வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்


புனித ஜோசப் வாஸ் நினைவுத்தூபி நிர்மாணம்

புனித ஜோசப் வாஸ் நினைவுத்தூபி நிர்மாணம் 1710ல் தூய ஜோசப்வாஸ் அடிகளார் மட்டக்களப்பு தாண்டவன்வெளிக்கு வருகைதந்தபோது கைது செய்யப்பட்டு வம்மி மரத்தில் கட்டி அடிக்கப்பட்டதாக பாரம்பரிய வரலாறு தெரிவிக்கும் புனித இடத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியானது 06.10.2017 அன்று அருட்தந்தை.ஜி.அலக்ஸ் றொபட் அடிகளாரால் திறந்து வைக்கப்பட்டது [2017-10-07 21:50:53]


அருட் சகோதரர் றெவ்வாயேல் ரொட்ரிகோ அவர்கள் இறை பதம் அடைந்தார்

புனித செபஸ்தியார் கல்லூரி மொரட்டுவ , டீ மஸ்னட் கல்லூரி , புனித பெனடிக்ட் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் அதிபரும் புனித டிலாசால் சபையைச் சார்ந்தவருமான அருட் சகோதரர் றெவ்வாயேல் ரொட்ரிகோ அவர்கள் 05 / 10 / 2017 அன்று காலமானார். அன்னாரின் பூதவுடல் கொழும்பு புனித டிலாசால் வீதியில் அமைந்துள்ள புனித சூசையப்பர் சிற்றாலயத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் நல்லடக்கம் 07 / 10 / 2017 அன்று பி.ப 3 .00 மணியளவில் திருப்பலியிடன் மாதம்பிற்றிய சேமக்காலையில் நடைபெறும். அருட் சகோதரரின் பிரிவால் துயருறும் சகோதரின் குடும்பத்தினர், டிலாசால் சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அருட் சகோதரரின் ஆன்ம இளைப்பாற்றி வேண்டி செபிக்கின்றோம். தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் யேர்மனி [2017-10-05 23:22:30]


கத்தோலிக்க திருச்சபையின் குருணாகல் மறைமாவட்ட ஆயர் மேதகு ஆயர் கலாநிதி றேமன்.பீரிஸ் ஆண்டகை இன்று காலமானார்.

மேதகு ஆயர் அவர்களின் பிரிவால் துயர் கொள்ளும் சகோதர ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், மறைமாவட்ட இறைமக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபாங்களை தெரிவித்து நிற்கிறோம். மேதகு ஆயர் அவர்கள் கத்தோலிக்க திருச்சபைக்கும், இறைமக்களுக்கும் ஆற்றிய பணிக்காக கடவுளுக்கு நன்றிகளை தெரிவித்து நிற்கின்றோம். ஆயர் ஆண்டகை அவர்கள் இன மத மொழிக்கு அப்பால் சகல மக்களையும் நேசித்து வாழ்ந்து வந்ததோடு மட்டுமல்லாது மக்களின் உரிமைக்காகவும் பாடுப்பட்டார். ஆயர் ஆண்டகை அவர்களின் பணிகளை நினைவு கூர்ந்து நன்றி கூறும் இவ்வேளையில் தாயின் வயிற்றில் கருத்தரிக்கும் முன்னமே ஆண்டவர் இவரை தனது திராட்சை தோட்டத்தில் பணிக்காக அழைத்து இன்று எம்மை விட்டு ஆண்டவரின் இல்லத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். மேதகு ஆயர் அவர்களின் இறுதி பிரியாவிடை இரக்கல் திருப்பலி 2.09.2017திங்கட்கிழமை மாலை 3மணிக்கு இடம் பெறும் என்பதனை குருணாகல் மறைமாவட்ட குருமுதல்வர் வண பிதா அகஸ்ரின் அடிகளார் தெரிவித்துள்ளார். [2017-10-01 23:04:16]


இலங்கை சல்வதோரிய சபைக்கு இன்னுமொரு புதிய குரு

இன்று இலங்கை வாழ் சல்வதோரிய சபையினருக்கு ஒரு உன்னதமான நாள். எல்லாம் வல்ல இறைவன் அருளால், இறை மீட்பர் சபையைச் சேர்ந்த திருத்தொண்டர். ஜோக்கின் அன்ரனி நிர்மல் சுரஞ்சன் இமீச அவர்கள் யாழ் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் 2017 ம் ஆண்டு 16ம் திகதி புரட்டாதி மாதம் சனிக்கிழமை காலை 9 : 30 மணியளவில் சிலாபம் தூய கார்மேல் மரியன்னை பேராலயத்தில் குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்டுள்ளார். புதிய குருவுக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அருட் தந்தையின் பணி சிறக்கவும், இறைவனின் ஆசீர் இவரோடு என்றும் இருக்கவும் இவருக்காக செபிப்பதோடு, எமது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கின்றோம். இவர் தனது முதல் நன்றித்திருப்பலியை மாம்புரி தூய செபமாலை மாதா புனித ஆலயத்தில் 17 / 09 / 2017 ஞாயிற்றுக்கிழமை காலை 8 :00 மணிக்கு ஒப்புக்கொடுப்பார். [2017-09-17 14:58:41]


