இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.(எபிரேயர் 13:8)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

இறைவாக்குத்தத்தம்

நீ கைநெகிழப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டாய்: உன் வழியே எவரும் பயணம் செய்யவில்லை:
நானோ உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்: தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்:
தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்.
(எசாயா 60:15)

பொதுவான  நவநாள் ஜெபங்கள்

இயேசுவை நோக்கி இரக்கத்திற்கான ஜெபம்

ஆண்வராகிய இயேசுவே, எங்கள் மேல் இரக்கம் வையும். எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்களைத் தீர்ப்பிடாதேயும். எங்கள் மூதாதையர், எங்கள் சகோதர, சகோதரிகள் வழி வந்த எல்லாக் குற்றங் குறைகளையும், பாவங்களையும், மன்னித்தருளும். எங்களுக்கு வரப்போகும் தண்டனையை விலக்கி விடும். எங்களை உமது சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு உமது ஆவியால் எங்களை வழி நடத்தியருளும்.

பிற்பகல் 3 மணிக்கு பொருத்தமான சிறு ஜெபம்

இயேசுவே! நீர் மரீத்தீர். ஆனால் இந்த மரிப்பு ஆன்மாக்களின் வாழ்க்கை ஊற்றாகவும், இரக்கத்தின் கடலுமாகவும், வழிந்தோடியது. ஓ! வாழ்வின் ஊற்றே! கண்டு பிடிக்க முடியாத இறைவனின் இரக்கமே! உலக முழுமையும் உம்முள் அடக்கி உமது இரக்கம் முழுமையும் எம்மீது பொழிந்தருளும். இயேசுவின் இதயத்திலிருந்து இரக்கத்;தின் ஊற்றாக வழிந்தோடும் இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

இயேசு நாதருடைய திருஇருதயத்துக்கு தங்கள் குடும்பங்களை ஒப்புக் கொடுக்கிற ஜெபம்

இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்துவ குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும், சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம்.
நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து, இப்போதும் எப்போதும் உமது திரு இருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும்.தவறி எங்களில் யாராவது உமது திரு இருதயத்தை நோகச் செய்திருந்தால் அவர் குற்றத்துக்கு நாங்கள் நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திரு இருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக் கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும்.இதுவுமன்றி உலகத்திலிருக்கும் எல்லா குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருத்தாப்பியருக்கு ஊன்று கோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்குத் தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள், அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக.
இயேசுவின் இரக்கமுள்ள திரு இருதயமே! சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே, இந்த விசாரணையிலுள்ள சகல பிள்;ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும் தெய்வ பயத்தையும் வளரச் செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரணசமயத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம்.
திவ்விய இயேசுவே, முறை முறையாய் உமது திருச்சிநேகத்தில் ஜீவித்து மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும். - ஆமென்.

ஆபத்தான வேளையில்அன்னையை நோக்கி ஜெபம்

நிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே! மாசணுகாத்தாயே உம்மை நாங்கள் இவ்வீட்டின் ஆண்டவளாகவும், எஜமாட்டியாகவும் தெரிந்து கொள்கிறோம். கொள்ளை நோய், இடி, மின்னல் புயல் காற்றிலிருந்தும் விமானத்தாக்குதல் விரோதிகளின் பகை குரோதத்திலிருந்தும் இவ்வீட்டைப் பாதுகாத்தருளும், மிகவும் அன்புள்ள தாயே! இங்கு வசிக்கிறவர்களை ஆதரியும். அவர்கள் இங்கிருந்து வெளியில் போகும் போதும், உள்ளே வரும் போதும் அவர்களுக்குத் துணையாயிருந்து சடுதி மரணத்தினின்றும் அவர்களை இரட்சியும், எங்களை சகல பாவங்களிலும் ஆபத்துக்களிலும் நின்றும் காப்பாற்றும். இவ்வுலகில் நாங்கள் சர்வேஸ்வரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து உம்மோடு கூட நித்தியத்திற்கும் அவரின் இன்பமான தேவ தரிசனத்தை அடைந்து சுகிக்க எங்களுக்காகப் பிரார்த்தித்தருளும் தாயே! - ஆமென்.

