முப்பது ஆண்டு நிறைவில்
கேவலார் அன்னையின் பெருவிழா

12-08-2017

புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து மருதமடு அன்னையின் திருநாளில் நம் நாட்டின் நிரந்தர அமைதிக்காகவும், எமக்காகவும் இறைத்தந்தையை வேண்டுதல் செய்யும் பெருவிழா!

11.08.2017 வெள்ளிக்கிழமை

18.00 மணி செபமாலை பவனி (கேவலார் தொடருந்து நிலையத்திலிருந்து)
19.00 மணி மாலை நற்கருணை வழிபாடும் மரியன்னை வணக்கமும்.

12.08.2017 சனிக்கிழமை

09.00 மணி தமிழில் முதற் திருப்பலி (சிற்றாலயம் )
10.45 மணி திருவிழாத் திருப்பலி
13.00-14.00 மணி ஒப்புரவு அருட்சாதனம் வழங்கப்படும்
14.00 மணி தமிழ் திருப்பலி ( சிற்றாலயம் )
15.30 மணி நற்கருணை வழிபாடும் ஆசீரும்திருவிழா யாழ் ஆயரின் தலைமையில்

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் அழைப்பை ஏற்று, இவ்வாண்டு யாழ் மறைமாவட்ட ஆயர் யாழ் ஆயர் அதிவண . ஜஸ்ரின் பேணாட் ஞானபிரகாசம் ஆண்டகை அவர்கள் கேவலார் அன்னையின் திருவிழாவிற்கு வருகை தரவுள்ளார். மேலும் கேவலார் அன்னையின் திருவிழாத்திருப்பலி யாழ் ஆயரின் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கேவலார் திருத்தல முகவரி

Die Wallfahrtskirche,
Kapellenplatz 35,
47623 Kevelaerபலர் வாகனங்களை அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்துதுவதால் போக்குவரத்துகள் தடைப்படுகின்றன. எனவே, திருவிழா அன்று(12.08.2017) வசதியாக வாகனங்களை நிறுத்துவதற்கு நகர உதவியாளர்கள் வழி காட்டுவார்கள். அனைவரும் கேவலார் நகர நிர்வாகத்துடன் ஒத்துழைக்குமாறும் குப்பைகளை அதற்கான இடங்களில் போடுமாறும் வேண்டுகின்றோம். பயணங்களில் ஏற்படும் நேர இழப்புகளை ஈடுசெய்ய, உங்கள் பயணங்களை முன் கூட்டியே தொடங்க வேண்டுகின்றோம்.முதல்நன்மை சிறார்களை கேவலார் யாத்திரைப் பவனியில் பங்கேற்க அழைப்பு

இவ்வருடம் முதல்நன்மை பெற்ற சிறார்கள் கேவலார் யாத்திரை திருப்பலி ஆரம்பப் பவனியில் பங்கேற்பதற்கான ஒழுங்குகள் பணியகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்பும் சிறார்கள் தமது முதல் நன்மை உடை அணிந்து கேவலார் திருத்தல மெழுகுதிரி ஆலயத்தின் பின்புறமாக 12.08.2017 அன்று சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு முன்பாக ஒன்று கூடுமாறு வேண்டுகிறோம். சிறார்களுக்கான மெழுகுதிரி பணியகத்தால் வழங்கப்படும். கூடுமானவரை முற்கூட்டியே உங்கள் பிள்ளைகளின் வரவை உறுதிப்படுத்தவும்.
தொடர்புகளுக்கு : திரு. யோ. இம்மானுவேல்02302-1780422கேவலார் திருவிழா வழிபாட்டு ஒழுங்குகள்

அன்று காலை 8:30 மணிக்குத் தொடர் செபமாலை ஆரம்பமாகும். 9:45 க்கு மரியன்னைப் புகழ்ச்சிப் பாடல் இடம் பெறும். 9:45 மணிக்கு முதன் நன்மைச் சிறார்கள், பீடப்பணியாளர் மற்றும் தொடர்பாளர் அனைவரும் மெழுகுதிரி ஆலயத்தின் முன் கூட வேண்டும். 10:00 மணிக்கு பவனிக்கான ஒழுங்குகள் நடைபெறும். 10:20 க்கு பவனி ஆரம்பித்து திருப்பலி நடைபெறும் கண்ணாடி மண்டபத்தை அடைந்து, வரவேற்பு நிகழ்வுகளைத் தொடர்ந்து 10:45 மணிக் குத் திருவிழாத் திருப்பலி ஆரம்பமாகும். இரு வாசகங்களுக்கும் மன்றாட்டுகளுக்கும் பொறுப்பான பணித்தளங்களும் பிறநாட்டுப் பணியகங்களும் 9:45 மணிக்கு முன்பாகவே திருவழிபாட்டுப் பொறுப்பாளரிடம் தங்கள் வரவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் சமுகம் அளிக்காதவிடத்து பிரதியாளரைத் தேடுவதற்கு அது ஏதுவாக அமையும். தொடர்புகளுக்கு: திருவழிபாடு : திருமதி அனா பாலமுரளி (0201- 505028)
பீடப்பணியாளர் : திரு. டெனி சேவியர் (06128-6095160)

