நமது பணியகத்தின் மூத்த பணியாளர் திருமதி.அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின் அவர்கள் காலமானார்நமது பணியகத்தின் மூத்த பணியாளரான திருமதி.அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின் அவர்கள் 18-06-2019 அன்று தனது 53 ஆம் வயதில் காலமானார் என்ற செய்தியை மிகுந்த வேதனையுடன் அறியத்தருகின்றோம். திருமதி.அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின் அவர்கள் நமது பணியகத்தின் பல பணிகளில் தன்னை இணைத்து நீண்டகாலமாக ஆண்டவர் இயேசுவின் நற்செய்திப்பணியில் பணியாற்றியவரார். இவரே நமது தொடுவானம் பத்திரிகையில் விவிலிய குறுக்கெழுத்துப் போட்டி தொடங்கிய காலம் முதல் இன்றுவரை எல்லா விவிலிய குறுக்கெழுத்துப் போட்டிகளையும் தயாரித்து வழங்கியராவார்.

மேலும் இவர் தொடுவானம் பத்திரிகையின் துணையாசிரியரும் Gelsenkirchen (Bochum) பணித்தளத்தின் முன்னாள் தொடர்பாளருமான திரு.மைக்கல் அஞ்சலோ அவர்களின் அன்பு மனைவியும். பானு, அருண் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் 22-06-2019 (சனிக்கிழமை)அன்று 10:00-13:00 மணிநேரத்தில் Ückendorfer Str. 88, 45886 Gelsenkirchen, Germany என்ற முகவரியில் உள்ள Südfriedhof Gelsenkirchen இல் நடைபெறும்.

திருமதி.அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின் அவர்கள் ஆண்டவர் இயேசுவின் பிரசன்னத்தில் நித்தியகாலத்திற்கும் வாழ்ந்திருக்க நாம் செபிக்கின்றோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது கணவர், பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்கு யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் தனது ஆழ்ந்த மனவருத்தத்தை செபங்களுடன் தெரிவிக்கின்றது.