இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.(எபிரேயர் 13:8)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

இறைவாக்குத்தத்தம்

நீ கைநெகிழப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டாய்: உன் வழியே எவரும் பயணம் செய்யவில்லை:
நானோ உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்: தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்:
தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்.
(எசாயா 60:15)

  திருவருட் சாதனங்கள்

திருவருட்சாதங்கள் - தேவதிரயஅனுமானங்கள், அருள்அடையாளங்கள் எனவும் அழைக்கப்படுகிறது. திருவருட் சாதனங்கள் கடவுளின் அருளைப் பெற்றுத் தருகின்ற சாதனங்கள் என்பதை அதன் பெயரிலிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம்.

மக்களைப் புனிதப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலை உருவாக்கி வளர்க்கவும், இறைவனுக்கு புகழ்ச்சி நல்கவும் அருட்சதனங்களை இயேசு ஏற்படுத்தினார். அடையாளங்கள் என்ற அளவில் அவை போதனை வழங்கும் அலுவலையும் கொண்டுள்ளன. அருட்சாதனக் கொண்டாட்டங்களுக்கு முன்னதாகவே விசுவாசம் தேவை; ஏனெனில் அவை சொற்களாலும் சடங்குகளாலும் விசுவாசத்தைப் பேணி வளர்க்கின்றன, உறுதிப்படுத்துகின்றன, வெளிப்படுத்துகின்றன. எனவே இவை "விசுவாசத்தின் அருட்சாதனங்கள்" என்று அழைக்கப்படுகின்றன.

உண்மையாகவே திருவருட்சாதனங்கள் அருளை வழங்குகின்றன. மேலும் இதே அருளை விசுவாசிகன் பயனுடன் பெறவும், இறைவனை முறையாக வழிபடவும், பரம அன்பைச் செயல்படுத்தவும் சிறந்த வகையில் இவ் அருட்சாதனங்கள பெறுபவர்களைப் பக்குவப்படுத்துகின்றன.

திருமுழுக்கு, உறுதிப+சுதல், நற்கருணை ஆகிய மூன்று அருட்சாதனங்களும் கிறிஸ்தவ வாழ்வில் புகுமுக அருட்சாதனங்களாகவும் கடவுளின் அழைப்பை பெற்று அதில் நிலைத்து நிற்க வலிமையைத் தருகின்ற அருட்சாதனங்களாகவும் அமைகிறன. ஒப்புரவு மற்றும் நோயில் ப+சுதல் அருட்சாதனங்கள் குணப்படுத்தும் அருட்சாதனங்களாக அமைகிறன . திருமணம் மற்றும் குருத்துவம் பற்றுருதியை விளைவிக்கின்ற அருட்சாதனமாக அமைகின்றன.

இந்த ஏழு அருட்சாதனங்களும் கிறிஸ்தவ வாழ்வின் எல்லா நிலைகளிலும், பிறந்தது முதல் இறக்கும் வரை நமது விசுவாச வாழ்வில் நிலைத்து நிற்க போதிய வலிமையையும் கடவுளின் அருளையும் நமக்குப் பெற்றுத்தருகிறது. சுருக்கமாக இந்த ஏழு திருவருட்சாதனங்களும் கடவுள் நமக்கருளிய கொடை எனலாம்.