எமது இணையத்தள குழுவில் பணிபுரியும் திருமதி.ஜஸ்‌ரீனா வேதநாயகம் அவர்களின் தாயார் திருமதி.கிறிஸ்ரினா றொசற்றா யோசப் அவர்கள் இறைபதம் அடைந்தார்.யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் இணையத்தள குழுவில் இணைந்து பணியாற்றும் திருமதி.ஜஸ்‌ரீனா வேதநாயகம் அவர்களின் தாயார் திருமதி.கிறிஸ்ரினா றொசற்றா யோசப் அவர்கள் 10-05-2018 அன்று இலங்கை, யாழ்ப்பாணத்தில் இறைபதம் அடைந்தார். அன்னார் எமது இணையத்தள குழுவில் பணியாற்றும் திரு.கபிரேயல் வேதநாயகம் அவர்களின் மாமியாரும் ஆவார். அன்னாரின் பூத உடல் 11-13 St. James Road , Gurunagar , Jaffna என்ற முகவரியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் இறுதித் திருப்பலி 14-05-2018 அன்று யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்று அருகில் உள்ள கல்லறைத்தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும். திரு.கபிரேயல் வேதநாயகம் அவர்களும் திருமதி.ஜஸ்‌ரீனா வேதநாயகம் அவர்களும் எமது இணையவழி நற்செய்திப்பணியில் நீண்ட காலமாக இணைந்து அனுதினமும் நற்செய்திப்பணியில் தம்மை அர்ப்பணித்து பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமது தாயாரை இழந்திருக்கும் திருமதி.ஜஸ்‌ரீனா வேதநாயகம் அவர்களுக்கும் தனது மாமியாரை இழந்திருக்கும் திரு.கபிரேயல் வேதநாயகம் அவர்களுக்கும் மற்றும் அன்னாரின் குடும்பத்தினர்களுக்கும் யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் தனது அனுதாபங்களை செபங்களுடன் தெரிவித்து கொள்கின்றது. திருமதி.கிறிஸ்ரினா றொசற்றா யோசப் அவர்கள் ஆண்டவர் இயேசுவின் பிரசன்னத்தில் நித்திய பேரின்ப வீட்டில் இளைப்பாறுவாராக.விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்; ""இது முதல் ஆண்டவரோடு இணைந்த நிலையில் இறப்போர் பேறுபெற்றோர்" என எழுது" என்று அது ஒலித்தது. அதற்குத் தூய ஆவியார், "ஆம், அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள்; ஏனெனில் அவர்களின் செயல்கள் அவர்களைப் பின்தொடரும்" என்று கூறினார்(திருவெளிப்பாடு 14:13)