வூப்பெற்றால் பணித்தள சந்திப்பு




வூப்பெற்றால் தூய ஆவியானவர் பணித்தள மக்களை கேளின் மறைமாவட்ட பிறமொழிகளுக்கான குருமுதல்வர்(Bischofsvicar)Monsignore Dr.Markus Hoffmann மற்றும் பிற மொழிகளுக்கான பேச்சாளர் Herr.Markus-J.Heeg சந்தித்து கலந்துரையாடினார்கள்.

இந்நிகழ்வானது 04-03-2018 ஞாயிறு அன்று எமது கலாச்சார முறைப்படி பிரதம விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு அதனைத்தொடர்ந்து எமது பணியக இயக்குனருடன் இணைந்த கூட்டுத்திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. திருப்பலியின் நிறைவில் பிரதம விருந்தினர்கள் பணித்தள மக்களை ஆலய மண்டபத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.இந்த கலந்துரையாடலின்போது பணித்தள மக்களின் பல வகையான கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. பிற மொழிகளுக்கான குருமுதல்வர் (Bischofsvicar)Monsignore Dr.Markus Hoffmann அவர்கள் பணித்தள மக்களுக்கு அறிவுரை வழங்கியபோது எமது தமிழ் கத்தோலிக்க மக்கள் தாய் நாட்டில் வாழ்ந்தபோது குடும்பமாக நீண்ட நேரம் இணைந்து செபித்தது போல் இந்த புலம் பெயர்ந்து வாழும் நாட்டிலும் குடும்பமாக இணைந்து செபிக்க வேண்டுமென்றும் விசேட விதமாக தந்தையர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் வண்ணம் குடும்பத்தோடு இணைந்து செபிக்கவேண்டுமென்று அறிவுரை வழங்கினார்.மேலும் இவர் உரையாற்றுகையில் எமது பணிய இயக்குனரின் சிறந்த பணிகளையும் அவர் இந்த குறுகிய காலத்திற்குள் மக்களை ஆன்மீக வாழ்வில் சிறந்த முறையில் வழி நடத்தி வருவதை குறித்தும் புகழ்ந்து பேசினார்.பணித்தள மக்களோடான கலந்துரையாடலின் பின்பு அருட்பணி சபையினருடனான கருத்தமர்வு இடம் பெற்றது இந்த கருத்தமர்வில் அருட்பணி சபை உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பிரதம விருந்தினர்களால் பதில் அளிக்கப்பட்டது.இக்கருத்தமர்வின் போது எமது ஆன்மீக பணியகத்தின் ஊடகங்களான இணையத்தளம் வானொலி தொடுவானம் பத்திரிகைகள் குறித்து சிறிது விளக்கம் அளிக்கப்பட்டது.எமது இந்த ஊடகங்களை குறித்து பிரதம விருந்தினர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இறுதியில் பிரதம விருந்தினர்களுக்கு மதிய விருந்துபசாரம் வழங்கப்பட்டு மிகவும் மகிழ்ச்சியான முறையில் வழி அனுப்பி வைக்கப்பட்டனர். (தொகுப்பு: ராஜ்குமார் சொய்சா, பணியக ஊடகப்பிரிவு )



வூப்பெற்றால் பணித்தள சந்திப்பு