இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.(எபிரேயர் 13:8)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

இறைவாக்குத்தத்தம்

நீ கைநெகிழப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டாய்: உன் வழியே எவரும் பயணம் செய்யவில்லை:
நானோ உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்: தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்:
தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்.
(எசாயா 60:15)

  மாலை ஆராதனை

புனித கன்னி மரியாளின் பரிந்துரைக்காக

முதல்வர் : இறைவா எனக்குத் துணையாக வந்தருளும். சபை : ஆண்டவரே எனக்கு உதவி செய்ய விரைந்தருளும். பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாதவதாக. ஆதியில் இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென். அல்லேலூயா.

புகழ் பாடல் :

ஆழியின் மேல்ஒளிர் விண்மீனே,
அவனியில் இறைவனின் அன்னையும் நீர்,
என்றும் கன்னிகை ஆனவளும்
எழிலார் விண்ணக வாயிலும் நீ !

தூதுவன் வாழ்த்துரை ஏற்றாய் நீ,
தூய நல் அமைதியை அளிப்பாய் நீ
ஆதியில் ஏவாள் செய்வினையை
அகற்றி அவள் பெயர் மாற்றிடுவாய் !

பாவத் தளைகளை அறுத்திடுவாய்
பரிவுடன் குருடர்க் கொளிதருவாய்
தீமைகள் அனைத்தும் போக்கிடுவாய்
திருவருட் கொடைகள் பெற்றளிப்பாய் !

தாயென உன்னைக் காட்டிடுவாய்,
தனயர் எமக்காய் பிறந்தவரும்,
இயேசுவாய் உன்னிடம் உதித்தவரும்,
எம்குறை உன்வழி ஏற்றிடுவார் !

நிகரில் லாத கன்னிகையே,
நிர்மல சாந்த குணவதியே,
பாவப் பொறுத்தல் பெற்றமக்கு
பண்போடு புனிதம் அருள்வாயே !

புனித வாழ்க்கை வாழ்ந்திடவே,
பயணம் நன்கு முடிந்திடவே,
அதனால் இயேசுவை யாம் கண்டு,
அகமகிழ்ந்திடவே அருள்வாயே !

வானகத் தந்தையை வாழ்த்திடுவோம்
வானுயர் கிறிஸ்துவை வணங்கிடுவோம்
பரிசுத்த ஆவியை பணிந்திடுவோம்
பாகுபாடற்ற புகழ் சாற்றிடுவோம் - ஆமென்.

சங்கீதமாலை :

(மூன்று சங்கீதங்களை இசையுடன் பதிலுரைப் பாடல்போல அனைவரும் பாடும் விதத்தில் கீழ்வரும் தியான வாக்கியங்களோடு பாடவும்)
தியான வாக்கியம் 1 : கன்னிமரியே, நீர் பேறுபெற்றவள். ஏனெனில் அனைத்தையும் படைத்தவரையே உம் உதிரத்தில் தாங்கினீர்.(அல்லேலூயா)

சங்கீதம்:

என் ஆயனாய் இறைவன் இருக்கின்ற போது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?

என்னையவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆஹா என்றும் ஆஹா
என்றென்றும் இன்பமல்லவா
என்னையவர் அன்பால் நிரப்பியதால்
எல்லார்க்குமே நண்பனாய் ஆக்கியதால்
என்னுள்ளமே ஆஹா... என்தேவனே ஆஹா...
எந்நாளும் புகழ்ந்திடுமே

தியான வாக்கியம் 1 : கன்னிமரியே, நீர் பேறுபெற்றவள். ஏனெனில் அனைத்தையும் படைத்தவரையே உம் உதிரத்தில் தாங்கினீர்.(அல்லேலூயா)
தியான வாக்கியம் 2 : உம்மைப் படைத்தவரை நீர் பெற்றெடுத்தீர், எனினும், என்றென்றும் நீர் கன்னியாகவே இருக்கிறீர்.(அல்லேலூயா)

சங்கீதம்:

ஆண்டவர் தம் திருத்தலத்தில்
அஞ்சாமல் நிற்பவர் யார்?
அருள் நிறைந்த அவர் ஆசிகளை
அன்றாடம் பெறுபவர் யார்?

