மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 96
வேதாகமப் பகுதி : யோசுவா அதிகாரம் 24
முடிவுத் திகதி : 2021-12-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. செக்கேமில் யோசுவா எல்லாக் குலங்களையும் ஒன்று கூட்டி இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் என்ன கூறுகின்றார்? என விளக்கம் அளித்தார்.

உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் வாழ்ந்த போது அவர்கள் மற்றத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்தனர்.
ஆபிரகாமின் வழி மரபைப் பெருக்கினேன்.
ஏசாவிற்கு செபீர்மலைலை உடமையாக அளித்தேன்.
உங்கள் தந்தையை வெளியே கொணர்ந்தேன்
ஆபிரகாமை நதிக்கு அப்பால் இருந்து அழைத்து வந்து கானான் நாடு முழுவதிலும் நடத்திச் சென்றேன்.

2. யோசுவா இஸ்ராயேல் மக்களைப் பார்த்து எகிப்தியர்கள் தேரில் குதிரைகளுடன் செங்கடலுள் உங்கள் தந்தையரைத் துரத்திச் சென்றபொழுது என்ன நிகழ்ந்தது என்று கூறினார் ?

அவர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் இடையே போர் நிகழ்ந்தது.
ஆண்டவர் எகிப்தியரைக் கடலில் அமிழ்த்தினார்
எகிப்தியர்களுக்கும் அவர்களுக்கும் இடையே இருளை வைத்தார்.
இஸ்ராயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கதறினர்.
எகிப்தியர்கள் வெற்றி பெற்றார்கள்.

3. யோசுவா இஸ்ரவேலர்களிடம் நீங்கள் பாலை நிலத்தில் வாழ்ந்தீர்கள். ஆண்டவர் உங்களை எந்த நாட்டிற்கு கொண்டு வந்தார் எனக் கூறினார்?

எகிப்துக்குப் பக்கத்திலுள்ள இஸ்ரவேலர்களின் நாட்டிற்கு
மனோசேயின் நிலம் உள்ள நாட்டிற்கு
எமோரியரின் நாட்டிற்கு
பாசான் நிலம் உள்ள நாட்டிற்கு
மோவாபின் நாட்டிற்கு.

4. இஸ்ரயேலுக்கு எதிராகப் படைதிரட்டிப் போரிட்டவர் யார்?

பிலயாம்
மோவாப்பின் அரசன்
பாலாக்கு
சிப்போரின் மகன்
மோசே

5. பாலாக்கு இஸ்ரயேலுக்கு எதிராகப் போர் புரிந்தபோது அவர்களுக்கு ஆசிகூறியவர் யார்?

சிப்போர்
பெகோர்
மோவாப்பு
பிலயாம்
யோசுவா

6. யோர்தானை கடந்து எரிக்கோவுக்கு வந்தபோது இஸ்ரவேலர்களுடன் போர்புரிந்தவர் யார்?

எமோரியர்
பெரிசியர்
கானானியர்
இத்தியர்
எகிப்தியர்

7. எமோரியரும் கானானியரும் இத்தியரும் பெரிசியரும் இஸ்ரேலியருக்கு எதிராகப் போர் புரிந்த போது அப்போரிலே எமோரிய அரசர்களை விரட்டியது எது?

கானானியர்
இத்தியர்
எகிப்தியர்
குளவிகள்
இஸ்ரேலியர்

8. இஸ்ரேலியர் வாழ்விற்கு இறைவன் செய்த நன்மை என்ன? என யோசுவா கூறுகின்றார்.

உழுது பயிரிடாத நிலத்தில் அறுவடை
உங்களால் கட்டப்படாத நகர்களில் வாழ்வு
உங்களால் நடப்படாத திராட்சைத் தோட்டத்தில் பயன்
உங்களால் நடப்படாத ஒலிவ தோட்டத்தில் பயன்
போருக்காக ஏராளமான வாள்களை வழங்கியது

9. ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்கிவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக எனக் கூறியது யார்?

எமோரியர்
பிலயாம்
மோவாப்பின் அரசன் சிப்போன்
கானானியர்
இஸ்ரவேலர்

10. இஸ்ரவேலர் மக்கள் தங்களுக்கு ஆண்டவர் என்ன நன்மைகள் செய்தார் ? எனச் சொன்னார்கள்?

ஆண்டவர் அவர்களையும் அவர்கள் மூதாதயைரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டில் இருந்து வெளியே கொண்டுவந்தது
நடந்து வந்த எல்லா வழிகளிலும் நாங்கள் கடந்து வந்த எல்லா மக்களிடையிலும் இஸ்ரவேல் மக்களைக் காத்தது
எமோரியரைக் காப்பாற்றியது
வேற்றுத் தெய்வங்களை வணங்க வழி செய்த்து
எபூசியர் போர் தொடுத்தபோது அவர்களக்கு ஆதரவாக இருந்தது.

11. யோசுவா இஸ்ரவேல் மக்களிடம் நீங்கள் ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்கினால் என்ன நிகழும் எனக் கூறினார்?

நீங்கள் ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்கினால் அவர் மீண்டும் உங்களுக்குத் தீங்கு செய்வார்
உங்களால் ஆண்டவர்க்கு ஊழியம் செய்ய இயலாது
வேற்றுத் தெய்வ வழிபாட்டை கடவுள் சகிக்க மாட்டார்
உங்கள் குற்றங்கள் பாவங்களை மன்னிப்பார்
உங்களுக்கு நன்மை செய்த அவர் உங்களை அழித்து விடுவார்

12. இஸ்ரவேலர் வேற்றுத் தெய்வங்களை வணங்கி அவற்றிற்கு ஊழியம் செய்வதன் மூலம் என்ன விளைவு ஏற்படும் என யோசுவா இஸ்ரவேல் மக்களுக்கு கூறினார் ?

ஆண்டவர் உங்களை அன்பு செய்வார்
ஆண்டவரின் சினம் உங்களுக்கு எதிராகப் பற்றி எரியும்.
அவர் உங்களுக்கு அளித்த நிலத்தில் இருந்து நல்ல பலன் பெற்று விட்டீர்.
அவர் உங்களுக்கு அளித்த நிலத்தில் இருந்து அழிந்து போவீர்கள்
அவர் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்.

13. யோசுவாவிடம் இஸ்ரவேல் மக்கள் என்ன கூறினார்கள்?

நாங்கள் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய விரும்பவில்லை
நாங்கள் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம்
ஆண்டவர் எமக்குத் துன்பமே தந்தார்.
எங்களை நாங்களே பாதுகாத்தோம்.
எங்களுக்கு நல்ல தலைவர் வேண்டும்.

14. "அவரை நீங்களே தெரிந்து கொண்டீர்கள்" எனக் கூறியவர் யார்?

செக்கேம் மக்கள்
இஸ்ரவேல் மக்கள்
எலயாசர்
யோசுவா
பிலயாம்

15. யோசுவா கருவாலி மரத்தின்கிழ் நாட்டிய கல் எதற்கு அடையாளம் ஆக இருந்த்து?

அது வழிபடுவதற்கான அடையாளம்
ஆண்டவர் பேசிய எல்லாவற்றையும் அது கேட்டது என்பதற்கான அடையாளம்.
நீங்கள் கடவுளை எற்றுக் கொள்ள மறுத்தால் இது உங்களுக்கு எதிரான சான்று என்பதற்கான அடையாளம்
தூபம் காட்டுவதற்கு அடையாளம்
மக்கள் சமையல் செய்ததற்கு அடையாளம்