வேளாங்கன்னி மாதாவுக்கு நவநாள் செபம்

மகா பரிசுத்த கன்னிகையே, இயேசுவின் தாயாராயிருக்குமாறு நித்தியமாக பரிசுத்த மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட தூய மணியே! குடவுளுடைய திருப்புதல்வன் உமது திரு உதரத்தில் அவதாரமான போதும், ஒன்பது மாதமளவாக அவரை உமது மாசணுகாத கருவில் தாங்கிய போதும், நீர் அடைந்த பேரின்பத்தை உமது ஏழை ஊழியனாகிய அடியேன் உமக்கு நினைவூட்டுகிறேன். எனது அன்பினாலும், செபங்களாலும் நீர் அப்போது அனுபவித்த இன்பத்தை மீண்டும் புதுப்பிக்கவும் கூடுமானால் அதிகரிக்கவும் விரும்புகிறேன்.
துன்பப்படுகிறவர்களுக்கு இரக்கம் மிகுந்த அன்னையே! நீர் அப்போது அனுபவித்த இப்பெருமகிழ்ச்சியைக் கொண்டாடுபவர்களுக்கு நீர் வாக்களித்துள்ள விசே: உதவியையும், பாதுகாப்பையும் எனக்கு இத்துன்ப நேரத்தில் தந்தருளும். உமது தெய்வப் புதல்வனுடைய அளவற்ற வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கேட்பவருக்கு அளிப்பதாக அவர் தந்த வாக்குறுதியை நினைத்து, உமது பெரும் வல்லமை நிறைந்த மன்றாட்டுக்களில் உறுதி கொண்டுள்ளேன். இந்த நவநாளின் போது நான் செய்யும் விண்ணப்பங்களை கடவுளுடைய திருச்சித்தத்திற்கு ஏற்றவையானால் அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும். நான் கேட்கும் மன்றாட்டுகள் கடவுளுடைய திரு விருப்பத்திற்கு மாறானதாயிருந்தால் எனக்கு எவ்வரம் மிகவும் தேவையோ அதையே அடைந்து தந்தருளும்.
(இங்கு உம்மன்றாட்டு இன்னதெனச் சொல்லவும்)
தேவனின் தாயே! இப்போது உமக்கு வணக்கமாக நான்செய்யும் இந்நவநாளை உம்மில் நான் கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையை காட்டுவதற்காகவே செய்கிறேன். இயேசு மனிதனான போது உமது திரு உள்ளம் அடைந்த தெய்வீக மகிழ்ச்சியை நினைத்து அதற்கு வணக்கமாக நான் செய்யும் இந்நவநாளையும் இப்போது நான் சொல்லப் போகும் அருள் நிறை செபத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்ளும்.
(இங்கு அருள் நிறை செபத்தை ஒன்பது முறை சொல்லவும்)
கடவுளின் மாட்சி பெற்ற அன்னையே! அருள் நிறைந்தவள் என முதன் முதல் அதிதூதர் கபிரியேல் சொன்னபோது கொண்டிருந்த பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துல்களைக் கூறுகிறேன். ஏற்றுக் கொள்ளும்.
நீர் அணிந்திருக்கும் முடியில் என் செபங்கள் அத்தனையும் விண்மீன்களெனத் துலங்குமாறு விரும்புகிறேன். வருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். உமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு நாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும் அது போன்ற உமது அன்பையும் பார்த்து, ஏழையான எனது செபத்தை ஏற்று என்மன்றாட்டை அடைந்து அடைந்து தந்தருளும் தாயே! - ஆமென்.

திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளுக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்

