இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.(எபிரேயர் 13:8)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

இறைவாக்குத்தத்தம்

நீ கைநெகிழப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டாய்: உன் வழியே எவரும் பயணம் செய்யவில்லை:
நானோ உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்: தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்:
தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்.
(எசாயா 60:15)

  பழைய  திருமறைச் சுவடி

1.மனித வாழ்க்கையும் கடவுளும்

மனிதன் இவ்வுலகில் இன்பமாக வாழ விரும்புகிறான். உண்மையான இன்பத்தை தருபவரும், அதற்கு ஊற்றாக இருப்பவரும் கடவுள். எனவே கடவுளை அடைவதால் தான் மனிதன் உண்மையான இன்பத்தைப் பெறமுடியம்.

கடவுளை நாம் எவ்வாறு அடையலாம்?
கடவுளை அறிந்து அவருக்கு அன்பு செய்து அவர் பொருட்டு எல்லா மனிதருக்கும் அன்;பு செய்து வாழ்ந்தால் கடவுளை அடையலாம்.

கடவுளை நாம் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?
படைப்புப் பொருட்களைப் பார்த்து படைத்தவரை அறிந்து கொள்ள முடியும். மேலும் கடவுள் தம்மையே நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

கடவுளுக்கு நாம் ஏன் அன்பு செய்ய வேண்டும்?
ஏனெனில் கடவுள் நம்மை படைத்துக் காத்துவரும் தந்தை.நாம் அவருடைய பிள்ளைகள். ஆகவே நாம் அவருக்கு அன்பு செய்ய வேண்டும்.

கடவுளுக்கு நாம் எவ்வாறு அன்பு செய்ய வேண்டும்?
அவர் விருப்பப்படி வாழ்வதால் நாம் அவருக்கு அன்பு செய்ய வேண்டும்.

கடவுள் விரும்புவது என்ன?
தம் சட்டத்தின்படி நம் மனசாட்சிக்கேற்ப நாம் வாழ வேண்டும் என்று விரும்புகிறார்.

எல்லா மனிதர்களுக்கும் நாம் ஏன் அன்பு செய்ய வேண்டும்?
நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள், எனவே அனைவரும் சகோதரர்கள், ஆகவே நாம் ஒருவருக்கொருவா அன்பு செய்ய வேண்டும்.

நாம் பிறர்க்கு எவ்வாறு அன்பு செய்ய வேண்டும்?
இயேசு கிறிஸ்து நமக்கு அன்பு செய்தது போல நாமும் பிறர்க்கு அன்பு செய்ய வேண்டும்.

2.மீட்புக்கு ஆயத்தம்

இவ்வுலக படைப்பிலே அழகும், ஒழுங்கும் காண்கிறோம், கண்டு பெரிதும் வியப்படைகிறோம். ஆனால் இவ்வழகான உலகில் பாவமும், தீமையும் துன்பமும் இருப்பதை அறிகிறோம். இதன் காரணத்தை அறிய ஆவல் கொள்கிறோம்.

அனைத்தையும் படைத்தவர் யார்?
கடவுள்.

கடவுள் படைத்தவைகளில் சிறந்தவை யாவை?
வானதூதரும் மனிதரும்.

வானத்தூதரைப் பற்றி நாம் அறிந்து கொள்வது யாது?
கடவுள் அவர்களைப் படைத்து தம் பேரின்பத்தில் பங்கு தருவதாக வாக்களித்தார். சிலர் அகந்தை கொண்டு அதை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இவர்களைக் கடவுள் நரகத்தில் தள்ளினார், இவர்களுக்குப் பேய்கள் என்பது பெயர்.

கடவுள் உலகை எதற்காகப் படைத்தார்?
தம் ஞானமும் வல்லமையும் அன்பும் விளங்க உலகைப் படைத்தார். மனிதனுக்குப் பயன்படும் வகையில் அதனை அமைத்தார்.

கடவுள் மனிதனை எவ்வாறு படைத்தார்?
அறியவும் விரும்பவும் கூடிய ஆற்றலுடன் தம் சாயலாகப் படைத்தார்.

கடவுள் மனிதனை எதற்காகப் படைத்தார்?
தம்மை அறிந்து, தம்மீது அன்பு செலுத்தி தம்முடைய பேரின்பத்தில் பங்கு கொள்ள வேண்டுமென்று மனிதனைப் படைத்தார்.

