மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 99
வேதாகமப் பகுதி : நீதித்தலைவர்கள் அதி 1 & 2
முடிவுத் திகதி : 2022-03-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. யூதா பாலைநிலம் எங்கே உள்ளது ?

பேரீச்ச நகரில்
ஆராத்துக்குத் தெற்கில்
தெபீரின் கிழக்கே
நெகேபில் மலை அடிவாரத்தில்
எபிரோனின் தெற்கே

2. சிமியோனின் மக்களினால் கொல்லப்பட்ட கானானியர் வாழ்ந்த ஊர் எது?

தெபீர்
செப்பாத்
ஓர்மா
எபிரோன்
பெசெக்

3. யூதாவின் மக்களினால் சமவெளியில் வாழ்ந்தவர்களை விரட்ட முடியாமல் போனது ஏன்?

அவர்களிடம் அம்பும் வில்லும் இருந்ததினால்
அவர்களிடம் துப்பாக்கி இருந்ததனால்
அவர்களிடம் போர் வீரர் குறைவாக இருந்ததனால்
அவர்களிடம் இரும்புத்தேர்கள் இருந்ததனால்
அவர்கள் சமவெளியில் வாழ்ந்த்தனால்

4. எபிரோன் காலேபுக்கு ஏன் கொடுக்கப்பட்டது ?

ஆனாக்கின் மூன்று புதல்வர்களை விரட்டி அடித்ததால்
மோசே கூறி இருந்ததனால்
சமவெளியில் வாழ்ந்தனால்
கானானியரிடம் தோல்வியடைந்ததால்
ஆண்டவர் மக்களுடன் இருந்ததனால்

5. எருசலேமில் எபூசியருடன் வாழ்ந்தவர்கள் யார்?

யூதா மக்கள்
கானானியர்
அந்தோனிபெசெக்
பெஞ்சமின் மக்கள்
யோசேப்பின் வீட்டார்

6. "உனக்குக் கருணை காட்டுவோம்" எனக் கூறியவர்கள் யார்?

அந்தோணி பெசேக்
யூதா
காலேபு
கேனியர்
யோசேப்பின் ஒற்றர்கள்

7. பெத்தேலின் முன்னால் பெயர் என்ன?

ஓர்மா
செப்பாத்
தெபீர்
லூசு
காலேபு

8. இத்தியரின் நாட்டிற்குச் சென்று லூசு நகரை கட்டியவன் யார்?

காலேபு
ஒத்தனியேல்
பென்யமின் மக்கள்
யூதா மக்கள்
ஒற்றர்களால் கருணை காட்டப்பட்டவன்

9. ஆசேரின் மக்களோடு அந்நாட்டில் இணைந்து வாழ்பவர் யார்?

யூதா மக்கள்
கேனியர் குலத்தவர்
பெஞ்சமின் மக்கள்
கானானியர்
யோசேப்பு விட்டார்

10. கெசேரில் கானானியரொடு இணைந்து வாழ்ந்தவர்கள் யார்?

எப்ராயிமின் மக்கள்
இஸ்ரவேல் மக்கள்
யூத மக்கள்
கேனியர் குலத்தவர்
லூசு மக்கள்

11. எமோரியர் யாரின் அடிமைகள் ஆனார்கள்?

யூதாவின்
யோசேப்பு வீட்டாரின்
கானானியரின்
இப்ராகிமின்
எபூசியரின்

12. ஆண்டவரின் தூதர் கில்காலில் இருந்து பொக்கிமுக்குச் சென்று கூறியது என்ன?

நிங்கள் இந்நாட்டில் வாழ்பவர்களுடன் உடன்படிக்கை செய்யக்கூடாது.
நான் உங்களை எகிப்தில் இருந்து வெளியே கொண்டு வந்தேன்.
உங்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை என்றுமே முறிக்கமாட்டேன்
அவர்கள் தெய்வங்கள் உங்களுக்கு கண்ணியாக இருப்பார்கள்
மக்கள் தங்கள் குரலை எழுப்பி அழுதனர்.

13. யோசுவா இறந்தபின் எங்கே அடக்கம் செய்யப்பட்டார்?

கானானியர் நாட்டில்
கிரியத்து நாட்டில்
சேபர் நிலப்பகுதியில்
காகசு மலைக்கு வடக்கே எப்ராயிம் மலைநாட்டில்
இந்தியாவின் வடபகுதியில்

14. இஸ்ராயேல்மக்கள் ஆண்டவரின்பார்வையில் செய்ததீமை என்ன?

எகிப்து நாட்டில் இருந்து வெளியே கொண்டவந்த அவர்கள் மூதாதயரின் கடவுளாகிய ஆண்டவரைக் கைவிட்டனர்.
தங்களைச் சுற்றிவாழ்ந்த மக்கள் இனங்களின் தெய்வத்தினையும் வழிபட்டு ஆண்டவருக்குச் சினம் ஊட்டினர்.
சுற்றிவாழ்ந்த மக்களை கொள்ளை அடித்தனர்.
ஆண்டவரைக் கைவிட்டுப் பாகாலுக்கும் அஸ்தரோத்துக்கும் ஊழியம் செய்தனர்.
ஆண்டவருக்குச் சினம் ஊட்டினார்கள்

15. இஸ்ரேலியர் போருக்குச் சென்ற போதெல்லாம் அவர்கள் பெருந்துயரத்திற்கு உள்ளான போதும் ஆண்டவர் அவர்களோடு எவ்வாறு அருகிருந்தார்?

ஆண்டவர் நீதித் தலைவர்களை எழச் செய்தார்.
அவர்களைக் கொள்ளை அடித்தவர் கைகளில் நின்று விடுவித்தார்.
ஆண்டவர் நீதித்தலைவர்களோடு இருந்து அத்தலைவர்களின் வாழ்நாள் முழுவதும் எதிரிகளின் கையிலிருந்து மக்களை விடுவித்தார்.
ஒடுக்கப்பட்ட அவர்களின் அழுகுரலைக் கேட்டு அவர்கள் மீது இரக்கம் கொண்டார்.
அவர்களை எதிரிகளிடம் விற்றார்