மாசற்ற வாழ்க்கை நடத்துபவன்
மாண்புறு செயல்களை செய்கிறவன்
அவனை இறைவன் என்றும் அணைத்து
ஆசீர்வதித்திடுவார்

தீயோர் கூட்டத்தில் சேராதவன்
தீமைகள் எதுவும் செய்யாதவன்
அவனை இறைவன் என்றும் அணைத்து
ஆசீர்வதித்திடுவார்

தியான வாக்கியம் 2 : உம்மைப் படைத்தவரை நீர் பெற்றெடுத்தீர், எனினும், என்றென்றும் நீர் கன்னியாகவே இருக்கிறீர்.(அல்லேலூயா)
தியான வாக்கியம் 3 : அன்னையே, உம் கடவுளாகிய ஆண்டவரால் நீர் ஆசீர்வதிக்கப் பெற்றீர், உம் வழியாக வாழ்வின் முழுமையில் நாங்கள் பங்கெடுக்கிறோம். (அல்லேலூயா)

சங்கீதம்:

அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு
எந்த துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு
குன்று அசையலாம் குகைகள் பெயரலாம்
உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம்
என்ன நிலைதான் ஆனாலும்
எந்தன் அன்பு மாறாது
அஞ்சாதே அஞ்சாதே உன்னைநான் காப்பேன் (2)

அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ
சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ
அன்னை உன்னை மறந்தாலும்
உன்னை நானோ மறவேனே
அஞ்சாதே அஞ்சாதே உன்னைநான் காப்பேன் (2)

தியான வாக்கியம் 3 : அன்னையே, உம் கடவுளாகிய ஆண்டவரால் நீர் ஆசீர்வதிக்கப் பெற்றீர், உம் வழியாக வாழ்வின் முழுமையில் நாங்கள் பங்கெடுக்கிறோம். (அல்லேலூயா)

ஆண்டவரின் அருள்வாக்கு :

(திருவிழாக்குரிய திருப்பலியைச் சார்ந்த திருமுகப் பகுதியை வாசிக்கலாம் அல்லது வேறு பொறுத்தமான பகுதியை வாசிக்கலாம்)

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக் : உம்மோடும் இருப்பாராக.
குரு : புனித லூக்கா எழுதிய பரிசுத்த நற்செய்தியிலிருந்து வாசகம்.
மக் : ஆண்டவரே உமக்கு மகிமை.
அதன்பின் மரியா புறப்பட்டு ய+தேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்றார்.

குரு : இது கிறிஸ்துவின் நற்செய்தி !
மக் : கிறிஸ்துவே உமக்குப் புகழ்!
( மறைவுரை முடிந்ததும், மெனமாகச் சற்று நேரம் தியானிக்கவும்.)

மரியாளின் பாடல் :

முதல்: இதோ இந்நாள் முதல் எல்லாத் தலைமுறைகளும் எனைப்பேருடையாள் எனப் போற்றுமே)
ஏனெனில் வல்லமை மிக்கவர் எனக்கரும் பெரும் செயல் பல புரிந்துள்ளார்.)

என் ஆன்மா இறைவனையே)
ஏற்றிப் போற்றியே மகிழ்கின்றது)
என் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது)

தாழ்நிலை இருந்த தம் அடியவரை)
தயையுடன் கண்கள் நோக்கினார்)
இந்நாள் முதலாம் தலைமுறைகள் -2)
எனைப் பேறுடையாள் என்றிடுமே)

ஏனெனில் வல்லமை மிகுந்தவரே)
எனக்கரும் செயல் பல புரிந்துள்ளார்)
அவர் தம் பெயரும் புனிதமாகும -2;
அவருக் கஞ்சுவோர்க் இரக்கமாகும்

முதல்: இதோ இந்நாள் முதல் எல்லாத் தலைமுறைகளும் எனைப்பேருடையாள் எனப் போற்றுமே
ஏனெனில் வல்லமை மிக்கவர் எனக்கரும் பெரும் செயல் பல புரிந்துள்ளார்.

மன்றாட்டு :

முதல் : தம் மகனுக்குத் தாயாக மரியாளைத் தேர்ந்தெடுத்து எல்லாத் தலைமுறைகளும் அவளைப் பேறுடையாள் எனப் போற்ற வேண்டுமென விரும்பினார் தந்தையாம் இறைவன், அவரைப் புகழ்ந்து நம்பிக்கையுடன் மன்றாடுவோமாக.