அருட்பணி. ஜோண் லூர்து டானியல் சே.ச அடிகள் இறைபதம் அடைந்தார்

அருட்பணி. ஜோண் லூர்து டானியல் சே.ச அடிகள், (83/62) 11 ஆம் திகதி (திங்கட்கிழமை) செப்டம்பர் மாதம் 2017 காலை 8.00 மணியளவில் கண்டியில் காலமானார். செப்டம்பர் 13 ம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்ட பின்பு ஜேசுயூட் கல்லறையில், லெவெல்ல, கண்டியில் அடக்கம் செய்யப்படும். அடிகளாரின் ஆன்ம இளைப்பாற்றி வேண்டி செபிக்கின்றோம் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் யேர்மனி [2017-09-13 14:06:39]


அடம்பன் புனித வியாகுல மாதா ஆலய திருவிழா......

அடம்பன் புனித வியாகுல மாதா ஆலய திருவிழா எதிர்வரும் 15.09.2017 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாக அடம்பன் பங்குதந்தை அறியதந்துள்ளார். 14.09.2017 வியாழக்கிழமை மாலை நற்கருணை வழிபாடு இடம் பெற்று 15.09.2017 வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கூட்டுதிருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும். திருவிழா திருப்பலி முடிவில் அன்னையின் திருச்சுருப பவனியும் அதனை தொடர்ந்து அன்னையின் சிறப்பு ஆசீரும் வழங்கப்படவுள்ளது. எனவே அன்னையின் பக்தர்கள், அயல் பங்கு மக்கள், கத்தோலிக்க இறைமக்கள் அனைவரையும் அன்னையின் சிறப்பாசீர் பெற்றுச் செல்ல அடம்பன் பங்குதந்தையுடன் இனைந்து அடம்பன் பங்கு மக்களும் அழைத்து நிற்கின்றார்கள். [2017-09-13 13:30:14]


சொறிக்கல்முனை பங்கு தந்தை அருட்பணி R. திருட்செல்வம் ஓர் சாதனையாளர் என மட்டு. ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சொறிக்கல்முனை திருத்தலத்தில் முதல் நன்மையும் உறுதிப்பூசுதல் திருவருட்சாதனங்களை வழங்குதலும், புதிதாக அமைக்கப்பட்ட குரு மனையையும் காரியாலயத்தையும் திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். சொறிக்கல்முனை பங்கு தளத்தின் மிக நீண்ட நாள் தேவையாக இருந்த ஒரு புதிய குருமனையும், காரியாலயமும் இன்று பூர்த்தி செய்யப்படுகின்றது. [2017-08-30 23:34:55]


மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் புதிய தலைவராக வண பிதா ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவு.