இந்தப் பேரின்பத்தில் பங்குகொள்ள கடவுள் மனிதனுக்கு அளித்த கொடை என்ன?
அவனை தம் பிள்ளை என்ற நிலைக்கு உயர்த்தி தம்மை 'அப்பா' என்று அழைக்கும் உரிமையை அளித்தார்; இதை அருள் நிலை என்கிறோம்.

மனிதன் இந்நிலையை எவ்வாறு இழந்தான்?
பேயை நம்பி கடவுளின் கட்டளையை மீறி பாவம் செய்ததால் அருள் நிலையை இழந்தான்.

ஆதிப் பெற்றோரின் பாவத்தினால் மனுக்குலத்திற்கு வந்த தீமைகள் யாவை?
கடவுளின் பிள்ளை என்ற நிலைமையை இழந்ததோடு பாவ நாட்டம், துன்பம், சாவு முதலிய இன்னல்களுக்கும் நரகத் தண்டனைக்கும் மனுக்குலம் உள்ளானது. இதைச் சென்ம பாவநிலை என்கிறோம்.

இந்தப் பாவ நிலையிலே கடவுள் மனிதனை விட்டுவிட்டாரா?
இல்லை, அவனை மீட்க ஒரு மீட்பiரை வாக்களித்தார்.

ஆதிப் பெற்றோரின் பாவம் மனுக்குலம் முழுவதையும் மாசுபடுத்தியது. இந்த முதல் பாவத்திற்குப் பிறகு மனிதர்கள் மேன்மேலும் பாவத்தில் மூழ்கினார்கள். இவ்வாறு இறையன்பையும் பிறரன்பையும் புறக்கணித்து வாழ்ந்தார்கள். இருப்பினும் இறைவன் மனுக்குலத்தின் மீது இரக்கம் கொண்டார். மீட்பரின் வருகைக்கு ஆயத்தம் செய்ய இஸ்ராயேல் மக்களின் தந்தையான ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து அவரோடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்.இதனால் தமக்கும் மனிதர்களுக்கும் இடையே நெருங்கிய நட்பையும் உறவையும் ஏற்படுத்தினார். எகிப்து நாட்டில் அடிமைகளாய் இருந்த இக்குலத்தை மோயிசன் வழியாக மீட்டு, சீனாய் மலையில் தம் உடன்படிக்கையை உறுதிபடுத்தி வாக்களிக்கப்பட்ட நாட்டை அவர்களுக்கு கொடுத்தார். இஸ்ராயேல் மக்கள் இந்த உடன்படிக்கையை பன்முறை மீறி, இறைவனைப் புறக்கணித்தாகள். எனினும் இறைவன் அவர்களைப் புறக்கணிக்கவில்லை. இறைவாக்கினர்களை அனுப்பி தம் அன்பையும், நட்பையும் அவர்களுக்கு எடுத்தரைக்கச் செய்தார். மீட்பரின் வருகையை நினைவூட்டினார். இஸ்ராயேல் மக்களும் அவர்கள் வழியாக உலக மாந்தர் அனைவரும் மீட்பரின் வருகையை எதிர்நோக்கியிருந்தார்கள்.

3.இயேசு கிறிஸ்து மனுக்குல மீட்பர்

ஆதியில் கடவுள் வாக்களித்த மீட்பர் யார்?
இயேசு கிறிஸ்து

இயேசு எங்கே பிறந்தார்?
பாலஸ்தீன் நாட்டில் பெத்லகேம் என்ற ஊரில் பிறந்தார்.

இயேசுவின் தாய் யார்?
எப்பொழுதும் கன்னியான புனித மரியா.

இயேசு கன்னி மரியாவிடம் எப்படி பிறந்தர்?
தூய ஆவியின் வல்லமையால் உற்பவித்து, புதுமையாகப் பிறந்தார். புனித சூசையப்பர் இயேசுவின் வளர்ப்புத் தந்தையே.

இயேசு கிறிஸ்து என்ற பெயருக்குப் பொருள் என்ன?
இயேசு என்பதற்கு மீட்பர் என்றும், கிறிஸ்து என்பதற்கு அபிஷுகம் செய்யப்பட்டவர் என்றும் பொருள்.