முதல் : தந்தையாம் இறைவா! கன்னிமரிக்காக அரும்பெரும் செயல்களை புரிந்து, விண்ணக மகிமைக்கு அவரை ஆன்மாவோடும் உடலோடும் அழைத்துச் சென்றீரே, கிறிஸ்துவின் மகிமையில் பங்கு பெரும் நம்பிக்கையை உம் பிள்ளைகளின் இதயங்களில் நிரப்பியருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
சபை : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

முதல் : அன்பின் இறைவா! எங்கள் தாயாம் மரியாவின் மன்றாட்டுகளால் பிணியாளரைக் குணமாக்கி, வருந்துவோருக்கு ஆறுதல் அளித்து, பாவிகளையும் மன்னித்து, எல்லார்க்கும் அமைதியையும் மீட்பையும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
சபை : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

முதல் : நிறைவாம் இறைவா! நீர் மரியாவை அருள் நிரப்பினீர் எல்லா மனிதர் மீதும் உம் நிறை ஆசியைப் பொழிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
சபை : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

முதல் : உமது திருச்சபை, முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் ஒன்றுபட்டு இருப்பது போல இயேசுவின் அன்னையாகிய மரியாவோடு விசுவாசிகள் அனைவரும் செபத்தில் தொடர்ந்து இணைந்திருக்கச் செய்ய அருள்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
சபை : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

முதல் : நித்திய தந்தையே! நீர் கன்னிமரியாவை விண்ணக அரசியாக முடி சூட்டி உயர்த்துள்ளீரே, இறந்தோர் அனைவரும் உமது அரசில் நுழைந்து, உமது புனிதர்களோடு என்றும் வாழ்ந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
சபை : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எல் : பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். -ஆமென்.

சபைச் செபம் :

முதல் : செபிப்போமாக.

எங்கள் இறைவனாகிய ஆண்டவரே உம் அடியார்களாகிய நாங்கள் உள்ளத்திலும் உடலிலும் என்றும் நலம் பெற்று மகிழ நீர் விரும்புகின்றீர். என்றும் கன்னியாகிய மகிமைமிக்க எங்கள் அன்னை மரியாளின் வேண்டுதலால், நாங்கள் இன்றைய துன்பங்களிலிருந்து விடுதலை அடைந்து, நிலையான பேரின்பம் பெற்று மகிழச் செய்தருளும். உம்மோடு.
(அல்லது திருப்பலி நூலிலுள்ள விழாவுக்குரிய சபைச் செபம்)
முடிவுரை :

முதல் : ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து எல்லாத் தீமைகளினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
சபை : ஆமென்.
முதல் : ஆண்டவரை வாழ்த்துவோமாக.
சபை : இறைவனுக்கு நன்றி.



திவ்ய நற்கருணை ஆசிர்



ஆராதனை:

விண்ணில் வாழும் எம் தந்தாய்
உம்மை ஆராதிக்கின்றோம்
எம்மை ஏற்றுக் கௌ;ளுமே
உம்மை அன்பு செய்கின்றோம் (2)

எம்மை மீட்ட இயேசுவே
உம்மை ஆராதிக்கின்றோம்
எம்மை ஏற்றுக் கௌ;ளுமே
உம்மை அன்பு செய்கின்றோம் (2)

இறைவனின் ஆவியே
உம்மை ஆராதிக்கின்றோம்
எம்மை ஏற்றுக் கௌ;ளுமே
உம்மை அன்பு செய்கின்றோம் (2)

எழுந்தேற்றப் பாடல்

அன்பின் தேவ நற்கருணையஎpலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையில் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திடத் துணைசெய்வீர்

1. அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
பொற்புடன் அப்ப ரசகுணத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவன் ஆனீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்

2. கல்வாரி மலையன் சிகரமதில்
கனிவுடன் தினம் எமை நிலைநிறுத்தும்
நற்கருணை விசுவாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
இளமையின் பொலிவால் திருச்சபையும்
யாவரும் வாழத் தயை புரிவீர்

