வாழ்த்துவோர் வாழ்த்தலாம்19.06.2014 அன்று தனது குருத்துவ அர்ப்பணவாழ்வின் வெள்ளிவிழா கொண்டாடிய யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியக இயக்குனர். அருட்பணி. அந்தோனி பெர்ணாண்டோ பெனற் அவர்களை வாழ்த்த விரும்புவோர் தமது வாழ்த்துகளை இங்கே தெரிவிக்காலாம். உங்களது வாழ்த்து செய்திகள் இங்கே பிரசுரிக்கப்படும். மின்னஞ்சல் மூலமாக info@tamilcatholicnews.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உங்களுடைய வாழ்த்துகளை அனுப்பிவைக்கலாம்.

(குறிப்பு: உங்களுடைய மின்னஞ்சல் முகவரிகள் பிரசுரிக்கப்படாது )

..................................................................................................................................

எம் இயக்குனர்
மண்டைதீவு மண் தந்த செல்வப்புதல்வா
மாட்டீன் குருமடத்தில் நீர்
வித்திட்ட விதை அன்று - இன்று
கனிந்திட்ட கனியாச்சுதே

வெள்ள உள்ளத்தோடு
வெளிநாட்டுப்புலன் பெயர்நோக்கி விரைந்து
இறைவிசுவாசம் குறைந்தவரை
இல்லம் சென்று வரவழைத்தவர் - எம் இயக்குனர்

வேதனை நிறைந்த வெளிநாட்டில்
சாதனை படைக்க வேண்டுமென்று
போதனையூடாக வேதம் ஊட்டி
புதிய பாதைகள் இட்டவர் - எம் இயக்குனர்

சிகரமே காத்திருக்க சீர்மிகு இயக்குனர்
உம் சிந்தனையை எம்மில் பதித்து
சிரமங்கள் ஆயிரம் வந்தபோதும்
நொந்து போகும் மனம் வேண்டாம்

துதி தரும் வெற்றியின் பாதையிலே
ஆண்டவர் வழி நடந்திடுவோம்
தூய ஆவி எங்கும் துணைவர
ஜெயமே ஜெயமே என்றும் ஜெயமே

வாழ்த்துவோம் வாழ்த்துவோம் அகமகிழ்வோடு வாழ்த்துவோம்
பரணியெங்கும் பணிசெய்திட - எம் இயக்குனர்
பரலோக பிதா பாதம் பணிந்து
இறைவிடுதலைப்பாதை பயணிக்க வாழ்த்துவோம்.
முல்லை அமிர்தநாதர், நூறன்பேர்க்

..................................................................................................................................

ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.
(திருப்பாடல் 117:24)

25 ஆண்டு குருத்துவ வாழ்வு ஒரு குருவுக்கு ஒரு வசந்த காலமாகும். பல கனவுகள், இலட்சியங்கள், பசுமையான சிந்தனைகள், சவால்கள், தொலைநோக்குப் பார்வை இவைகளைத் தன்னகத்தே அடக்கி, ஆண்டவரின் சேவைக்கு அர்ப்பணிக்கும் அரிய காலமாகும். இந்த ரீதியில் அருள்தந்தை அந்தோனி பெர்ணாண்டோ பெனற் அடிகளார் தனது 25 வது குருத்துவ நிறைவைக் கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். அருள்தந்தை அவர்கள் பழகுவதற்கு இனிய சுபாவம் கொண்டவர். மென்மேலும் அவர் பணி சிறக்கவும், அவரின் குருத்துவ வாழ்வு மேலோங்கவும் இறையாசீர் கூறி வாழ்த்துகின்றோம்.
வேதநாயகம் கபிரியேல் குடும்பத்தினர் Meßstetten Germany

..................................................................................................................................