இயேசு எப்பொழுது தம் மீட்புப் பணியை வெளிப்படையாகத் தொடங்கினார்?
முப்பது ஆண்டுகள் செபத்திலும் உழைப்பிலும் கழித்தபின் யோர்தான் ஆற்றில் புனித திருமுழுக்கு யோவானிடம் தவ முழுக்கு பெற்றுத் தம் மீட்புப் பணியை வெளிப்படையாகத் தொடங்கினார்.

இயேசு தவ முழுக்கு பெற்றவுடன் என்ன நிகழ்ந்தது?
வானம் திறக்க கடவுளின் ஆவி புறாவைப் போல் இயேசுவின் மேல் இறங்கி வந்தார். வானத்திலிருந்து "என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்ற குரலொலி கேட்டது.

இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் என்ன அறிந்து கொள்கிறோம்?
இந்த நிகழ்ச்சியிலிருந்து கடவுள் ஒருவரே ஆயினும் தந்தை, மகன், தூய ஆவி எனமூவராயிருக்கிறார் என்று அறிந்து கொள்கிறோம். இந்த உண்மையை "திரித்துவம்" என்கிறோம்.

இம்மூவரும் மூன்று கடவுளா, ஒரே கடவுளா?
ஒரே கடவுள்.

எப்படி ஒரே கடவுள்?
யாதொரு வேறுபாடுமின்றி மூவருக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே கடவுள் தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுள்.

தவ முழுக்கு பெற்றபின் இயேசு ஏன் பேயினால் சோதிக்கப்கட்டர்?
நம் வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளை நாம் எவ்வாறு வெல்ல வேண்டும் என்பதை நமக்கு காட்டுவதற்காகவே இவ்வாறு சோதிக்கபட்டார்.

இயேசு தம் மீட்புப் பணிக்குத் துணையாக யாரைத் தேர்ந்து கொண்டார்?
தம் சீடர்களுள் பன்னிருவரைத் தேர்ந்து கொண்டார். அவர்களுக்கு அப்போஸ்தலர்கள் என்று பெயர்.

இயேசுவின் முக்கிய போதனைகள் யாவை?
கடவுள் நம் அனைவரின் அன்புத் தந்தை, நாம் அனைவரும் அவருடைய பிள்ளைகள். வுhழ்வின் முடிவில் நாம் அவரை அடைய வேண்டும். அனைத்திற்க்கும் மேலாக நாம் இறைவனுக்கு அன்பு செய்ய வேண்டும். பாவத்தினால் அவரை மனநோகச் செய்யக்கூடாது. இயேசு நமக்கு அன்பு செய்தது போல நாமும் ஒருவருக்கொருவர் அன்பு செய்ய வேண்டும். நம் எதிரிகளுக்கம் அன்பு செய்ய வேண்டும். வாழ்வில் ஏற்படக்கூடிய துன்பங்களிடையே நம் வானகத் தந்தையை நம்பி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இயேசு தாம் கடவுளின் மகன் என்பதை எவ்வாறு காட்டினார்?
தாம் செய்த பல புதுமைகளால் காட்டினார்.
எடுத்துக்காட்டாக;

தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றினார்.
நோய்களைக் குணப்படுத்தினார்.
அப்பம் பலுகச் செய்தார்.
புயலை அடக்கினார்.
பேய்களை ஓட்டினார்.
இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தார்.
தாமும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.

ஆகவே இயேசு கிறிஸ்து யார்?
அவர் மெய்யாகவே கடவுளும் மனிதனுமானவர். பாவத்திலிருந்து நம்மை மீட்டவர். கடவுளிடம் செல்ல நமக்கு வழிகாட்டுபவர்.

இயேசு நம்மை எவ்வாறு மீட்டார்?
தம் விண்ணகத் தந்தையின் விருப்பத்திற்கு முற்றிலும் பணிந்தவராய் வாழ்ந்து, நமக்காகப் பாடுபட்டு, சிலுவையில் மரித்து பாவத்திற்கேற்ற பரிகாரம் செய்து, உயிர்த்தெழுந்து நமக்கு மீட்பை பெற்றுத்தந்தார்.

கிறிஸ்து நமக்காக அனுபவித்த முக்கியமான பாடுகள் யாவை?

