இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.(எபிரேயர் 13:8)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

இறைவாக்குத்தத்தம்

நீ கைநெகிழப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டாய்: உன் வழியே எவரும் பயணம் செய்யவில்லை:
நானோ உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்: தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்:
தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்.
(எசாயா 60:15)

      திருமுழுக்க்கு

திருமுழுக்கு என்னும் திருவருட்சாதனம் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையாக அமைகிறது. கத்தோலிக் திருமறையின் மற்ற அருட்சாதனங்களைப் பெற நுழைவாயிலாகவும் அமைகிறது. திருமுழுக்கின் வழியாக ஜென்மப்பாவம், கர்ம பாவம் நீக்கப் பட்டு நாம் கடவுளுடைய பிள்ளைகள் ஆகிறோம். மேலும் தூய ஆவியில் நாம் புதுப்பிறப்படைந்து கடவுளின் உரிமைப்பேறாகும் பேற்றினைப் பெறுகிறோம். கத்தோலிக்கத் திருமறையின் அங்கத்தினர் ஆகிறோம்.

திருமுழுக்கின் வழியாக நாம் புதுப்பிறப்படைவதோடு நாம் பெற்றுக்கொண்ட விசுவாசத்தை மனிதர்முன் வெளிப்படையாக அறிக்கையிட கடமைப்பட்டவர்களாகிறோம். நாம் 'கிறிஸ்தவனாக' 'கிறிஸ்தவளாக' வாழ அழைக்கப்படுகிறோம்.

தண்ணீர்:

தண்ணீர் பொதுவாக நாம் வாழ்வின் இன்றியமையாத பொருளாக அமைகிறது. தண்ணீரானது அனேக வேளைகளில்; சுத்தப்படுத்தப் பயன்படுத்துகிறோம். திருமுழுக்கில் தண்ணீரானது முக்கிய இடம் பெறுகிறது. தண்ணீர் பாவங்களை கழுவி கிறிஸ்துவில் நாம் மறுபிறப்படைந்துள்ளதையும் கிறிஸ்துவில் புதுவாழ்வு பெற்று அவரது உயிர்பிலும் பங்கு பெறுவோம் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.


திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய 
சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா?இறந்த 
கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு
பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம்.
(உரோமையர் 6:4-5)

ஆயத்த எண்ணை பூசுதல்:

திருமுழுக்குப் பெறுவோர் கிறிஸ்துவில் புதுப்படைப்பாக மாற்ற வேண்டி இப் புனித தைலம் ப+சப்படுகிறது.

வாக்குறுதிகளும் விசுவாச பிரமாணமும்:

சாத்தானையும் அதன் செயல்களையும் விட்டுவிடுவதாகவும் கிறிஸ்தவ விசுவாசத்தைக் கடைப்பிடிப்பதாகவும் பெற்றோரும் ஞானத் தாய் தந்தையரும் வாக்குறுதி கொடுக்கின்றனர்.

திருத்தைலம் ப+சுதல்:

திருமுழுக்குப் பெற்றவர் புதுப்பிறப்படைந்த கிறிஸ்துவில் பெற்ற புதுவாழ்வில் கடைசிவரை நிலைத்து நிற்க வேண்டி 'கிறிஸ்மா' தைலம் ப+சப்படுகிறது.


வெண்ணிற ஆடை:

புதுப்படைப்பாக மாறியதையயும் அம்மாசற்ற வாழ்வை உங்கள் உறவினரின் சொல்லாலும் முன்மாதிரியாலும் மாசுபடாமல் முடிவில்லா வாழ்வுக்கு கொண்டுபோய் கொண்டுபோய் சேர்க்க அருள் வேண்டப்படுகிறது.

எரியும் திரி:

பெற்றோர்களே, ஞானத்தாய் தந்தையரே உங்கள் குழந்தைகளின் உள்ளத்தில் அணையாது காக்கும்பொருட்டு உங்களிடம் இந்த ஒளி ஒப்படைக்கப்படுகிறது. கிறிஸ்துவினால் ஒளிபெற்று திருமுழுக்குப் பெற்றவர் ஒளியின் மக்களாய் என்றும் வாழ்வார்களாக. விசுவாசத்தில் இவர்கள் நிலைத்திருந்து ஆண்டவர் வரும்போது புனிதர் அனைவரோடும், வான்வீட்டில் அவரை எதிர்கொண்டு செல்லத் தகுதிபெறுவார்களாக.

எப்பேத்தா (திறக்கப்படு):

குரு : செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும் ஆண்டவர் இயேசு செய்தருளினார், நீ விரைவில் அவரது வார்த்தையை தந்தையாகிய இறைவனின் புகழும், மகிமையும் விளங்கக் காதல் கேட்கவும், அவ்விசுவாசத்தை நாவால் அறிக்கையிடவும் அவரே செய்தருள்வாராக.

தங்கள் குழந்தைகளுக்கு திருமுழுக்கு பெறவேண்டும் பெற்றோர்களிடம் திருச்சபை எதிர்பாhர்ப்பவை:
1. திருமுழுக்கு அருட்சாதனத்தின் போது பெற்றோரும் ஞானத் தாய், தந்தையும் கொடுத்த வாக்குறுதிகளின் படி அவர்கள் விசுவாசத்தின் சிறந்த மாதிரியாய் விளங்க முயற்சி செய்யவேண்டும்.
2. பிள்ளைகள் வளரும் போது அவர்களுக்கு கத்தோலிக்க விசுவாசத்தை கற்றுக்கொடுக்க போதிய சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வதும், பிள்ளைகளை கத்தோலிக்க பள்ளிகளில் சேரச் செய்யவும், போதிய மறைக்கல்வியை கற்றுக் கொடுப்பதும் அல்லது கற்றுக்கொடுக்க வழிசெய்வதும் முக்கிய கடமையாகும்.
3. குடும்பமாக ஜெபிப்பதும், சிறு பக்தி முயற்சிகளை சொல்லிக் கொடுப்பதும் எல்லாவற்றிகும் மேலாக கிறிஸ்தவ வாழ்வின் மதிப்பீடுகளான அன்பு, மகிழ்சி, சமாதானம், மன்னித்தல், பொறுமை, தாழ்ச்சி, நம்பிக்கை, விசுவாசம் ஆகிய புண்ணியங்களை பெற்றோர் பின்பற்றுவதும் பிள்ளைகளை அவ்வாறு வளர்பதும் பெற்றோரின் கடமையாகும்.
4. ஞானப் பெற்றோர்கள் நல்ல கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக தேர்ந்தெடுப்பது பெற்றோரின் கடமை. ஞானப் பெற்றோர்களும் தங்களின் ஞான்ப பிள்ளைகளுக்கு சிறந்த முன் மாதிரியாய் இருப்பதும் ஞான காரியங்களில் அவர்களை ஊக்குவிப்பதும் முக்கிய கடமையாகும்.