மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 9
வேதாகமப் பகுதி : மத்தேயு நற்செய்தி 17, 18, 19
முடிவுத் திகதி : 2014-09-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. இயேசு தோற்றம் மாறியபோது உடனிருந்த சீடர்கள் யார்?

அந்திரேயா
யாக்கோபு
யோவான்
யூதாஸ்
பேதுரு

2. மோசேவும், எலியாவும் இயேசுவோடு உரையாடியபோது பேதுரு இயேசுவிடம் கூறியது என்ன?

நாம் இங்கேயே இருப்பது நல்லது
உமக்கு மட்டும் கூடாரம் அமைக்கட்டுமா?
உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்கள் அமைக்கட்டுமா?
எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்
என் அன்பார்ந்த மைந்தர் இவரே

3. நிலைவாழ்வை அடைய செல்வரான இளைஞருக்கு இயேசு கூறிய அறிவுரை என்ன?

கொலை செய்யாதே; விபச்சாரம் செய்யாதே
களவு செய்யாதே; பொய்சான்று சொல்லாதே
தாய் தந்தையை மதித்து நட
அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக
உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு

4. இயேசு வரியாக செலுத்திய பணத்தின் பெயர் என்ன?

தெனாரியம்
திராக்மா
ஸ்தாத்தேர்
தாலந்து
எபிரேய வெள்ளி நாணயம்

5. விண்ணரசில் மிகப் பெரியவர் யார் என்ற சீடர்களின் வினாவிற்கு இயேசு கூறிய பதில் என்ன?

தாய் தந்தையை மதித்து நட
மனந்திரும்பி சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள்
அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக
சிறுபிள்ளையை போல தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப்பெரியவர்
சிறுபிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.

6. கோடிட்ட இடத்தை நிரப்புக:

-------------------- நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் ---------------- தடைசெய்யப்படும்; ----------------- நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் --------------- அனுமதிக்கப்படும்.

விண்ணுலகில், மண்ணுலகிலும், விண்ணுலகில், மண்ணுலகிலும்
மண்ணுலகில், விண்ணுலகிலும், மண்ணுலகில், விண்ணுலகிலும்
நரகத்தில், மோட்சத்திலும், நரகத்தில், மோட்சத்திலும்
யெருசலேமில், விண்ணுலகிலும், யெருசலேமில், விண்ணுலகிலும்
இங்கே, அங்கேயும், இங்கே, அங்கேயும்

7. பாவத்தில் விழச்செய்வோருக்கு ஆண்டவர் கூறுவது என்ன?

உங்கள் கண் உங்களை பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள்
பாவம் செய்ய காரணமாய் இருப்போருக்குக் கேடு
எந்திரக் கல்லைக் கட்டி தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது நல்லது
ஐயோ! பாவத்தில் விழச்செய்யும் உலகுக்குக் கேடு
உங்கள் கையோ காலோ உங்களைப் பாவத்தில் விழசெய்தால் அதை வெட்டி எறிந்துவிடுங்கள்


8. உங்களுக்கு எதிராக பாவம் செய்யும் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் நீங்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும்?

தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள்
இல்லையென்றால் உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள்
திருச்சபையிடம் போங்கள்
திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்
அவர்களை மன்னியுங்கள்

9. தனக்கு எதிராக பாவம் செய்பவரை இயேசு எத்தனை முறை மன்னிக்க கூறுகிறார்?

7 முறை
பல தடவை
700 தடவை
70 தடவை 7 முறை
7 தடவை 70 முறை

10. மன்னிக்காத பணியாளருக்கு அரசர் கூறியது என்ன?

உன்னை மன்னிக்கிறேன்
எல்லாவற்றையும் உனக்கு திருப்பி தந்து விடுகிறேன்
பொல்லாதவனே! நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்த கடன் முழுவதையும் உனக்கு தள்ளுபடி செய்தேன்
நான் இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன் பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்கவேண்டும் அல்லவா?
அனைத்து கடனையும் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படையுங்கள்

11. "கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்து கொள்ளாதிருப்பதே நல்லது" என்ற சீடர்களின் கூற்றுக்கு இயேசுவின் பதில் என்ன?

அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ளமுடியாது
சிலர் பிறவியிலேயே மண உறவுகொள்ள முடியாதவராய் இருக்கின்றனர்
வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர்
சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கி கொள்கின்றனர்
இதை ஏற்றுக்கொள்ளக்கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்

12. கோடிட்ட இடத்தை நிரப்புக:

-------------------- என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் -------------------- இத்தகையோருக்கே உரியது.

ஏழைகளை, விண்ணரசு
சிறுபிள்ளைகளை, விண்ணரசு
பெரியோர்களை, விண்ணரசு
சிறுபிள்ளைகளை, மண்ணரசு
மாற்று திறனாளிகளை, விண்ணரசு

13. "நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?" சீடர்களுக்கு இயேசுவின் பதில் என்ன?

புதுப்படைப்பின் நாளில் மானிடமகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.
என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ராயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள்
முதன்மையானோர் பலர் கடைசியாவர்; கடைசியானோர் பலர் முதன்மையாவர்
என் பெயரின்பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர்
நிலையான வாழ்வை உரிமைப்பேறாக அடைவர்

14. விண்ணகத் தந்தையின் திருவுளம் என்ன?

இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது
அனைவரையும் மன்னிக்கவேண்டும்
எல்லோரும் ஒன்றாக இருப்பார்களாக
தாய் தந்தையை மதித்து நட
உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும்

15. சீடர்களால் பேய் பிடித்திருந்த சிறுவனை ஏன் குணமாக்கமுடியவில்லை?

நம்பிக்கைக் குறைவுதான் காரணம்
அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்புற்றதால்
இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலுமேயன்றி, வேறு எதனாலும் வெளியேறாது
அடிக்கடி அவன் தீயிலும் தண்ணீரிலும் விழுவதால்
சீடர்கள் செபம் செய்யாததால்