பிரேமன் நகரில் இறைத்தியான நற்செய்தி வழிபாடு - 2018

ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்த அதே நாளில் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியைத் தியானிக்க, ஆன்மீக வாழ்வில் மேலும் வளர, ஆண்டவர் இயேசுவின் பிரசன்னத்தில் நிரம்ப, பிரேமன் நகரில் இறைத்தியான நற்செய்தி வழிபாட்டினை யேர்மன் தமிழ் கத்தோலிக்க பணியகம் ஏற்பாடு செய்துள்ளது.

இடம் Josef Stift Kapelle,
Schwachhauser Heerstraße 54
28209 Bremen
காலம் 10-05-2018 வியாழக்கிழமை மாலை
நேரம் மாலை 18:00மணிமுதல் - 22:00மணிவரை

இவ் வழிபாட்டில் கலந்து ஆண்டவர் இயேசுவின் பிரசன்னத்தில் வளர அன்புடன் அழைக்கின்றோம்.


கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டிவந்தார்கள். அவர் ஒவ்வொருவர்மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார்.(லூக்கா 4:40)