வறுமையில் பிறந்து வளர்ந்தார்.
கடின உழைப்புடன் மிக எளிய வாழ்க்கை நடத்தினார்.
கெத்சமனித் தோட்டத்தில் இரத்த வேர்வை வியர்த்தார்.
கற்றூணில் கட்டுண்டு அடிக்கப்பட்டார்.
முண்முடி சூட்டப்பட்டார்.
சிலுவையில் அறையுண்டு வேதனைப்பட்டு அவலச் சாவுக்குள்ளானார்.

சிலுவை மரணத்தோடு கிறிஸ்துவின் வாழ்வு முடிந்துவிட்டதா?
இல்லை. தாம் முன்னுரைத்தபடியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். உயிர்த்த நாற்பதாம் நாள் இவ்வுலகைக் கடந்து சென்றதையே கிறிஸ்துவின் "பாஸ்கா" என்கிறோம்.

கிறிஸ்துவின் பாஸ்கா என்பது என்ன?
கிறிஸ்து உயிர்த்தெழுந்து இவ்வுலகைக் கடந்து தந்தையிடம் சென்றது போல் நாமும் பாவத்தை விட்டெழுந்து அருள் வாழ்வுக்குக் கடந்து செல்ல வேண்டும். இதுவே கிறிஸ்தவனுடைய பாஸ்கா

4.தூய ஆவி

கிறிஸ்து இவ்வுலகில் ஆற்ற வந்த மீட்பு பணி உலக முடிவுவரை நடைபெற வேண்டும். எனவே தமக்குப் பின் இப்பணியைத் தொடர்ந்து ஆற்றத் துணைபுரிய தூய ஆவியை அனுப்புவதாக தம் அப்போஸ்தலர்களுக்கு வாக்களித்தார். இயேசு விண்ணகம் சென்ற பத்தாம் நாள் தூய ஆவியை அனுப்பினர். தூய ஆவியைப் பெற்ற அப்போஸ்தலர்கள் பயமின்றி கிறிஸ்துவின் நற்செய்தியை மக்களுக்குப் போதித்தார்கள். அன்றே 3.000 பேர் மனந்திரும்பி திருமுழுக்கும் பெற்றார்கள்.இவ்வாறு திருச்சபை பிறந்து வளரத் தொடங்கியது.

தூய ஆவி யார்?
பிதாவோடும் சுதனோடும் ஒரே கடவுளாக இருப்பவர்.

தூய ஆவி திருச்சபையில் என்ன செய்கிறார்?
உடலுக்குள் உயிர் இருப்பது போல் தூய ஆவி திருச்சபையில் இருந்து அதனை வழிநடத்துகிறார். அதைப் புனிதப்படுத்தி வளரச் செய்கிறார்.

தூய ஆவி நம் ஒவ்வொருவரிடத்திலும் என்ன செய்கிறார்?
தூய ஆவி நமக்குள் குடிகொண்டு நம்மைப் புனிதப்படுத்தி தந்தையோடும் மகனோடும் இணைக்கிறார்.

தூய ஆவியிடம் நமக்குள்ள கடமை என்ன?
அவருடைய ஏவுதல்களுக்குப் பணிந்து அவர்மேல் பக்தி பற்றுதல் கொண்டு வாழ வேண்டும்.

5.திருச்சபை

கடவுள் தம் மீட்புத் திட்டத்தைச்செயல்படுத்த இஸ்ரயேல் என்னும் ஒரு குலத்தைத் தேர்ந்தெடுத்து அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த கடவுள் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்த புதிய இஸ்ரயேல் என்னும் இறைமக்களே திருச்சபையாகும்.

திருச்சபையை ஏற்படுத்தியவர் யார்?
திருச்சபையை ஏற்படுத்தியவர் இயேசு கிறிஸ்து.

திருச்சபைக்குத் தலைவர் யார்?
இயேசு கிறிஸ்துவேதான். அவர் தம் பெயரால் திருச்சபையை நடத்துவதற்காக கண்கண்ட தலைவராக புனித இராயப்பரை ஏற்படுத்தினார்.

புனித இராயப்பருக்கு வாரிசுகளாக வருபவர்கள் யாவர்?
திருத்தந்தையர்.

திருச்சபை உலகில் ஆற்றும் பணி என்ன?

