தவக்கால நோன்புத் தியானம்
24-02-2018


14.02.2018 அன்று சாம்பல் புதனுடன் தவக்காலம் மீண்டும் ஆரம்பிக்கின்றது. ஆண்டவர் இயேசுவின் பாடுகள் மரணம் உயிர்ப்பை சிறப்பாக ஆழ்ந்து சிந்தித்து, ஆண்டவர் இயேசுவுடனான எமது உறவை மேலும் ஒருபடி வளர்க்க, அன்னையாம் திருச்சபை எம்மை அழைக்கிறது. எமது ஆன்மீக வாழ்வை மேலும் ஒருபடி முன்னேற்ற, எமது பணியகம் இம்முறை தவக்கால தபசுத் தியானத்தை ஏற்பாடு செய்துள்ளது. இத்தபசு தியானம் வரும் 24.02.2018 சனிக்கிழமை காலை 11:00 மணி முதல் மாலை 18:00 வரை Haltern am See என்ற இடத்தில் St.Anna Kappelle, Annaberg 35, 45721 Haltern am See என்னும் முகவரியில் நடைபெறவுள்ளது. இத்தபசுத் தியானத்தில் கலந்து ஆண்டவர் இயேசுவின் பிரசன்னத்தில் வளர அன்போடு அழைக்கின்றோம்.

அதே வேளை, வழமை போல நெவிகஸ்சில் குருத்தோலை ஞாயிறு அன்று (25.03.2018) மதியம் 12.30 முதல் 16:30 வரை சிலுவைப்பாதையும், புனித வார தவக்கால நற்செய்திப் பகிர்வும் நடைபெறும்.

இடம் St.Anna Kappelle,
Annaberg 35,
45721 Haltern am See
காலம் 24-02-2018சனிக்கிழமை
நேரம் காலை 11:00மணிமுதல்
மாலை 18:00மணிவரை


தவக்கால நோன்புத் தியானப் பாடல்கள்

பாடல்கள் PDF வடிவம்