கடந்த வாரம் (05.08.2017) மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் 2017-2019ம் ஆண்டு காலப்பகுதிக்கான ஆளுநர் சபைக்கான தெரிவு மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்வளவு காலமாக பல்வேறுப்பட்ட சவால்களுக்கு மத்தியில் வண பிதா செபமாலை அடிகளார் இனம் மதம் பாராமல் நடுநிலமையாக இருந்து பணியாற்றியது மட்டுமின்றி பல்வேறுபட்ட சவால்கள், அச்சுறுத்தல்கள்,விசாரணைகள் என்ற நெருக்குவாரத்தின் மத்தியிலும் வட கிழக்கு பகுதியில் முதல் முறையாக மாவட்ட மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஒன்று சேர்த்து ஒரு சிறந்த அமைப்பை உருவாக்கிய பெருமையை பெற்றுள்ளார். வண பிதா செபமாலை அடிகளார் தனது பணி காலத்தில் மக்களின் பிரச்சனைகளை உடனுக்குடன் சர்வதேச மட்டத்திற்கும், தூதுவராலயங்களுக்கும் எடுத்தியம்பிருந்தார். பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக வட மாகாணத்தில் திகழ்ந்த அருட்தந்தை அவர்கள் தற்போது பதவியிலிருந்து விலகி மற்றவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை முன்னிலையில் காணி அலுவலகர் வசந்தன் மற்றும் வேல்ட் விஷன் மாவட்ட திட்ட இணைப்பாளர் றெஜி ஆகியோர் தேர்தல் நடாத்துனர்களாக இருந்து வழிநடத்தினார்கள். ஆளுநர் சபைக்கான தெரிவு தேர்தல் வாக்களிப்பில் மன்னார் மறைமாவட்ட மருதமடு சிறிய குருமட இயக்குனர் அருட்தந்தை ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக 1.அருட்பணி.இ.செபமாலை அடிகளார், 2 ந.தங்கராஜா 3.எஸ்.புண்ணியலிங்கம், 4. பி.ஏ.அன்ரனி மார்க், 5. அ.சகாயம், 6. சிங்கிலேயர் பீற்றர், 7.கபிரியேல், 8.அருட்தந்தை N.ஜெகதாஸ் அடிகளார், 9.திருமதி ஜெசி அரியரெட்ணம், 10.அருட்பணி எஸ்.மார்க்கஸ் அடிகளார், 11.திருமதி ம.உதயசந்திரா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எனவே முன்னைய நாள் தலைவர் அவர்களின் சிறப்பான பணிகளுக்காக மன்னார் மக்கள் சார்பான நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றோம் இதே வேளை புதிதாக பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட அருட்தந்தை அவர்களையும் வரவேற்று வாழ்த்தி நிற்கின்றோம் [2017-08-19 19:16:08]


வரலாற்று சிறப்புமிக்க மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆவணிதிருவிழாவிற்கான நவ நாட்கள் 06.08.2017 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்.

வரலாற்று சிறப்புமிக்க மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆவணித்திருவிழாவிற்கான நவ நாட்கள் 06.08.2017 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படுவதாக மன்னார் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது. வருடா வருடம் நடைபெறும் ஆவணி திருவிழாவிற்கு பல பாகங்களிலும் இருந்து மக்கள் வருகைதருவது வழக்கம். இந்த முறையும் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ள திருவிழாவிற்கு முற்கூட்டியே மக்கள் மடுத்திருத்தலத்திற்கு வந்துக்கொண்டிருப்பதாகவும், இவ்வாறு வருகின்றவர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மடு திருத்தலத்தின் பரிபாலகர் வண பிதா எமில் அடிகளார் தெரிவித்தார். இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளாக போக்குவரத்து, சுகாதாரம், மருத்துவம், பாதுகாப்பு, குடிநீர் கடைகள் போன்றவைகளை உரிய அதிகாரிகள் மிகவும் சிறப்பாக செய்து முடித்துள்ளதாகவும் அருட்தந்தை அவர்கள் தெரிவித்தார். அத்தோடு ஆலய சுற்றுப்புற சூழல்களில் சத்தம் போடுதல், விளையாடுதல், வியாபாரம், கேலி கூத்துகள் என்பன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதென்பதை அறியத்தருகின்றோம். அத்தோடு மது அருந்துதல், சீட்டு விளையாடுதல் வானொலி கேட்டல் போன்றன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. நாளைய தினம் ஆரம்பமாகும் நவநாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று ஆவணி மாதம் 14 ம்திகதி நற்கருனை வேஸ்பர் ஆராதனையும், ஆசிரும் இடம் பெறும். அதனை தொடர்ந்து 15.08.2017அன்று காலை திருவிழா திருப்பலியானது தமிழ் சிங்கள மொழிகளில் ஆயர்கள், குருக்கள் இனைந்து கூட்டுத்திருப்பலியா ஒப்புக்கொடுப்பார்கள். அதனை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனியும் மடு அன்னையின் ஆசீர்வாதமும் இடம்பெறும் என்பதனையும் அனைத்து பாகங்களிலும் இருந்து மடு அன்னையின் திருத்தலத்திற்கு வருகைதர உள்ள பக்தர்களுக்கு அறியத்தருகின்றோம். குறிப்பு : மடு அன்னையின் ஆசீர் பெற உங்கள் அனைவரையும் அன்போடு அழைத்து நிற்கின்றோம், அவ்வாறு வர முடியாத பக்தர்கள் இருப்பின் உங்கள் தேவைகளை இதில் பதிவு செய்யும் பொருட்டு விசேடமாக செபிக்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றோம். [2017-08-05 21:42:50]


விண்ணேற்ப்பு பெருவிழா காண ஆயத்தமாகும் புளியந்தீவு அன்னை மரியாள் பேராலயம் .

இறை மக்களை அன்னையின் ஆசீர் பெற அன்புடன் அழைக்கின்றோம்!! [2017-08-05 21:41:32]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்