மீட்பின் நற்செய்தியை அறிவிக்கின்றது.
மக்களை புனிதப்படுத்துகின்றது.
மக்களை வழிநடத்துகின்றது.

திருச்சபையின் உறுப்பினர் என்ற வகையில் நமக்குள்ள கடமை என்ன?

கிறிஸ்துவின் போதனைப்படி வாழ்வது.
திருச்சபையின் பணியில் பங்கேற்பது.

6. திருமறை நூல்

கடவுள் தம்மையும் தம்மீட்புத் திட்டத்தையும் மனுக்குலத்திற்குச் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்தினார். இவ்வாறு அவர் வெளிப்படுத்திய உண்மைகளையும் நிகழ்த்திய வரலாற்றையும் கொண்ட நூல்களின் தொகுப்பே திருமறை நூல். இவை தூய ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்டவை.

திருமறை நூலின் இருபெரும் பிரிவுகள் யாவை?
பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு.

பழைய ஏற்பாட்டின் நூல்கள்?
தொடக்க நூல் முதல், மக்கபேயர் இரண்டாம் நூல் முடிய 46 நூல்களைக் கொண்ட தொகுப்பே பழைய ஏற்பாட்டு நூல்கள்.

பழைய ஏற்பாடு நமக்கு கூறும் செய்தி என்ன?
இஸ்ரயேல் மக்களுக்கும், அவர்கள் வழியாக உலகம் அனைத்திற்கும் கடவுள் தம்மையும் தம் மீட்புத் திட்த்தையும் வெளிப்படுத்தி கிறிஸ்துவின் வருகைக்காக மனுக்குலத்தை ஆயத்தம் செய்த வரவாற்றைப் பழைய ஏற்பாட்டில் காண்கிறோம்.

புதிய ஏற்பாடு நூல்கள் யாவை?
நற்செய்தி நூல்கள், திருத்தூதர் பணி, அப்போஸ்தலர் திருமுகங்கள், திருவெளிப்பாடு ஆகிய 27 நூல்கள்.

நற்செய்தி நூல்கள் யாவை?
புனித மத்தேயு, புனித மாற்கு, புனித லூக்கா , புனித அருளப்பர் எழுதிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தி நூல்கள் நான்கு.

புதிய ஏற்பாட்டு நூல்கள் நமக்கு கூநுவது என்ன?
கிறிஸ்துவின் மீட்புப் பணி, துவக்கத் திச்சபையின் வரலாறு, கிறிஸ்தவ வாழ்க்கை முறை முதலியவற்றை எடுத்துக் கூறுகின்றன

7.திருவருட் சாதனங்கள்

கிறிஸ்து தாம் ஆற்றிய மீட்பை நமக்குக் கொண்டுவர நம்முள் அவரே இன்று செயல் புரிகிறார். இச்செயலால் கிறிஸ்து நம்மோடு மிக நெருங்கிய முறையில் உறவு கொண்டு நம்மைப் புனிதப் படுத்துகிறார். மனித வாழ்வின் ஒவ்வொரு முக்கிய கட்டத்திலும் கிறிஸ்து இவ்வாறு நம்மோடு தொடர்பு கொண்டு திருச்சபையை வளரச் செய்கிறார்.மனித வாழ்வின் ஏழு முக்கிய கட்டங்களில் கிறிஸ்து ஆற்றும் செயல்களே ஏழு திருவருட்சாதனங்கள்.

திருவருட்சாதனங்கள் வழியாக நாம் என்ன பெறுகிறோம்?
உயிர்த்த கிறிஸ்துவின் செயலால் அருள் உயிரைப் பெறுகிறோம்.

திருவருட் சாதனங்கள் யாவை?
திருமுழுக்கு, உறுதிப்பூசுதல், நற்கருணை, ஒப்புரவு, நோயில் பூசுதல், குருத்துவம், திருமணம் ஆகிய ஏழுமே திருவருட்சாதனங்கள்.

திருமுழுக்கில் கிறிஸ்து என்ன செய்கிறார்?
கடவுளின் அன்பு மக்களாகப் பிறக்கும் புதுப்பிறப்பை அளிக்கிறார்.

திருமுழுக்குப் பெறும் முதியோர்கள் எவ்வாறு ஆயத்தம் செய்ய வேண்டும்?
கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டு தம் பாவங்களுக்காக மனம் வருந்தி அவர் காட்டும் வழியில் தம் வாழ்க்கையைத் திருத்தி அமைக்க உறுதி கொள்ள வேண்டும்.