கேவலார் வெள்ளி மாலைப் பேரணிகள்

அன்றைய வழிபாடுகள் திருவிழாவின் முதற்படியாக அமைவதனால், அத னைச் சிறப்பாகத் தொடங்குவதற்கான ஒழுங்குகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளன. அதன்படி 18:00 மணிக்குச் செபமாலைப் பேரணி ஆரம்பமாகும். பேரணியில் புதி தாகத் தயாரிக்கப்பட்ட பணித்தளங்களை அடையாளப்படுத்தும் 40 கொடிகள் தாங் கியவர்கள் இரு மருங்கிலும் வர, நடுவில் அன்னை மரியாவின் திருவுருவை தாங்கி யவர்களும், இறைமக்களும் பேரணியாகச் செல்வர். 20:15 மணிக்கு மெழுகுதிரிப் பவனி: வழிபாடு நடக்கும் இடத்தில் தொடங்கி காட்சி கொடுத்த இடம் வரை, அங்கு இறுதிச் செபமும் ஆசீர்வாதமும் நடைபெறும்.


தொடர்பாளர்களுக்கான அறிவித்தல்

தொடர்பாளர்களும் உதவித் தொடர் பாளர்களும் கேவலார்த் திருப்பணிக்காக இரு நாட்களும் நேர காலத்துடன் வருகை தரவும். தொடர்பாளர்களும், உ. தொடர் பாளர்களும், மேய்ப்புப் பணிப் பேரவை உறுப்பினர்களும் திருப்பலிப் பவனியில் பங்கு கொள்வதால் தமிழர் பண்பாட்டின் படி பெண்கள் சேலையும் ஆண்கள் வேட்டியும் அணிந்து வர வேண்டும். மாலை வழிபாட்டின் பின் துப்புரவுப் பணிகளில ; அனைவரும ; பஙகு; கொள் வதற்கு ஏதுவாகத் போக்குவரத்துகளுக்கு ஒழுங்கு செய்து கொள்ளுங்கள்


கேவலார் திருவிழாவினை முன்னிட்டு நடைபெறும் விசேட புகையிரத சேவைகள்

எமது கேவலார்ப் புனிதப் பயணத்தை ஒட்டி 12.08.2017 அன்று கிறே பெல்டுக்கும் கேவலாருக்கும் இடையிலான சிறப்புத் தொடருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பயணம் செய்வ தன் மூலம் சிற்றுந்துகளில் வருவதைக் குறைத்து, வாகன நெருக்கடியைத் தவிர்த்துக் கொள்ளலாம். கிறேபெல்டில் இருந்து 8:06 தொடக்கம் 16:06 வரை புறப்படுகின்றன. அவை 32 நிமிடங்களில் கேவலாரை வந்தடையும் வாய்ப்புகள் உள்ளன. அது போலவே, 9:21 முதல் 17:21 வரை கேவலாரில் இருந்து கிறேபெல் நகரை நோக்கிய தொடருந்துகள் ஓடிக் கொண்டே இருக் கும். இந்த வருவதும் போவதுமான சேவைகள் ஒவ்வொரு மணித்தியாலமும் தொடரும். மாலை 16:21, 17:21 ஆகிய தொடருந்துகள் டூசில்டோப் பிரதான தொடருந்து நிலையம் வரைச் செல்லும் என்பது மேலதிக தகவல் ஆகும்.

கேவலாரில் அன்ன தான நிகழ்வுகளை தவிர்க்க வேண்டுகின்றோம்

பல்வேறு நல்ல நோக்கங்களுக்காக எமது கலாச்சாரத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் எம்மோடு பின்னிப்பிணைந்துள்ளன. ஆயினும் கேவலார் அன்னையின் திருவிழாவில் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இவ் அன்னதான நிகழ்வுகளில் செலவு செய்யும் பணத்தினை தாயகத்தில் வறுமையில் வாடும் எம் உறவுகளுக்கு பொது நிறுவனங்களுக்கூடாகவோ, குருக்களின் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்பி உங்களுடைய நோக்கத்தினை நிறைவு செய்ய வேண்டுகின்றோம். மேலும் கேவலார் பதி முழுவதும் உணவு பொதிகளாலும், மற்றும் இதர குப்பைகளாலும் மாசடைகின்றது. கேவலார் பதியினை திருவிழாவின் பின்னர் சுத்தம் செய்வது மிகவும் கடினமாக உள்ளது. எனவே கேவலார் திருப்பதியில் அன்ன தான நிகழ்வுகளை தவிர்த்து எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.


இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் - புனித கன்னி மரியாள் (யோவான் 2:5)

கேவலார் திருத்தலத்தில் கவனிக்கப் பட வேண்டிய விடயங்கள்


இவ்வாண்டும் எமது மாநிலம் வழங்கியுள்ள உத்தரவுகளின்படி உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஒழுங்கு விதிகளையும் கவனத்துடன் பணியகம் மேற்கொள்ள வேண்டுமென பணிக்கப்பட்டுளதுடன். இப்புனிதப் பயணத்தில் பங்கேற்கும் மக்கள் அனைவரும் பணியகத்தினாலும் நகர நிர்வாகத்தினாலும் விடுவிக்கப்படும் ஒழுங்கு விதிகளை அக்கறையுடன் பின் பற்றி, புனிதப் பயணம் சிறப்பாகவும் அமைதியாகவும் இடம் பெற ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டப் படுகின்றீர்கள். கேவலார் புனித பயணத்தின் போது சிறப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒழுங்குகள்:


1. புனிதத்தலத்திற்கு சொந்த வாகனங்ககளில் வருவோர் கேவலார் நகர நிர்வாகத்தினால் நீச்சல் தடாகத்திற்கு அணமையாக இலவசமாக ஒழுங்கு செய்யபட்டுள்ள வாகனதத் தரிப்பிடத்தில் தமது வாகனங்களை நிறுத்துமாறு கேடகப்படுகினறனர். இவ் வாகனத் தரிப்பிடம் சிறப்பாக தமிழ் புனிதப் பயணிகளுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்பதுடன் இவ்விடத்தில் ஒரு கழிவறையும் பணியகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இத் தரிப்பிடத்திற்குச் செல்வதற்கான வழிகளை கேவலாருக்கு நுழையும் வீதிகளில் தமிழில் கண்டு கொள்ளலாம்.

2. கடந்த காலங்களில் பலர் பிழையான இடங்களில் தமது வாகனங்ககளை நிறுத்திதியதால் ஏற்பட்ட பிரச்சினைகளைஸ் சுட்டிக் காட்டி, இனிமேல் இப்படிப் பிழையாக நிறுத்தப்படும் வாகனங்கள் தூக்கிச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வாசலல்கள் மற்றும் வைத்திய உதவி வாகனங்கள் வரும் வழிகளை மறைக்காமல் அனுமதிக்கப் பட்டுள்ள இடங்ககளில் மட்டுமே வாகனங்களை நிறுத்துமாறு கேவலார் நகர நிர்வாகம் கண்டிபாகக் கேட்டுள்ளது.

3. குப்பைகளைப் போடுவதற்குரிய கொள்கலன்களைப் பல இருந்தும் பலர் தமது கழிவுகளை தாம் இருந்த இடங்களிலேயே விட்டுச் செல்வதைத் தவிர்த்து, அனைத்துக் குப்பைகளையும் அதற்குரிய கொள்கலன்களில் போடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

4. வியாபாரக் கடைகள் மாலை 18.00 மணிக்கு கண்டிப்பாக விற்பனையை நிறுத்த வேண்டும் எனவும், இதற்கு ஏதுவாக 17.30 மணிக்கு கடை வாசலுக்குள் நுழைவோர் தடுக்கப்பட வேண்டும் எனவும் கேவலார் நகர பாதுகாப்புப் பிரிவாலல் கேட்கப்பட்டுள்ளது. எனவே இதை விற்பனையாளர்களும் பொதுமக்களும் கவனத்திற் கொள்ளவும்.

5. ஆலய வளாகங்களுக்குள் நுழைவோர் தயவுசெய்து அமைதியைக் கடைப் பிடிக்கவும். செபித்துக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு தயவு செய்து இடைஞ்சல் செய்யாதீர்கள். இது குறித்து பணியக உதவியாளர்கள் விடுவிக்கும் வேண்டுகோள்களுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும்.

6. உங்கள் முகவரி மற்றும், திருபபலி பதிவு செய்தல், தொடுவானம் சாந்தா அல்லது கேவலார் திருத்தலம் பற்றிய விளக்கங்கள் மற்றும் பணியக விடயமான அனைத்துத் தேவைகளுக்கும் பணியகத்தால் அமைக்கப்பட்டுள்ள தகவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளவும்.


அனைவரும் ஒன்று கூடுவோம். ஓன்றித்துச் செபிப்போம்.