துறவறம் என்னும் நறுமலர்ச்சோலையிலே 25 ஆண்டுகள் வெள்ளிவிழாக்காணும் யூபிலி நாயகனே! யேர்மன் மாநகரில் வெள்ளிவிழாக் கொண்டாடும் இத்தினத்தில் "ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன் அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும் எனும் திருப்பாடலுக்கிணங்க உறுதியான மனதுடனும் தொலை நோக்குடனும் தனது பணிகளை செவ்வனவே செய்து கொண்டு நற்செய்தியின் தூதுவனாக பாவிகளை மீட்க வந்த பரமன் இயேசுவுக்கு சான்று பகர்ந்து 25 வருட குருத்துவ வாழ்வின் நிறைவை மகிழ்வுடன் கொண்டாடும் இந்நாளில் உங்கள் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகின்றேன்.
Rajkumar Soysa, Wuppertal,Germany

..................................................................................................................................

அன்பில் தோழனாக
அமைதியில் சிகரமாக
ஆற்றலில் வீரனாக
பணியில் தொண்டனாக
உறவில் சோதரனாக
உதவியில் வள்ளலாக......

அரும்பணியாற்றிவரும்
ஆன்மீகப் பணியக
இயக்குனர் அருட்பணி பெனற்
அவர்களின் குருத்துவ வெள்ளிவிழாவில்
நாமும் மகிழ்வுறுகின்றோம். பணிவாழ்வில்
இவர் மென்மேலும் பல்லாண்டுகள்
இறை ஆசீர் அனைத்தும் பெற்று
வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
கமிலஸ் குடும்பம், ஒபகௌசன், யேர்மனி

..................................................................................................................................

பணி தொடர வாழ்த்துகிறோம்
ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் 4-வது இயக்குனராக 4 ஆண்டுகள் அரும்பல பணிபுரிந்து சேவை செய்துவரும் அருட்திரு அ.பெ.பெனற் அடிகளாரின் குருத்துவ வெள்ளி விழாவுக்கு வாழ்த்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். புலம் பெயர் வாழ் தமிழ் மக்களின் ஆன்மீக நலனில் அக்கறை கொண்டு பல பணிகளை அயராது ஆற்றிவரும் அருட் தந்தையின் பணி போற்றுதற்குரியது. இவர் ஆற்றிய ஆன்மீகப்பணிகள் நிச்சயம் மக்களின் ஆன்மீக வாழ்வை வளப்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்விழா அருட்பணியாளர்கள் - மக்கள் உறவு நிலையை வளர்க்கும் நிகழ்வாகவும் தனது குருத்துவ அழைத்தலுக்காக இறைவனைப் புகழ்ந்து நன்றி சொல்லும் தருணமாகவும், தனது பணி குருத்துவத்தின் செயல்பாடுகளைத் தன்னிலை ஆய்வு செய்யச் சந்தர்ப்பமாகவும், இறையழைத்தலையும், பணிக் குருத்துவத்தின் மேன்மையையும் எடுத்துக்கூறும் நிகழ்வாகவும் இது அமைய இறைவனைப் பிராத்தித்து வழிநடத்தவும் வேண்டி வாழ்த்தி நிற்கின்றேன்.
அ. ஞானேஸ்வரன் (நிர்வாகி)
பேர்லின் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணித்தளம்

..................................................................................................................................

Congratulations on the Anniversary of Your Ordination! Gog bless you beno anna!
MRS S.V Jeyaratnam, MISSISSAUGA CANADA

..................................................................................................................................

Dear. Father,
May you live long !!! ... guide us to walk on the way of God.

Arockiaraj

..................................................................................................................................

தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஒருவனும் அழிந்து போய்விடக்கூடாது,
இஜேசுவின் உண்மையான துறவு வாழ்வை மேன்மை படுத்த தங்களது வாழ்வை அமைத்து கொண்டவர்கள் துறவிகள். அந்த வரிசையில் 25ம் ஆண்டை பூர்த்தி செய்து வெள்ளிவிழாக்காணும் நாயகன், ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க பணியக இயக்குனர் அருட்தந்தை அ.பெ.பெனற் அவர்கள் ஆழ்ந்த ஆன்மீக வாழ்வில் என்னும் பன்னெடுங்காலம் அருட்பணி புரிய வேண்டும் என இறைவனை வேண்டி என்னும் உங்களது குருத்துவ பணி பொன் வைர பவளவிழா காண வாழ்த்தி நிற்கும்.
எசன் பணித்தள மக்கள்.