உறுதிப்பூசுதலால் கிறிஸ்து நம்முள் என்ன செய்கிறார்?
உறுதிப்பூசுதலால் கிறிஸ்து தூய ஆவியினாலும் அவருடைய கொடைகளினாலும் நம்மை நிரப்புகிறார்.

தூய ஆவி நமக்கு எவ்வாறு உதவுகிறார்?
விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருந்து கடவுள் மேல் நிறைவான அன்பு கொண்டு, கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக விளங்க உதவி அளிக்கிறார்.

இயேசு திவ்விய நற்கருணையை எப்பொழுது ஏற்படுத்தினார்?
தமது கடைசி இராவுணவின் போது ஏற்படுத்தினார்.

இயேசு திவ்விய நற்கருணையை எப்படி ஏற்படுத்தினார்?
இயேசு தாம் கையளிக்கப்பட்ட இரவில் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, அதைப்பிட்டு, தம் சீடருக்கு அளித்துக் கூறியதாவது; "அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள், ஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்" .
அவ்வண்ணமே உணவருந்தியபின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடருக்கு அளித்து, அவர் கூறியதாவது; "அனைவரும் இதை வாங்கி பருகுங்கள், ஏனெனில் இது புதிய நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தத்தின் கிண்ணம். இந்த இரத்தம் பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும். இதை என் நினைவாகச் செய்யுங்கள்" இவ்வாறு ஏற்படுத்தினார்.
இவ்வார்த்தைகளைத் திருப்பலி ப் பூசையில் குரு சொல்லும் போது சாதாரண அப்பம் கிறிஸ்துவின் திரு உடலாகவும் திராட்சை இரசம் அவருடைய இரத்தமாகவும் மாறுகிறது.

நற்கருணையை இயேசு ஏன் ஏற்படுத்தினார்?
தம் சாவு, உயிர்த்தெழுதல் இவற்றின் நினைவாக ஏற்படுத்தினார்.

நற்கருணை எப்படி இவற்றின் நினைவாக உள்ளது?
சிலுவைப் பலியையும் அதில் ஆண்டவர் காட்டிய அளவற்ற அன்பையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது. அதே சமயத்தில் அப்ப இரசவடிவில் நம் ஆன்ம உணவாகவும் பானமாகவும் இருக்கிறது.

நற்கருணையில் கிறிஸ்து தம்மையே நமக்கு உணவாகத் தந்தது ஏன்?
கிறிஸ்து தம்மை நமக்காக பலியாக்கியதால், தம்மைப் பலி உணவாகவும் தந்தார்.

நற்கருணை வாங்குவோர் என்ன நிலையில் இருக்க வேண்டும்?
சாவான பாவம் இல்லாமல் கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்க வேண்டும்.

திருப்பலியின் இருபெரும் பகுதிகள் யாவை?
இறைவார்த்தை வழிபாடு
நற்கருணை வழிபாடு

திருப்பலியில் பங்கெடுப்பது எவ்வாறு?
வெறும் பார்வையாளர்கள் போல் இராமல் திருச்சடங்குகள், செபங்கள் முதலியவற்றை நன்றாகப் புரிந்து கொண்டு செயல் முறையில் பங்கு பெற வேண்டும்.

ஒப்புரவால் கிறிஸ்து நம்முள் என்ன செய்கிறார்?
கடவுளுக்கும் மனிதனுக்கும் விரோதமாக நினைவாலும் சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் நாம் செய்த பாவங்களை கிறிஸ்து மன்னிக்கிறார். அன்புத் தந்தையாகிய கடவுளோடு நம்மை மீண்டும் உறவு கெபள்ளச் செய்கிறார். திருச்சபை என்னும் குடும்பத்தில் அன்பின் பிணைப்பை வளர்க்கிறார்.

ஒப்புரவு பெறும் முறை என்ன?

செய்த பாவங்களை நினைவில் கொண்டு வருதல்.
அவற்றிற்காக மனம் வருந்துதல்.
இனி பாவம் செய்வதில்லை என்று தீர்மானித்தல்.
குருவிடம் பாவங்களை அறிக்கையிடுதல்.
நாம் பாவ மன்னிப்பு அடைந்துள்ளோம் என்பதைக் காட்ட நமக்கு தீமை செய்தோரை நாமும் மன்னித்தல்.