எங்கள் இருதய கமலாயங்களில் மேலான கிருபாசனங்கொண்டு எழுந்தருளியிருக்கிற திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! பரலோக பூலோக அரசியே! கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! பாவிகளின் தஞ்சமே! உமது இன்பமான சந்திதானம் தேடி வந்தோம். உம்முடைய கருணையை வேண்டிவந்தோம். உம்முடைய திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் தாயே! உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ! எங்கள் அன்பான அன்னை நீரல்லவோ! எங்கள் ஆதரவும், சந்தோஷமும் எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ! நீர் எங்களுடைய தாயார் என்பதை எங்களுக்கு காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை மாதா பாராட்டுவாளோ? உம்மைத்தேடி வந்த நிர்ப்பாக்கியருக்கு உதவியாயிரும். அழுகிறபேர்களை அரவணையும். அல்லல் படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும். நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்? நீர்; ஆதரிக்காவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? தஞ்சமென ஓடி வரும் அடியோர் மேலே தயவாயிரும். தயை கடலே தவித்தவருக்குத் தடாகமே! தனித்தவருக்கு தஞ்சமே. உம்முடைய சந்நிதானம் தேடிவந்தோம். ஆறு, காடுகளைக் கடந்து ஓடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளாலே வாடி நொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் வேண்டுதல் பலனற்றதாய் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ அம்மா? அன்பான அம்மா! அருமையான அம்மா! அடியோருக்கு அன்பான அம்மா! தஸ்நேவிஸ் மரியே அம்மா! எங்கள் குடும்பங்களை முழுதும் இன்று உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். எங்களை ஏற்று ஆசீர்;வதித்தருளும் தாயே - ஆமென்.

புனித சூசையப்பருக்கு செபம்(1900 ஆண்டுகள் பழமையானது)

புனித சூசையப்பரே! உம் அடைக்கலம் மிகவும் மகத்தானது. வல்லமை மிக்கது. இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. ஏனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும் உம் அடைக்கலத்தில் வைக்கிறேன்.
உம் வல்லமை மிக்க பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய சேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும் செலுத்தக் கடவேன்.
புனித சூசையப்பரே! உம்மையும் உம் திருக்கரங்களில் உறங்கும் சேசுவையும் சதா காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன் உம்மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும். மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும். - ஆமென்.

வல்லமை மிக்க செபம்

நெஞ்சுக்கும் மார்புக்கும் நிறைந்த சிலுவை! நீச பிசாசுகளை விரட்டிடும் சிலுவை - சிலுவை அடியில் தலையை வைத்தேன். திருவிரலால் உடலை வைத்தேன். எனக்கு உதவியாக வாரும் திருச்சிலுவை ஐயாவே! - ஆமென்.

குருசான குருசே!
கட்டுண்ட குருசே!
காவலாய் வந்த குருசே!
தொட்டியிலும், தண்ணீரிலும், சிங்கார மேடையிலும், துன்பப்படுத்தும் பிசாசுகளையும், எங்களை அறியாமல் எங்களுக்குத் தீமை செய்கிறவர்களையும் துரத்தி விடும் சிலுவையே! மூன்றாணி! மூன்றாணி! மூன்றாணி!

தூய அந்தோணியாரை நோக்கிபொது மன்றாட்டு

எங்கள் பாதுகாவலரான தூய அந்தோணியாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே கிறிஸ்து பாலகனை கையில் ஏந்தும் பேறுபெற்ற தூயவரே, திருமறையை ஆர்வமுடன் போதித்த சிறந்த போதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரே, இறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரே, துன்புறுவோரின் துயர் துடைப்பவரே, பாவியராகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம்.
புதுமை வரம் பெற்றிருக்கும் எம் ஞானத்தந்தையே! நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள உம் பிள்ளைகளின் மனறாட்டுக்களை கேட்டருளும். உமது ஆதரவை நாடி வந்துள்ள உம் அடியார் எம்மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம், பிணி, வறுமை, சிறுமை ஆகியற்றால் வாடி வந்திருக்கும் எங்களுக்கு உதவியருளும். அழுவோரின் கண்;ணீரைத் துடைத்தருளும். நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும்.
எங்கள் அன்புக்குரிய தூய அந்தோணியாரே! இறைவனின் திருவுளப்படி எப்பொழுதும் நீர் நடந்தது போல நாங்களும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரது திருவுளத்துக்கு இசைந்து நடக்கவும், நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போல, நாங்களும் ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும், செய்யாமலும் தீமையை அகற்றி புனிதராய் வாழவும், திருச்சபை தளைக்கவும், நாடு செழிக்கவும், நாங்கள் நேர்மையுடன் உழைக்கவும், மக்கள் யாவரும் மெய்யங்கடவுளைக் கண்டறிந்து, தக்க முறையில் அவரை வழிபடவும் எங்களுக்காக இயேசுவை வேண்டியருளும்.
எங்களையும் எங்கள் குடும்பங்களையும், எங்கள் தொழில் முயற்சிகளையும், உழைப்பினையும் ஆசீர்வதித்தருளும். எங்கள் விண்ணப்பங்கள் நிறைவேற எங்களுக்காக இறைவனை மன்றாட வேண்டுகிறோம். - ஆமென்.