..................................................................................................................................

தமிழ் கத்தோலிக்க பணிவாழ்வில் பல தடைகளைத் தாண்டி 25வது ஆண்டில் வெள்ளிவிழாக்காணும் அருட்பணி அந்தோனி பெர்ணாண்டோ பெனற் அவர்களே, உங்கள் பணிவாழ்வு மேலும் சிறந்து விளங்கவும், இறை ஆசிரோடும், உடல் நலத்தோடும், வாழவும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Thavaruban Emmanuel , Witten - Germany

..................................................................................................................................

Dear Father,
Congatulations for your 25 years of service to God and His people. On this blessed day I pray to God for you to walk with you to lead his people in the coming years. Thanks for your support to all of us who live in Europe.
Gods protection will remain with you Always.
Best wishes
Sr.Jophy, The Nehterlands

..................................................................................................................................

மனம் நிறைந்து வாழ்த்துகிறேன். வாழிய பல்லாண்டு. உங்களின் சேவையினால், எங்களின் இறைவாழ்வு தொடர்கிறது. சந்தோசமாயிருக்கு.
H.Mariampillai, Bremen,Germany

..................................................................................................................................

Congratulations Father. May God Bless you and your mission.
Nithila .M, Jaffna, Sri Lanka

..................................................................................................................................

God bless u father.
M.Arokia jose, kanyakumari,india

..................................................................................................................................

Congratulations on the Anniversary of Your Ordination! Gog bless you
Jenusha, Sri Lanka

..................................................................................................................................

Mary Atputham Siva, London, United Kingdom

..................................................................................................................................

Congratulations and prayerful wishes on your 25th Anniversary! May the good Lord shower his blessings and guide you through to celebrate many more years to come. With warm wishes
Pamela and family from Canada.

..................................................................................................................................

இறைபணியில் இருபத்தைந்து ஆண்டுகள்
நற்பணிக்கு அகவை இருபத்தைந்து - நம்
குருவிற்கு பொன் நாள் இன்று
நலம் நாடும் எமக்கு நன் நாள் இன்று
எம் மனம்களில் இடம்பிடித்தது மட்டுமின்றி
எம் வேதனைகளையும் புரிந்தவரும் கூட
குணமளிக்கும் வழிபாடுகளை நடாத்தி
மன வலிகளில் இருந்து விடுதலை அளித்தவர்
சமய வேறுபாடின்றி வழிபாடுகளை நடாத்தி
இறை நம்பிக்கைகளை மனங்களில் விதைத்தவர்
இறைபணியில் இருபத்தைந்து ஆண்டுமட்டுமின்றி
நூறாண்டுள் அருட்பணி தொடர வாழ்துகின்றோம்
நலம் என்றும் நிறைய வாழ்த்துகின்றோம்
நல்லன என்றும் தொடர வாழ்த்துகின்றோம்
நல் நாளாம் துறவறப் பொன் நாளில் நீண்ட
நெடுங்காலம் வாழ நெஞ்சுருக இறைவனை வேண்டுகின்றோம்
திருமதி.பெனடிற்றா டொன் போஸ்கோ
பிறேமன் பங்கு மக்கள் சார்பாக

..................................................................................................................................

Lieber Vater,
PSALMEN 89: 19 - 21 "Einen Helden have ich zum könig gekrönt, einen jungen Mann aus dem volk erhöht. ICH have IHN, meinen Knecht, gefunden und ihn mit meinem heiligen öl gesalbt. Beständig wird meine Hand ihn halten und mein Arm ihn stärken.. amen

viell glück wünsch 25 jähre Joliver Family Frankfurt Deutschland

..................................................................................................................................

May god be with you alwas.
Bennet Arumaithurai, Canada

..................................................................................................................................