நோயில் பூசுதலால் கிறிஸ்து நம்மிடம் கிறிஸ்து எவ்வாறு பேசுகிறார்?
நோயில் பூசுதலால் கிறிஸ்து நலம் தரும் மருத்துவராக நம்மைச் சந்திக்கிறார். நம் பாவங்களையும் அவற்றிற்குரிய தண்டனைகளையும் மன்னித்து நம்மை விண்ணகப் பேரின்பத்திற்காக தயாரிக்கிறார்.

குருத்துவத்தில் கிறிஸ்து என்ன செயலாற்றுகிறார்?
விசுவாசத்தில் சிலரைத் திருச்சபைக்கு மேய்ப்பாளராக நியமிக்கிறார். நற்செய்தியை அறிவிக்கவும், திருப்பலியை நிறைவேற்றம், பாவங்களை மன்னிக்கவும், திருவருட்சாதனங்களை நிறைவேற்றவும் அவர்களுக்கு அதிகாரத்தை விங்குகிறார்.

திருமணத்தால் கிறிஸ்து என்ன செயலாற்றுகிறார்?
ஆணையும் பெண்ணையும் கணவன் மனைவியாக இணைத்து குடும்பத்தை ஒரு சிறு பகுதியாக அமைக்கிறார். அவர்களுடைய வாழ்விலும், பிள்ளைகளைப் பெற்று வளர்த்து உருவாக்குவதிலும் புனிதமடைய அவாகளுக்கு அருள் வழங்குகிறார். தாம் திருச்சபைக்கு அன்பு செய்வது போல அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செய்ய அருள் தருகிறார்.

கடவுளுக்கு உகந்த வாழ்க்கை நடத்த அவர் நமக்குத் தந்த கட்டளைகள் யாவை?
இறைவன் நமக்கருளிய கட்டளைகள் பத்து.

1. உன் ஆண்டவராகிய கடவுள் நாமே. நம்மைத்தவிர வேறு கடவுள் இல்லை.
2.கடவுளின் திருப்பெயரை வீணாகச் சொல்லாதே.
3.கடவுளின் நாள்களைப் புனிதமாக அனுசரி.
4.தாய், தந்தையை மதித்துப் பேணு.
5.கொலை செய்யாதே.
6.மோக பாவம் செய்யாதே.
7.களவு செய்யாதே.
8.பொய் சாட்சி சொல்லாதே.
9.பிறர் தாரத்தை விரும்பாதே.
10.பிறர் உடைமையை விரும்பாதே.

இந்தப் பத்துக் கட்டளைகளும் இரண்டு கட்டளைகளில் அடங்கும்;

அனைத்திற்க்கும் மேலாகக் கடவுளை அன்பு செய்.
உன்னை நீ அன்பு செய்வது போல, அனைவரையும் அன்பு செய்.
திருச்சபையில் தற்போது உள்ள ஒழுங்கு முறைகள் யாவை?
ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் திருப்பலி ஒப்புக் கொடு.
ஆண்டுக்கு ஒரு முறையாவது ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறுக.
பாஸ்காக் காலத்தில் ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்கு கொண்டு, நற்கருணை உட்கொள்.
குறிப்பிட்ட நாட்களில் புலால் தவிர்த்து, நோன்பு போன்ற தவ முயற்சிகளை மேற்கொள்.
குறைந்த வயதிலும், நெருங்கிய உறவிலும் திருமணம் செய்யாதே.
உன் ஞான மேய்ப்பர்களுக்கு உன்னாலான உதவி செய்.

இக்கட்ளைகளை நாம் மீறினால் என்ன செய்ய வேண்டும் ?
பாவம் செய்தவர்களாவோம். இதனால் கடவுளோடு கொண்டிருக்க வேண்டிய அன்புறவு பாதிக்கப்படுகிறது. சமுதாயத்தோடு கொண்டிருக்க வேண்டிய நல்லுரவும் பாதிக்கப்படலாம்.

சாவான பாவம் என்றால் என்ன?
கனமான காரியத்தில் கடவுள் கட்டளையை மனமார மீறி அவரது அன்பை முறித்துக் கொள்வது சாவான பாவம்.

