வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)
யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் தூய ஆவி திருவிழிப்புஆராதனைப்பெருவிழா - 2019

ஆண்டவர் யேசு விண்ணகம் செல்வதற்கு முன் தன்னுடைய சீடர்களுக்கு உங்களுக்கு ஒரு துணையாளரை அனுப்புவேன் என்று வாக்களித்தபடி சீடர்கள் வீட்டில் கூடியிருந்தபோது பெரும் காற்றும் இரைச்சலோடும் நெருப்பு போன்ற பிளவுற்ற நாவுகள் அவர்கள் மேல் வந்து அமர்ந்ததை சீடர்கள் கண்டார்கள்.அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர் அதே பெந்தகோஸ்து நாளன்று நாமும் ஒன்றிணைந்து தூய ஆவியானவரை வரவேற்று அவருடைய அபிசேகத்தை பெறுவதற்காக யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் 08-06-2019 அன்று எசன் நகரில் முழு இரவு ஆராதனைப்பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.இவ் முழு இரவு ஆராதனைப்பெருவிழா மாலை 19.00 மணி முதல் மறு நாள் காலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது. [2019-05-10]


துன்புறும் இலங்கை தேசத்து மக்களுக்காக உபவாசத் தியானம் 28-04-2019

இலங்கையில் குண்டுவெடிப்புச்சம்பவங்களினால் இறந்தவர்களுக்காகவும், அவர்களை இழந்து தவிக்கும் குடும்ப உறவுகளுக்காகவும் மற்றும் பலவித காயங்களினால் வைத்தியசாலைகளில் பரிதவிப்பவர்களுக்காகவும், உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவர்களுக்காகவும், இலங்கையில் தற்போது தோன்றியுள்ள அசாதாரண நிலைமை மாறி அமைதி திரும்ப வேண்டியும் டோட்முண்ட் நகரில் உள்ள Dreifaltigkeit Kirche, Flurstr-10, 44145 Dortmund இல் 28.4.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை [2019-04-23]


புனித வார வழிபாட்டு நிரல் - 2019

வழமை போலவே யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் புனித வார வழிபாடுகளை, யேர்மனியின் அநேக பணித்தளங்களில் ஏற்பாடு செய்துள்ளது. இவ் வழிபாடுகளில் கலந்து கொண்டு ஆண்டவர் இயேசுவின் ஆசீரை பெறுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.


[2019-04-14]


பணித்தள ஒளிவிழா நிரல் - 2018

யேர்மனியின் ஒவ்வொரு பணித்தளங்களிலும் நடைபெறவுள்ள ஒளிவிழாக்கள் பற்றிய விபரம் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. யேர்மன் பணித்தள் ஒளிவிழாக்கள் அனைத்தும் இம்முறை "அன்பர் வருகின்றார், எனவே அன்பில் இணைந்த குடும்பங்களாவோம்!" என்ற மையக்கருத்தில் நடைபெறவுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


[2018-12-15]


நத்தார் புத்தாண்டு வழிபாட்டு நிரல் 2018 - 2019

யேர்மனியின் ஒவ்வொரு பணித்தளங்களிலும் நடைபெறவுள்ள நத்தார் புத்தாண்டு வழிபாடுகள் பற்றிய விபரம் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வழிபாடுகளில் கலந்து கொண்டு ஆண்டவர் இயேசுவின் ஆசீரைப்பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


[2018-12-17]


பணியக வானொலி சேவையின் அங்குரார்ப்பணம்

ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் இணையவழி நற்செய்தி பணிகள் வரிசையில் புதிய படைப்பாக தயாரிக்கப்படும் இணையத்தள வானொலியான Tamil Catholic Daily Radio எதிர் வரும் 11-08-2018 அன்று கேவலார் அன்னை திருத்தல விழாவன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.


[2018-08-05]


கேவலார் அன்னையின் பெருவிழா 11-08-2018

புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து மருதமடு அன்னையின் திருநாளில் நம் நாட்டின் நிரந்தர அமைதிக்காகவும், எமக்காகவும் இறைத்தந்தையை வேண்டுதல் செய்யும் பெருவிழா! யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் அழைப்பை ஏற்று, இவ்வாண்டு யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.P.J.ஜெபரட்ணம் அவர்கள் கேவலார் அன்னையின் திருவிழாவிற்கு வருகை தரவுள்ளார். மேலும் கேவலார் அன்னையின் திருவிழாத்திருப்பலி யாழ் குருமுதல்வரின் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. [2018-07-08]


யேர்மனியின் தென் பகுதியில் இறைத்தியான வழிபாடுகள்
02.06.2018 - 10.06.2018

தெய்வீக குண்மளிக்கும் இயேசு சபை இயக்குனரும் அத் துறவுற சபையின் நிறுவுனருமான அருட்பணி.ஜோசப் விக்ரர் அவர்களின் நெறிப்படுத்தலில் தென் யேர்மனியின் பணித்தளங்களான கெம்ரன், முன்சன் , வில்லிங்கன் சுவெலிங்கன், நியுரன்பேர்க் ஆகியவற்றில் இறைத்தியான வழிபாடுகள் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.
[2018-06-02]


முன்சங்கிளட்பாக், முன்ஸ்ரர் மற்றும் ஆலன் நகரங்களில் புனித அந்தோனியார் திருவிழா

வருடந்தோறும் ஆனி மாதத்தில் முன்சங்கிளட்பாக், முன்ஸ்ரர் மற்றும் ஆலன் நகரங்களில் நடைபெறும் புனித அந்தோனியார் திருவிழா இவ் முறையும் வழமைபோல் நடைபெறவுள்ளது. அதன் பிரகாரம் 02.06.2018 அன்று முன்சங்கிளட்பாக் நகரிலும் 13.06.2018 அன்று முன்ஸ்ரர் நகரிலும் 16.06.2017 அன்று ஆலன் நகரிலும் நடைபெறவுள்ளது.

[2018-05-26]


எமது இணையத்தள குழுவில் பணிபுரியும் திருமதி.ஜஸ்‌ரீனா வேதநாயகம் அவர்களின் தாயார் திருமதி.கிறிஸ்ரினா றொசற்றா யோசப் அவர்கள் இறைபதம் அடைந்தார்

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் இணையத்தள குழுவில் இணைந்து பணியாற்றும் திருமதி.ஜஸ்‌ரீனா வேதநாயகம் அவர்களின் தாயார் திருமதி.கிறிஸ்ரினா றொசற்றா யோசப் அவர்கள் 10-05-2018 அன்று இலங்கை, யாழ்ப்பாணத்தில் இறைபதம் அடைந்தார். அன்னார் எமது இணையத்தள குழுவில் பணியாற்றும் திரு.கபிரேயல் வேதநாயகம் அவர்களின் மாமியாரும் ஆவார். அன்னாரின் பூத உடல் 11-13 St. James Road , Gurunagar , Jaffna என்ற முகவரியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் இறுதித் திருப்பலி 14-05-2018 அன்று யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்று அருகில் உள்ள கல்லறைத்தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும். [2018-05-12]


பிரேமன் நகரில் இறைத்தியான நற்செய்தி வழிபாடு - 10-05-2018

ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்த அதே நாளில் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியைத் தியானிக்க, ஆன்மீக வாழ்வில் மேலும் வளர, ஆண்டவர் இயேசுவின் பிரசன்னத்தில் நிரம்ப, பிரேமன் நகரில் இறைத்தியான நற்செய்தி வழிபாட்டினை யேர்மன் தமிழ் கத்தோலிக்க பணியகம் ஏற்பாடு செய்துள்ளது.

[2018-04-23]