இறைமகன் இயேசுவின் அழைப்பினை ஏற்று இறையாட்சிமலர வாழ்வினை அர்ப்பணித்து அன்புப்பணியில் அகவைகள் 25ஐ நிறைவுசெய்து அர்ப்பணவாழ்வில் வெள்ளிவிழா காண்பதுடன் யேர்மன்வாழ் தமிழ்க்கத்தோலிக்க மக்களை இறைவிசுவாசத்தில் வேரூன்றச்செய்யும் பணியில் முழுமூச்சுடன் பயணிக்கும் தங்களுது பணிசிறக்க இறைஆசீர் வேண்டி வூப்பெற்ரால் பங்குமக்களாகிய நாம் இவ் இனிய வேளையில் மனதார வாழ்த்துகிறோம்
அன்புடன் பங்குமக்கள் சார்பாக,
எஸ்.ஆர். ஸ் ரீபன்
(S.R.Stephen) (வூப்பெற்ரால்பங்கு தொடர்பாளர்)

..................................................................................................................................

..................................................................................................................................

அருட்பணி அந்தோனி பெர்ணாண்டோ பெனற் அடிகளாரின் குருத்துவப் பணியில் 25வது ஆண்டை இறைவனுக்கு அர்ப்பணித்து வெள்ளிவிழாக்காணும் இன்றைய நாளில் பணியக மக்கள் சார்பில் விற்றன், காகன் பங்கு மக்களும் மனமார வாழ்த்தி பெருமகிழ்வு அடைகிறோம்.

25வது ஆண்டுகளை கடந்து விட்ட அடிகளார், தனது பணி வாழ்வில் ஆன்ம, உடல், உள நலத்துடன் இன்னும் சிறப்பாக பணிபுரியவும், திருச்சபையின் வளர்ச்சிக்கு அயராது உழைக்கும் அவர் சேவையில் வரும் தடைகளையும், துன்பங்களையும் திடத்துடன் முகம்கொடுத்து, பணித்தளங்களை வழி நடத்தவும் எல்லாம் வல்ல இறைவன் அரணாக இருந்து அவரை வழி நடத்தவேண்டுமென்றும் வெள்ளிவிழா நாயகனை எம் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறோம்.
யோசெப் இம்மனியல் (விற்றன் காகன் தொடர்பளார்)

..................................................................................................................................

..................................................................................................................................

இறைவனின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி. (1பேதுரு 2:-9)  
தமது குருத்துவ அர்ப்பண வாழ்வில் 25 வருடங்களை நிறைசெய்து பெருமை சேர்க்கும் யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியக இயக்குனர். அருட்பணி. அந்தோனி பெர்ணாண்டோ பெனற் அவர்களே!
உங்களை ஆன்மீகத் தலைவராக,
மனித வாழ்வு தரமுள்ளதாக மாற,
துறவற வாழ்வு அதற்கு அர்த்தம் கொடுக்க:
சாதனை நிறைந்த வரலாற்றை வசப்படுத்த வந்த எம் தந்தையே!
நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையும் கொண்டு வாழ்கின்ற உம் நேர்மையான மனம் வாழ்க!
கருத்தாய் திட்டமிட்டு செயல்படும் உம் காரியங்கள் சித்தி பெருகுக!
ஒழுக்க நெறிதனை உணர்த்திடும் உம் நெறிகள் வாழ்க!
சீறிப் பாயும் உம் கருத்தோட்டம் ஓங்குக!
தரணிக்கு வந்த தலைமகன் இயேசுவின்
வாழ்வியல் போராட்டங்கள் உம்மிலே செழிக்க!
இறையன்புக்குரிய, இறையனுபவ மிக்க உம்மை
இந்த வரலாற்றில் யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியக இயக்குனராக
பெற்றதை எண்ணி உளம் பூரித்து மனமாற, உளமாற இறையாசீர்கள் வேண்டி வாழ்த்துகிறோம்.
என்றும் அன்புடன் வாழ்த்தும்
பிராங்பேட் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியக பங்குமக்கள் சார்பாக
அன்ரனி மைனர்

..................................................................................................................................

