இலை மறை காயாய் இருந்த "எம்மாவு இணையத்தளம்" உறுப்பினர்களின் ஒன்று கூடல் நிகழ்வு


யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணித்தளத்தால், இணையத்தள குழுவினருக்கான ஒன்றுகூடல் சனிக்கிழமை 14, 15.10.2017 ஆகிய நாட்களில் Ratingen(Nordrhein-Westfalen) எனும் இடத்தில் மதிய உணவுடன் ஆரம்பமானது. எங்கள் ஆன்மீக இயக்குனர் அருட்பணி. நிரூபன் இலை மறை காயாய் இருந்த எமை வணக்கத்துக்குரியவர்கள் என்று மேம்மைப்படுத்தியதோடு, ஆயத்த செபமும், ஆரம்ப உரையும் எடுத்துச் சொன்னார். தொடர்ந்து எங்கள் இணையத்தள பணிகள் தொடர்பான தொகுப்பும் அருட். சகோ. அ. அன்ரன் ஞானராஜ் றெவல் SDB அவர்களின் காணொளிச் செய்தியும் இடம் பெற்றது.

தொடர்ந்து இடம் பெற்ற கலந்துரையாடலில் இணையத்தள உறுப்பினர் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றிய சிறப்பான அறிமுகம், வாழ்க்கை வரலாறு, இணையத்தளத்தில் தங்களின் பங்களிப்பு பற்றியும் தெளிவாக கூறியதன் பிற்பாடு தேனீர் இடைவேளை ஆரம்பமானது. கிறிஸ்தவர்களின் சமூகத் தொடர்பு பணிகள் பற்றி அருட்பணி. டொனால்ட் நாங்கள் அறிந்திருக்காத பல விடயங்களைப் பற்றி தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார். 18:00 மணிக்கு இரவு உணவு, தொடர்ந்து நற்கருணை ஆராதனை இடம்பெற்றது. மையக்கருத்தாக எம்மாவு அனுபவத்தைப் பற்றித் தியானிக்கப்பட்டது. நற்கருணை ஆராதனையைத் தொடர்ந்து பொன் மாலைப்பொழுது இடம்பெற்றது.

அடுத்தநாள் 15.10.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 08:00 மணிக்கு திருப்பலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. தொடர்ந்து காலை உணவும் அதனைத் தொடர்ந்து அருட்பணி. டொனால்ட் அவர்களினால் விவிலியமும், மொழிபெயர்ப்பும் பற்றிய கருத்தரங்கும் இடம்பெற்றது.

பிற்பாடு மதிய உணவும் அதன் பின்னர் கலந்துரையாடலும் இடம் பெற்றது. அதன்போது அருட்பணி. நிரூபன் எங்கள் இணையத்தளகுழுவினருக்கு "எம்மாவு இணையத்தளக் குழுவினர்" என்று பெயர் சூட்டினார். இறுதியாக செபத்துடன் நிகழ்வுகள் அனைத்தையும் இனிதே நிறைவுபெற்றது. எனினும் இலங்கை, இந்தியா, இத்தாலி, அமெரிக்கா மற்றும் யேர்மனி ஆகிய நாடுகளில் இருந்து இணையத்தள குழுவில் இணைந்து பணியாற்றும் பலர் பயண ஒழுங்குகள் மற்றும் தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த மறக்கமுடியாத சந்திப்பின் அனுபவத்தினூடாக "எம்மாவு இணையத்தள குழுவினரின்" செயல்பாடுகள் மேலும் வலுப்பட்டது