என்தேவனே

என் தேவனே என் தேவனே
நான் உம்மை விசுவசிக்கிறேன்
நான் உம்மை ஆராதிக்கிறேன்
நான் உம்மை நம்புகிறேன்
நான் உம்மை சிநேகிக்கிறேன்

உம்மை விசுவசியாதவர்க்காகவும்
உம்மை ஆராதிக்காதவர்க்காகவும்
உம்மை நம்பாதவர்க்காகவும்
உம்மை சிநேகிக்காதவர்க்காகவும்
உமது மன்னிப்பைக் கேட்கிறேன்

மாண்புயர்

மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்
பழைய நியம முறைகள் அனைத்தும்
இனி மறைந்து முடிவு பெறுக
புதிய நியம முறைகள் வருக
புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாக் குறைகள் நீக்க
விசுவாசத்தின் உதவி பெறுக

பிதா அவர்க்கும் சுதன் இவர்க்கும்
புகழ்ச்சியோடு வெற்றியார்க்கும்
மீட்பின் பெருமை மகிமையோடு
வலிமை வாழ்த்து யாவும் ஆக
இருவரிடமாய் வருகின்றவராம்
புனித ஆவியானவர்க்கும்
அளவில்லாத சம புகழ்ச்சி
என்றுமே உண்டாகுக -ஆமென்.

குரு: வானின்று இறங்கிவந்த அப்பமிதுவே!
அனைவரும்: இனிமை யாவும் தன்னகத்தே கொண்ட அப்பமிதுவே
ஜெபிப்போமாக: இறைவா இந்த வியப்புக்குறிய திருவருட்சாதனத்திலே, உம்முடைய திருப்பாடுகளின் நினைவை எங்களுக்கு விட்டுச்சென்றீர். உமது திருவுடல், திருஇரத்தம் ஆகிய இவற்றின் மறைபொருளைக் வணங்கும் நாங்கள், உம் மீட்பின் பலனை இடைவிடாமல் கண்டு அனுபவிக்க அருள் புரியும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்யும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் -ஆமென்

தேவ துதிகள்

தேவன் -துதிக்கப்படுவாராக !
அவருடைய பரிசுத்த நாமம் -துதிக்கப்படுவாராக !
யெ;யான தேவனும் மெய்யான மனிதனுமான இயேசுகிறீஸ்து நாதர் -துதிக்கப்படுவாராக
இயேசுவின் நாமம் -துதிக்கப்படுவாதாக !
அவருடைய மிகவும் பரிசுத்த இருதயம் -துதிக்கப்படுவாதாக !
அவருடைய விலைமதியாத திரு இரத்தம் -துதிக்கப்படுவாதாக !
பீடத்தின் மிகவும் பரிசுத்த திருவருட்சாதனத்தில் இயேசு நாதர் -துதிக்கப்படுவாராக !
தேற்றுகிறவராகிய பரிசுத்த ஆவி -துதிக்கப்படுவாராக !
தேவனுடைய தாயாகிய மிக்கப் பரிசுத்த மரியம்மாள் -துதிக்கப்படுவாளாக !
அவருடைய புனித மாசில்லாத உற்பவம் -துதிக்கப்படுவாதாக !
அவளுடைய மகிமை நிறை விண்ணேற்பு -துதிக்கப்படுவாதாக !
கன்னியும் தாயுமான மரியம்மாளின் நாமம் -துதிக்கப்படுவாதாக !
அவளுடைய மிக்க விரத்த பத்தாவாகிய புனித சூசையப்பர் -துதிக்கப்படுவாராக !
தமது தூதர்களிடத்திலும் புனிதர்களிடத்திலும் தேவன் -துதிக்கப்படுவாராக !

மாதாவே துணை:

மாதாவே துணை நீரே உம்மை
வாழ்த்திப் போற்றவரம் தாரும்
இதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா
ஏற்றன்பாக எனைப்பாரும்

1. வானோர் தம் அரசே தாயே - எம்
மன்றாட்டைத் தயவாய் கேளும்
ஈனோர் என்றெம்மை நீர் தள்ளாமல்
எக்காலத்துமே தற்காரும்

2. ஒன்றே கேட்டிடுவோம் தாயே - யாம்
ஓர் சாவான் பாவந்தானும்
என்றேனும் செய்திடாமற் காத்து -எம்மை
சுத்தர்களாய் பேணும்