கண் நோய் தீர்க்கும்புனித பிரகாசியம்மாளுக்கு ஜெபம்

கன்னிகையும் வேத சாட்சியுமான பக்தி மிகுந்த புனித பிரகாசியம்மாளே! நீர் இறைவனிடம் பெற்றுக்கொண்ட அருட்பலத்தால் இளமையிலே புண்ணிய வழியில் நடந்து தெய்வீக அழகு பெற்றுத் திகழ்ந்தீரே, உமது கன்னிமையை ஆண்டவராகிய இயேசுவுக்கு அர்ப்பணித்து, பெருந்துன்ப துயரங்கள் உம்மைத் தாக்கிய போதும் அசையாத தூணாக நின்று கன்னிமையை களங்கமில்லாமல் காத்து உமது ஆத்துமத்தை அவருக்குக் கையளித்தீரே, சீர்கூசா நகரத்தின் மகிமையும், அடைக்கலமுமான கன்னிகையே, பக்தியுடன் உம்மை நாடிவரும் அனைவருக்கும் பல நன்மைகளையும் அற்புதங்களையும் ஆற்றி வரும் அற்புத வரத்தியே நீர் எங்களுக்காக இறைவனை மன்றாடி நாங்கள் ஞான ஒளி பெற்று பாவ வழிகளை விலக்கி, இயேசுவின் அன்புப் பாதையில் நடந்து இறுதியாய் மோட்ச பேரின்பம் அடைய வரம் பெற்றுத் தருவீராக! (1 பர, 1அருள், 1திரி,)

புனித மிக்கேல் தேவதூதருக்குஜெபம்

அதிதூதரான புனித மிக்கேலே, யுத்த நாளில் எங்களைக் காப்பாற்றும் பசாசின் பட்டனத்திலும் கண்ணிகளிலும் நின்று எங்களை காத்தருளும்.
இறைவன் அதைக் கடிந்து கொள்ளும்படி தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். வானுலகசேனைக்கு அதிபதியாயிருக்கின்ற நீர்; ஆன்மாக்களை நாசஞ் செய்யும்படி உலகெங்கும் சுத்தித்திரியும் சாத்தானையும் மற்றும் பசாசுகளையும் தெய்வ வல்லமையைக் கொண்டு நரகபாதாளத்திN;ல தள்ளிவிடும்.
- ஆமென்.

புனித யூதாததேயுசை நோக்கி ஜெபம்

அப்போஸ்தலரும் வேத சாட்சியுமான புனித யூதாததேயுசே! நீர் நமது ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய உறவினருள் ஒருவராயிருக்கிறீர்! புண்ணியத்திலும் புதுமை வரங்களிலும் மகா கீர்த்திப் பெற்றவர்! உம்மை மன்றாடுகிறவர்களுக்காகத் தவறாமல் மனுப் பேசுகிறீர்! திக்கற்றுத் தயங்குவோருக்கு விசே:ப் பாதுகாவலர் நீர்;! நம்பிக்கை இழந்தவர்களின் நம்பிக்கை நீர்! இந்த உமது வல்லபத்தில் நம்பிக்கை வைத்து இதோ நான் உம்மை நாடி வருகிறேன். எனக்கு மிகவும் அவசரமான இந்த வேளையில் உதவிப் புரியும்படி உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன். (வேண்டியதை விசுவாசத்துடன் கேட்கவும்)
ஓ! தயாள இருதய ததேயுசே! இனிமேல் உள்ள என் வாழ்நாட்களில் உம்மை எமது பாதுகாவலாக வணங்குவேன் என்றும், எங்கள் அவசரங்களில் உதவில் செய்ய, நீர் வல்லமை மிகுந்தவரும், தீவிரமாய் பரிந்து பேசுகிறவருமாய் இருக்கிறீர்; என்ற உமது பக்தியை மக்களிடையில் பரவச் செய்வேன் என்றும் உறுதியாய் வாக்களிக்கிறேன்.
புனித யூதாததேயுசே, எங்களுக்காகவும் உமது உதவியை மன்றாடும் அனைவருக்காகவும் வேண்டிக்கொள்ளும் - ஆமென்.
(ஒரு. பர, அருள், திரி)

