பணியக வானொலி சேவையின் அங்குரார்ப்பணம்


ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் இணையவழி நற்செய்தி பணிகள் வரிசையில் புதிய படைப்பாக தயாரிக்கப்படும் இணையத்தள வானொலியான Tamil Catholic Daily Radio எதிர் வரும் 11-08-2018 அன்று கேவலார் அன்னை திருத்தல விழாவன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.

மேலும் 10,11-08-2018 ஆகிய நாட்களில் கேவலார் திருப்பதியில் நடைபெறும் வழிபாடுகள் நேரலையாக ஒலிபரப்பு செய்யப்படும். 10-08-2018 அன்று மாலை 17:00 மணிமுதல் 20:00 மணி வரையும் 11-08-2018அன்று காலை 09:00 மணி முதல் மாலை 18:00 மணி வரையும் கேவலார் திருத்தலத்தில் இருந்து வழிபாடுகள் நேரலையாக ஒலிபரப்பாகும். எமது ஒலிபரப்புகளை பின்வரும் இணைப்பில் நீங்கள் செவிமடுக்கலாம்.

http://www.tamilcatholicdaily.com/tamil/spiritual/TamilCatholicDailyRadio.html

எமது வானொலி சேவையில் நீங்களும் ஒத்துழைக்க விரும்பினால் எம்மை தொடர்பு கொள்ளவும். உங்களுடய செபத்தில் இந்த புதிய முயற்சிக்காக இறைவனை வேண்டுங்கள்.

Tamil Catholic Daily Radio

ஆண்டவர் யேசுவின் அன்புப் பிரசன்னம்