இளைஞர்களே நீங்கள் இறையரசின் அரசர்கள்





“உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு. அதனால் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்”. (2 கொரி 7.16) இயேசு கிறிஸ்து உண்மையான அரசர். ஆனால் அவரது அரசு இவ்வுலக அரசுகள் போன்றது அல்ல. அவ் அரசின் தனிப் பண்புகள்; உண்மையின் அரசு, நீதியின் அரசு, அருளின் அரசு, புனிதத்தின் அரசு, அன்பின் அரசு, அமைதியின் அரசு, வாழ்வின் அரசு, என பரந்து செல்கிறது. அவர் ஆயுத பலத்தால் அல்ல, அன்பின் பலத்தால் ஆட்சி செய்கிறார். இன்றைய சூழலில், தலைமைத்துவம் என்பது முக்கியமானது. எம் வாழ்வில் இயங்கும் சக்தியாக இளையோரும், அவர்களை இயக்கும் சக்தியாக அநுபவமுள்ள முதியவர்களும் விளங்க வேண்டும். இறைவன் படைப்பில் எதுவும் இழிந்ததும்இல்லை. கெட்டதும் இல்லை. எனவே இருளை பழிப்பதை விட்டு ஒளியை ஏற்றுவது மேலானது. சேற்றில் விழும் நிழலில் சேறு படிவதில்லை. நெருப்பின் மீது விழும் நிழல் எரித்து விடுவதில்லை. புலம்பெயர் சூழலில் பெற்றோரின் கண்கானிப்பால் கெட்டு விடாது இருப்பது, இளைஞர்களுக்கு சிறப்பு என்றாலும், இலட்சிய இளைஞர்களுக்கு அது போதாது. உப்பு கடலில் பிறந்து வாழும் மீனை சமைக்கயில், அன்னையர்கள் உப்பு போட்டு சமைப்பதன் காரணம், உப்பு கடலில் வாழும் மீனின் உடலில் உப்பு ஒட்டுவதில்லை. தப்பான சூழலில் வாழும் இளைஞர்களின் சரியான குடும்ப வாழ்வு இருந்தால், தப்பு படியாமல் பாதுகாக்கலாம். உப்பு சூழலை மாற்றுவதற்கு எந்த முயற்சியும் மீன் எடுப்பதில்லை. ஆனால் சரியான உருவாக்கம் உள்ள இளையோர், தெளிந்த சிந்தனையுடன், தங்களை சூழ்ந்துள்ள சமூக அழுக்குகளை கழுவி, தூய்மை செய்ய முன்வர வேண்டும். இளைஞர்களே அனுபவம் கொண்ட பெரியோரின் உதவியுடன் உன் வாழ்வின் ஓட்டைகளை ஒரு புல்லாங்குழலின் ஓட்டையாக மாற்றிவிடு புலம்பெயர் சமூகம் புதுபுது ராகங்களை வாசித்து கொள்ளட்டும் ஒளி படாத கல் சிலை ஆவதில்லை உழைப்பில்லாத கனவு நனவாகவில்லை எனவே நம்பிக்கையோடு உழைத்து முன்னேற சமூகத்தை முன்னேற்ற முன்வருவோம் நம்பிக்கை என்பது மக்களும் உயிர் சுவாசம் எனவே இறை நம்பிக்கையின் உன் வாழ்வை நிலை நிறுத்துவோம் உண்மை நீதி புனிதம் அன்பு அமைதி கொண்ட அரசை நிலைநாட்டுவோம் இளைஞர்களே! அனுபவம் கொண்ட பெரியோரின் உதவியுடன், உம் வாழ்வின் ஓட்டைகளை, ஒரு புல்லாங்குழலின் ஓட்டையாக மாற்றிவிடு. புலம்பெயர் சமூகம் புதுபுது ராகங்களை வாசித்து கொள்ளட்டும். உளி படாத கல் சிலை ஆவதில்லை. உழைப்பில்லாத கனவு நனவாவதில்லை. எனவே நம்பிக்கையோடு உழைத்து முன்னேற, சமூகத்தை முன்னேற்ற, முன்வருவோம். நம்பிக்கை என்பது மக்களுக்கு உயிர் சுவாசம்.எனவே இறை நம்பிக்கையில் எம் வாழ்வை நிலை நிறுத்துவோம். உண்மை, நீதி, புனிதம், அன்பு, அமைதி கொண்ட அரசை நிலைநாட்டுவோம். “நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல. நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்கிறோம்”. (2 கொரி 5.7)

[தரவேற்றம்: 2020-11-22 16:54:38]