"என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றுகிறது.என் மீட்பராம் கடவுளை நினைத்து என் இதயம் களிகூர்கின்றது.ஏனெனில் எனக்கு அரும்பெரும் செயல்கள் புரிந்துள்ளார்" (லூக் 1:47)  
எம் மத்தியில் நம்பிக்கையூட்டும் நற்பணியாளனாக வழிகாட்டும் அந்தோனி பெர்ணாண்டோ பெனற் அடிகளார் தமது குருத்துவ அர்ப்பண வாழ்வில் 25 வருடங்களை நிறைசெய்த இவ்வாண்டினை நன்றியின் ஆண்டாக இறைவன் அளித்திருப்பது இவரது பணிவாழ்வின் பாரிய பரிசு என்றே கூறவேண்டும். இத்தகைய தூய பணிதனை எத்தகைய இடரிலும் தொடர்ந்து ஆற்றவும்: பொன், வைர நூற்றாண்டுகளை தம் பணித்தளங்களில் இவர் கண்டு, பல்லாண்டு வாழ்கவென நானும் வெள்ளிவிழா நாயகரை மனதார வாழ்த்தி, இறையாசீர் என்றும் இவரோடு தங்க இறையருள் வேண்டி நிற்கின்றேன்.
  என்றும் அன்புடன் வாழ்த்தும்
யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியக செயலாளர்
மரியாம்பிள்ளை உதயகுமார்

..................................................................................................................................

Congratulations Fr. Bennette on the day of your ordination to the Priesthood. May the Good Lord bless you and walk with you in all your endeavours you initiate in your ministry.
Fr. J.M.John Patrick omi

..................................................................................................................................

இறைபணியில் இருபத்தைந்து அகவையை இன்முகத்துடன் ஈன்றளித்த பெனற் அடிகளாரே யாழ்மறைமாவட்டத்தின் பலபங்குகளில்உதவிபங்குத்தந்தையாகவும் பங்குத்தந்தையாகவும் மறைக்கோட்ட முதல்வராகவும் உன்பணிசிறந்ததால் கடல் கடந்து யேர்மன் நாட்டில்பணிபுரிய அழைத்தல்பெற்றீர் இன்று நீங்கள்குருத்துவபணியின் வெள்ளிவிழாநாயகன் இறைவன் துணையுடன் பொன்விழாகாண டுசுல்டோர்வ் பங்கு மக்கள் வாழ்த்திநிற்கின்றோம்
என்றும் அன்புடன்
டுசுல்டோர்வ் பங்குமக்கள்சார்பில்
தொடர்பாளர் கி. அருள்தாஸ்

..................................................................................................................................

இறைவாழ்வின் இருபத்தைந்தாண்டுகளை இனிதே நிறைவு செய்து இறைவனில் மகிழ்ந்திருக்கும் எம் பங்குத் தந்தையே உம்மோடு சேர்ந்து நாங்களும் மகிழ்ந்து இறைத்தந்தையின் அருள்மிக உமக்காய் வேண்டுகின்றோம் இனிதான உம் பணிவாழ்வு இத் தரணியெங்கும் பரவி இன்பமாய் இனிவருங்காலங்களிலும் இறையாசி பெற்று வாழ இதயம் கனிந்து வாழ்த்தி நிற்கின்றோம்.
Desmond, Bielefeld, Germany

..................................................................................................................................

அருட்பணி. அந்தோனி பெர்ணாண்டோ பெனற் அவர்களுக்கு குருத்துவ வெள்ளிவிழா வாழ்த்துரை!
நீர் என்றென்றும் குருவே!

‘என்னைப் பின் செல்’என்ற இறையோன் குரலை – உலகில்
தன்னை அறிவதற்கு முன்பே செவிசாய்த்து
‘இதோ வருகிறேன்’ என்று இதமாய் பதிலுரைத்து - உடனே
ஐயிரு ஆண்டுகள் பெற்றோர் துறந்து குருகுலம் புகுந்து
மெய்யும் இறையும் மேன்மையுற கற்று - தன்
பொய்மை அனைத்தும் ஐயுற களைந்து
மெய்மை இறைவனைச் சிக்கெனப் பற்றி – தன்
சிந்தனை சொல் செயல் சீரமைத்து
உடல் பொருள் ஆவி அனைத்தையும் அளித்து – உயிர்த்த
மனுமகனைப் பின்பற்றி மந்தைக்கு ஆயனாக
மனிதர் பாதம்கழுவி மானுடத் தொண்டனாக - இவ்வுலகில்
குருவாக திருநிலை யானாய்!
மறுகிறித்துவாய் மானுடத்திற்கு நீ யானாய்!! – ஆகையால்
நீர் என்றென்றும் குருவே! வாழ்க! வாழ்க! வாழ்ந்திடவே!

