யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் ஏற்பாட்டில் திருத்தலங்களை நோக்கிய புனித யாத்திரை - 2017
பத்திமா, லூர்து மற்றும் இஸ்ராயல்


ஆண்டவர் இயேசு தனது அன்னையாகிய பரிசுத்த கன்னி மரியாளை பத்திமாவிற்கு அனுப்பி உலகிற்கு தனது நற்செய்தியை அறிவித்து, 100 ஆண்டுகள் பூர்த்தியாகும் இந்த ஆண்டில், ஆண்டவர் இயேசுவின் ஆசீரையும் அன்னை மரியாளின் பரிந்துரைகளையும் பெறும் படி, யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியம் திரு யாத்திரைகளை ஏற்பாடு செய்துள்ளது. கேவலார் அன்னையின் திருவிழாவிற்கு அடுத்த வாரம், இவ் திரு யாத்திரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதே வேளை ஒக்டோபர் மாத இறுதியில் ஆண்டவர் இயேசு பிறந்து, வாழ்ந்து, எமக்கு மீட்பை பெற்றுத் தந்த இஸ்ராயேல் தேசத்தை நோக்கிய பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ் இரு புனித யாத்திரைகளிலும், யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் இயக்குனர் அருட்பணி.நிரூபன் தார்சீசியஸ் அவர்களும் கலந்து எல்லா புனித தலங்களிலும் வழிபாடுகளை நெறிப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் பத்திமா திருப்பதியை நோக்கிய பயணம் (லூர்துமாதா தரிசிப்பையும் உள்ளடக்கியது)காலம்: 14.08.2017 முதல் 22.08.2017 வரை
தரிசிக்கும் இடங்கள்: இவ்வொன்பது நாளை உள்ளடக்கிய பயணம், இங்கிருந்து புறப்பட்டு பிரான்ஸ், இஸ்பானியா, போரத்துக்கல் ஊடாக பற்றிமா நகரைச் சென்றடையும், அங்கு நான்கு நாட்கள் தங்கி, அன்னையின் திருத்தலத்தையும், புனித அந்தோனியார் பிறந்த இடமாகிய லிஸ்பன் நகரையும் சந்தியாகோ நகரில் உள்ள புனித யாகப்பர் கல்லறையையும் பார்வையிட்டு மீண்டும் பயணம் லூர்து அன்னையின் பதியை நோக்கித் தொடரும். அங்கு இரு தினங்கள் தங்கி அன்னையைத் தரிசித்த பின் புறப்பட்டு புனித அந்தோனியார் புதுமை செய்த இடத்தையும் பார்வையிட்டுப் பின் பாரீஸ் ஊடாக நாடு திரும்புவோம்.

இப்பேருந்துப் பயணம், தங்குமிட வசதி, காலை உணவு,மதிய உணவு, இரவு உணவு என்பவற்றை உள்ளடக்கும். கட்டண விபரத்தை இயக்குனருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும். இணைந்து பயணம் செய்ய விரும்புபவர்கள், உங்கள் பணித்தளத்த்தில் யாத்திரைகளுக்கு பொறுப்பாக உள்ளவரிடம் அல்லது தொடர்பாளர் மூலமாக முற்கூட்டியே பதிவு செய்ய வேண்டுகின்றோம்.

குறிப்பு:

கேவலார் திருவிழாவுக்கு மறுநாள் இப்பயணம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால், தூர இடங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இலகுவாக அமையும்.

தொடர்புகள்:

அருட்பணி.நிரூபன் தார்சீசியஸ் -02014397602 / 017662142184 (Whatsapp, Viber) மூலமாகவும் இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்


புனிதப் பயணம் யெருசலேம் புனிதப் பூமிக்கான பயணம்காலம்: 22.10.2017 முதல் 29.10.2017 வரை
தரிசிக்கும் இடங்கள்: 8 நாட்களை உள்ளடக்கிய இப்பயணத்தில் நேரடியாக விமானம் மூலம் யெரூசலேம் சென்றடைந்து, அங்கு தங்கி யிருக்கும் ஏழு நாட்களும் பேருந்து மூலமாக இயேசு பிறந்த இடம் முதலாக இறந்த வரையான எல்லா இடங்களையும் திருத்தலங்க ளையும் மற்றும் நதிகள், மலைகள் ஆகியவற்றைப் பார்வையிடுவதற்கும் அங்கு வழிபாடுகள் நிகழ்த்துவதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்பேருந்துப் பயணம், தங்குமிட வசதி, காலை உணவு,மதிய உணவு, இரவு உணவு என்பவற்றை உள்ளடக்கும். கட்டண விபரத்தை இயக்குனருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும். இணைந்து பயணம் செய்ய விரும்புபவர்கள், உங்கள் பணித்தளத்த்தில் யாத்திரைகளுக்கு பொறுப்பாக உள்ளவரிடம் அல்லது தொடர்பாளர் மூலமாக முற்கூட்டியே பதிவு செய்ய வேண்டுகின்றோம்.

தொடர்புகள்:

அருட்பணி.நிரூபன் தார்சீசியஸ் -02014397602 / 017662142184 (Whatsapp, Viber) மூலமாகவும் இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்