குழந்தை சேசுவின் புதுமை நிறைந்த செபம்:

அற்புத குழந்தை சேசுவே! அமைதி அற்ற எங்கள் உள்ளங்களின் மேல் உம் கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து, பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை அளித்தருளுமாறு உம்மை இறைஞ்சுகிறோம்.
(வேண்டிய வரத்தை இங்கு குறிப்பிடுக)
எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை, சோதனைகளையும், நீக்கி உம் குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உம் ஆறுதலையும் ஆதரவையும் பெற்று தந்தையோடும் தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக! குழந்தை சேசுவே! என் செபத்தை ஏற்றருளும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். - ஆமென்.
தேர்வு எழுதுவோருக்காக ஜெபம்
ஞானத்தின் ஊற்றே இறiவா! எங்களின் இந்த இளம் வயதில் பல நன்மைகளை எங்களுக்குப் பொழிந்து வழிநடத்தி வந்த நேரங்களை நன்றியோடு நினைக்கிறோம்.. எங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வுகளை எழுதவிருக்கும் நாங்கள், இந்த இறுதி நாட்களில் எங்கள் பாடங்களைக் கடின முயற்சியுடன் படித்து, தேர்வுகளைச் சிறப்பாக எழுதி முடிக்கவும், அனைத்து தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறவும், தேவையான ஞானத்தையும், நினைவாற்றலையும், தெளிந்த மனதையும் உடல் உள்ள வலிமைகளையும் எங்களுக்கு கொடுத்தருளுமாறு உம்மைத் தாழ்மையோடு வேண்டுகிறோம். ஞானத்தின் இருப்பிடமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
- ஆமென்.

புனித தந்தை பியோவுக்கு நவநாள் ஜெபம்

ஐந்து காய வரம் பெற்ற முதற்குருவே, புனித தந்தை பியோவே, அனைத்து ஆன்மாக்களும் விண்ணகம் சேர, தொடர்ந்து பரிந்து பேசி, பாவிகளை மனம் திருப்பி, பரமனிடம் சேர்க்க உறுதியளித்தவரே, நற்கருணை நாதரோடு ஒன்றித்த ஒப்பற்றவரே, செபமாலை பக்தியை சாத்தனை எதிர்க்கும் ஆயுதமாகக் கொண்டவரே, தவத்தை ஏற்று ஏழ்மை, தாழ்ச்சி, பிறரன்புப் புண்ணியங்களில் சிறந்து, இடைவிடா மன்றாட்டால் தீராத நோய்களைக் குணமாக்கும் வரம்பெற்ற வள்ளலே, எதிர்காலத்தை முன்னறிவிக்கும் இறைவாக்கினரே, ஐந்து காயங்களிலிருந்து நறுமணம் பரப்பும் நாயகரே, ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றும் நல்லவரே, இறைவனால் இவ்வுலகுக்கு அருளப்பட்ட மாபெரும் புனிதரான தூய பியோவே, இதோ வேதனைகளோடும், பிரச்சனைகளோடும், தீராத நோய்களோடும், வாழ்க்கை சுமைகளோடும் உம்மை நாடி தேடி வரும் எங்களைக் கண்ணோக்கி பாரும். நாங்கள் விரும்பிக் கேட்கும் மன்றாட்டுக்களை (. . . . ) இறைவனிடம் பரிந்து பேசி தயவாய் எமக்கு பெற்றுத் தாரும்.
அகிலம் போற்றும் அற்புதத் தந்தை புனித பியோவே, இயேசுவின் ஐந்து காயங்களை தனது உடலில் சுமந்து, வேதனைகளை அனுபவித்து துன்பத்தில் இறைவனை உணர்ந்தவரே, நாங்களும் எங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களை ஏற்று புனித வாழ்வு வாழவும், உலகிற்கு அமைதியைக் கொணரவும் தேவையான வரங்களை இறைமகன் இயேசுவிடமிருந்து பெற்றுத் தாரும். - ஆமென்.