நீ ஒரு திருவிவிலியம்!

நீர் ஒரு நோவா!

கட்டாந்தரையில் கப்பல் கட்டி..
இணையாய் இணையாய் உயிரைச் சேர்த்து
இறைத்திட்டம் நிறைவேற்றிய நோவா போல்
திருமணத்தால் அருட்சாதனத்தால் இணை சேர்த்து
திருக்குடும்பங்களை அமைத்த நீர் ஒரு நோவாதான்!

நீர் ஒரு ஆபிரகாம்!

திக்கு தெரியாத தேசம்! திசையறியாப் பயணம்!
மொழியறியாத உறவு! வாரிசு இல்லாத குடும்பம்! – அவர்
விசுவாசத்தின் விளைநிலம்! தியாகத்தின் திருவுருவம்..ஆபிரகாம் போல்
ஆயர்; சொல்லுமிடத்தில் கூடாரம்! பயமில்லாத பயணம்!
பணப்பையில்லாத சேவை! கைரேகை அழிந்த தொண்டு!
விசுவாசத்தின் தற்காலத் தந்தை நீரும் ஒரு ஆபிரகாம்தான்!

நீர் ஒரு மோசே!

எரியும் புதரில் இறையோடி உறவாடி.
அறியா பாராவோனோடு தனித்து வேள்வி நடத்தி
அடிமை மக்களை அணிதிரட்டி விடுதலைப் பயணம் செய்து
அரசியல் சாசனம் தந்து..இறைமக்களாக எழுச்சியூட்டிய மோசே போல்
அன்றாடம் இறையோடி உறவாடி..அல்லலுறும் மக்களின் வேதனைப் போக்கி.
அனுதினமும் நெறிப்படுத்தும் போதனைத் தந்து
ஒளிரும் முகத்தோடு.மறைபணியாற்றும் நீரும் ஒரு மோசே தான்!

நீரும் ஒரு மரியாதான்!

உருவிலா இறைவன் கருவாக உருவாக..
அடிமையெனத் தன்னைத்தந்து ..மாடடைக்குடிலில் பெற்றெடுத்து
அகதியாக அந்நிய தேசம் வாழ்ந்து..இளம்விதவையாக கணவனையிழந்து
கண்முன்னே தன்மகனை இழந்து ..ஆனால் விசுசாசத்தின் தாயாக ஒளிரும் மரியா போல்..
உருவிலா இறைவன் மனுவுருவாக..
இதை நினைவாகச்செய்யுங்கள் என அன்றாடம் பலி செய்து
மறு கிறித்துவாய் மந்தையின் திருமுன் விளங்கும் நீரும் மரியாவே!!

குருத்துவத்தின் வெள்ளிவிழாக் காணும் நீர்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! வாழ்க ! வாழ்ந்திடவே!
வாழ்த்தும்...
கருங்காட்டு போடன்சி பணித்தள பங்கு மக்கள் சார்பாக
மதுரநாயகம் கிரகோரி

..................................................................................................................................

..................................................................................................................................

அருட்திரு.பெனற் அடிகளார்க்கு
இருபத்தைந்து ஆணடுகள் இறைமழை பொழியும்அருள் நிறைந்தே வாழ்ந்திட அருளபுரிந்த இறைவன் மேலும் சுகமும் அருளும் அன்பும் நிறையவே தந்து இறை அருள்வழங்கும் உடலாய்வாழ்ந்திட இறைஅருள்தாழ்ந்து வாழ்த்துகின்றோம்.
இறைஅன்புடன்
கிறேசியன் யேம்ஸ் அல்ஸ்ரன் குடும்பம்.(பீலபெல்ட்)

..................................................................................................................................

..................................................................................................................................

congratulations father.God bless you.
Bastian Anthony Rasanayagam , Füssen, Germany.

..................................................................................................................................

Imalda Bernard and Family

..................................................................................................................................