அற்பப் பாவம் என்றால் என்ன?
கனமான காரிமோ, முழு அறிவோ, முழு சம்மதமோ, இன்றி செய்யப்படும் குற்றம் அற்பப்பாவம்.

நம் அன்றாட வாழ்வில் கடவுNhடுள்ள நட்புறவைக் காப்பாற்றி வளர்க்க பெரிதும் துணைபுரிபவை யாவை?
செபமும் திருஅருட்சாதனங்களும்.

நாம் எவ்வாறு செபம் செய்ய வேண்டும்?
குழந்தை தந்தையிடம் பேசுவதுபோல் கடவுளுடன் அன்புடன் உiராட வேண்டும்.

கிறிஸ்து நமக்கு கற்றுத் தந்த செபம் எது?
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.உம்முடைய இராச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

நம் அன்றாட வாழ்க்கையில் கிறிஸ்துவின் சீடர்களாக வாழ்வது எப்படி?
கிறிஸ்துவைக் கண்முன் கொண்டு, அவரிடம் விளங்கிய அன்பு, உண்மை, நீதி, உணர்வு, நீதி, அஞ்சாமை, கடமை, கற்பு முதலிய புண்ணியங்களைக் கடைபிடித்து வாழ்வதால்.

கிறிஸ்தவக் குடும்பம் கிறிஸ்துவுக்கு எவ்வாறு சான்று பகர வேண்டும்?
மணமக்கள் ஒருவருக்கொருவர் தன்னலதற்ற அன்பும் பிரமாணிக்கமும் காட்டுவதால், தங்கள் பிள்ளைகளுக்குக் கிறிஸ்தவ வாழ்வில் சிறந்ந எடுத்துக்காட்டாக விளங்குவதால், அவர்களை விசுவாசத்தில் வளர்ப்பதால், கிறிஸ்துவைப் பின்பற்றி, பிள்ளைகளும், திருச்சபையின் வளர்ச்சிக்காகவும் சமூக நலத்திற்க்காகவும் தன்னலமின்றி பாடுபடுவதால்.

கிறிஸ்தவ வாழ்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குவோர் யார்?
கடவுளின் அன்னையாகிய புனித கன்னி மரியாளும் மற்ற புனிதர்களும்.

மனிதனின் கடைசி கதி

சாவுடன் மனித வாழ்வு முடிவடைகின்றதா? சாவுக்குப்பின் வாழ்விருந்தால் அது எப்படி இருக்கும்? மனிதன் எக்காலத்திலும் கேட்டு வரும் கேள்விகள் இவை. கிறிஸ்து இதைப்பற்றிய உண்மைகளை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

கிறிஸ்தவன் சாவை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?
சாவுடன் எல்லாம் முடிவடைவதில்லை. சாவு விண்ணக வாழ்வின் தொடக்கமே. ஆகவே சாவின் மீது வெற்றிகொண்ட நம் மீட்பராகிய கிறிஸ்துவைச் சந்திக்கும் தருணமென கிறிஸ்தவர் சாவை எதிர் கொள்ள வேண்டும்.

சாவுக்குப்பின் நடப்பது பற்றி கிறிஸ்தவ படிப்பினை என்ன?
தனித்தீர்வை நடக்கும். அதற்குப்பின் சிலர் தம் பாவங்களுக்காக உத்தரிக்கின்றனர்; இது உத்தரிக்கும் நிலை. சிலர் கடவுளை நேர் முகமாகக் கண்டு மாட்சி அடைகின்றனர். இதுவே நித்திய பேரின்ப நிலை. இறைவன் அன்பை முற்றும் புறக்கணித்தோர் நித்திய தண்டனைக்கு உள்ளாவர். இதுவே நரகம்.

உலக முடிவு மீட்புத் திட்டத்தின் இறுதிக் கட்டம். நல்லவர்கள் உலக முடிவிலே நித்திய வாழ்வுக்கென உயிர்த்தெழுவர். பாவிகள் நித்திய தண்டனைக்கென உயிர்த்தெழுவர். பின் பொதுத் தீர்ப்பு நடைபெறும். கிறிஸ்து படைப்புக்கெல்லாம் ஆண்டவர் என்பது அப்போது தெளிவாய் புலப்படும்.