இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

எல்லா பதிவுகளையும் பார்க்க பக்க இலக்கங்களை அழுத்தவும்

25 ஆண்டுகளாக தொலைதூரம் தாண்டித் தொடரும் எம் பயணம்

தொடுவானம், இது ஒரு நம்பிக்கையின் தொடர். வானம் வசப்படும் என்பது போல, இன்னும் கொஞ்சம் நடந்தால், அதை அடைய முடியும் என்ற நம்பிக்கையின் தொடர். குறிக்கோள் இல்லாமல் வாழ்பவர்கள், அவ்விடத்திலேயே முடங்கி விடுகின்றனர். இயங்குதல் வாழ்தல், முடங்குதல் மரணம்.... எனவே, தொடுவானம் நோக்கி.. இலக்கு நோக்கி.. நடக்க வேண்டும். அதற்கு எல்லையே கிடையாது. நடவுங்கள்....... []

அதிவண. பேரருட் கலாநிதி விக்ரர் ஆண்டகைக்கு ஆன்மீக பணியகம் அஞ்சலிக்கின்றது.

அதிவண. பேரருட் கலாநிதி விக்ரர் ஞானப்பிரகாசம் அமதி ஆண்டகை. * இலங்கையின் பாஷையூர் கத்தோலிக்க திரு அவையின் மைந்தனும், அமலமரி தியாகிகள் சபையைச் சார்ந்தவரும், பாகிஸ்தான் குவேற்றா மறைமாவட்டத்தின் ஆயராகவும் பணியாற்றிய பேரருட் கலாநிதி விக்ரர் ஞானப்பிரகாசம் அமதி ஆண்டகை அவர்கள் இன்று 12/12/2020 பாகிஸ்தானில் காலமாகிவிட்டார். * ஆண்டகை அவர்கள் 1940/11/21ல் யாழ்ப்பாணம் பாஷையூரில் பிறந்தார். *... []

"புனித யோசேப்பு ஆண்டு”:

திருத்தந்தை அருளாளர் ஒன்பதாம் பயஸ் அவர்கள், 1870ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி புனித யோசேப்பு அவர்களை, உலகளாவிய திருஅவையின் பாதுகாவலராக அறிவித்தார். புனித யோசேப்பு, உலகளாவிய திருஅவையின் பாதுகாவலர் என்று அறிவிக்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 08, இச்செவ்வாயன்று, “Patris corde” அதாவது, “ஒரு தந்தையின் இதயத்தோடு”... []

எம் கனவின் முதல் கட்டம் நனவானது

“எல்லா சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காக கிறிஸ்து இயேசு வழியாக கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. (1 தெச 5:18) ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம், 1987 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு, பல இயக்குனர்கள் காலத்தில் பல சமூக பணிகளை ஆற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. 30 வருடம் கடந்து இதன் ஓர்... []

இளைஞர்களே நீங்கள் இறையரசின் அரசர்கள்

“உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு. அதனால் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்”. (2 கொரி 7.16) இயேசு கிறிஸ்து உண்மையான அரசர். ஆனால் அவரது அரசு இவ்வுலக அரசுகள் போன்றது அல்ல. அவ் அரசின் தனிப் பண்புகள்; உண்மையின் அரசு, நீதியின் அரசு, அருளின் அரசு, புனிதத்தின் அரசு, அன்பின் அரசு, அமைதியின் அரசு,... []