மோ (பிரான்ஸ்), ஜெயந்தினி, லக்ஷினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், டொனால்ட் றீகன் - பிரஷாந்தி (சுண்டிக்குளி மகளிர் கல்லூரி ஆசிரியை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை), கனிஷியோ றொஷேல் (மொறட்டுவ கல்கலைக் கழக நான்காம் ஆண்டு மாணவி), ஏஞ்சலா (பிரான்ஸ்), நிரஞ்சலா (பிரான்ஸ்), கிஷான் (புனித பத்திரியார் கல்லூரி மாணவன்), கவின் (நோர்வே), சஞ்ஜெய் (பிரான்ஸ்), பிரவின் (நோர்வே), அஜய் (பிரான்ஸ்), மெல்வின் (நோர்வே) ஆகியோரின் அன்புப் பேரனும், திரேசம்மா, லூத்தம்மா, காலம் சென்ற யூலியானா, கீதபொன்கலன், மேரி ஜோசப் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலம் சென்ற அல்வினஸ், கிறிஸ்ரி மற்றும் மரியநாயகம், மரிய டீனா காமலின், ஞானமலர், பத்மராணி, சண்முகராஜா, சிவானந்தராஜா, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் உடல், 14.10.2019 திங்கட்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இல்லத்தில் நடைபெறும் இறுதி நிகழ்வுகளைத் தொடர்ந்து, 3:30 மணிக்குத் தூய யாகப்பர் ஆலயத்தில் (குருநகர்) திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்ட பின்னர், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்

அன்னாரின் பிரிவினால் துயருறும் அருட்பணி.நிரூபண் அடிகளாரின் குடும்பத்தினருக்கு, யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம், தனது ஆழ்ந்த மனவருத்தத்தை செபங்களுடன் தெரிவிக்கின்றது.

முகவரி: 171, வேம்படி வீதி, யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு : திரு. விவியன் (விமல்) - 0094775552142, அருட்பணி. நிரூபன் - 0094776099091