புனித சவேரியாரின் 500வது பிறந்த ஆண்டு நினைவு வல்லமையுள்ள சிலுவை ஜெபம்

ஓ! பரிசுத்த சிலுவையே எங்கள் ஏக நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறோம். ஓ! பரிசுத்த சிலுவையே இரக்கத்தின் தேவனே உமது அடியார்களாகிய எங்களையும் எங்கள் குடும்பங்களையும் காப்பாற்றியருளும்.
பரிசுத்த சிலுவைக்கு
நம்பிக்கை நவநாள்
பரிசுத்த சிலுவையே இந்த எனது வேண்டுதலை உமது மகா பரிசுத்த ஐந்து திருக்காயங்களில் நம்பிக்கையுடன் வைக்கிறேன்.
(இங்கே வேண்டுதலை குறிப்பிடவும்)
பரிசுத்த சிலுவையே எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் கண்ணோக்கி பார்த்தருளும். பின் உமது திருவுளப்படி ஆகட்டும், ஆண்டவரே உமது சித்தத்தை ஏற்றுக் கொள்கிறேன். உமது இரக்கத்துக்கு என்னையே கையளிக்கிறேன். திருச்சிலுவையே நீர் என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர். ஓ! பரிசுத்த சிலுவையே என்ஏக நம்பிக்;கையை உமது பேரில் வைக்கிறேன். பரிசுத்த சிலுவையே என் பேரில் உமக்குள்ள அன்பை விசுவசிக்கிறேன். பரிசுத்த சிலுவையே உமது இராச்சியம் வருக. ஓ! பரிசுத்த சிலுவையே நான் அநேக உதவி உபகாரங்களை உம்மிடம் கேட்டிருக்கிறேன். ஆனால் அனைத்து உதவிகளையும் உமதிடமிருந்து பெற்றிருக்கிறேன். அதற்காக இறைவனுக்கு முழு மனதுடன் நன்றி செலுத்துகிறேன். ஆனால் இப்பொழுது எனக்கு மகா அவசியமான இந்த விண்ணப்பத்திற்காக உருக்கமாக மன்றாடுகிறேன். அதை ஏற்று உமது ஐந்து திருக்காயங்களுக்குள் வைத்தருளும். நித்திய பிதா திரு இரத்தத்தால் மூடப்பட்டிருக்கும் இவ்விண்ணப்பத்தை பார்க்கும்போது அவர் அதை மறுக்கமாட்டார். பரிசுத்த சிலுவையே இனிமேல் அது என்னுடைய விருப்பமல்ல, உம்முடையதே. ஓ! பரிசுத்த சிலுவையே எனது நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன். என்னை ஒரு போதும் கலங்க விடாதேயும். ஆமென்.
(தினமும் ஜெபிக்கவும்)

அப்போஸ்தலரான புனித தோமையாரை நோக்கி செபம்

எங்கள் இந்திய நாட்டில் திருமறையைப் போதிக்க வரம் பெற்ற் புனித தோமையாரே, நீர் ஆண்டவர் மீது கொண்டிருந்த பற்றுதலால் அவரோடு இறக்கவும் துணிந்திருந்தீரே! காணாமல் நம்புவோரின் வீர விசுவாசத்தையும், சாவுக்கும் அஞ்சாத தீர அன்பையும், எங்களுக்குப் பெற்றுத் தந்தருளும். நீர் எங்கள் நாட்டில் திருமறையைப் போதித்து, அரும் அடையாளங்களால் எங்கள் முன்னோர்களில் கணக்கற்ற பேரை மெய் மறையின் ஒளிக்குக் கொண்டு வந்தீர்! இன்னும் இந்த நாட்டில் எங்கள் சகோதரர்களில் எத்தனை கோடிப்பேர் இயேசுவை அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் மனந்திரும்பி, இந்தியா முழுவதும் ஒரே மந்தையாய், கிறிஸ்துவின் அன்பரசின்கீழ் வருவது எப்போது? விசுவாசத்தில் உறுதியடைந்த அப்போஸ்தலரே, எங்கள் அனைவரையும் விசுவாசத்திலும் பக்தி ஒழுக்கத்திலும் உறுதிப்படுத்தி, எங்களில் துலங்கும் விசுவாசத்தின் ஞானஒளி எங்கும் பரவி, இந்தியா முழுவதும் கிறிஸ்து கொண்டு வந்த விடுதலையையும் அமைதியையும் பெற்று அவருடைய அரசின்கீழ் அணிவகுத்து நிற்கும்படியாக இறைவனை மன்றாட உம்மை வேண்டுகிறோம். ஆமென்.