மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 94
வேதாகமப் பகுதி : யோசுவா 18, 19, 20
முடிவுத் திகதி : 2021-10-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பு எங்கே ஒன்று கூடியது?

சீலோ
எருசலேம்
எகிப்து
இந்தியா
பாபிலோன்

2. இஸ்ரயேல் மக்களில் எத்தனை குலங்களுக்கு உரிமைச் சொத்துப் பிரித்துத் தரப்படவில்லை?

ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
ஒன்பது

3. யோசுவா இஸ்ரயேல் மக்களிடம் கூறியது என்ன?

உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டைப் பெற்றுக்கொள்ளாமல் எவ்வளவு காலம் சோம்பேறிகளாக இருப்பீர்கள்?
குலத்திற்கு மும்மூன்று பேரைத் தேர்ந்தெடுங்கள். அவர்கள் நான் அனுப்ப, அவர்கள் புறப்பட்டு, நாடெங்கும் சுற்றிச் சென்று அவரவர் உரிமைச்சொத்து இன்னதென்று வரைந்து, என்னிடம் கொண்டு வருவார்கள்
அவர்கள் நாட்டை ஏழு பிரிவுகளாகப் பிரிப்பர். யூதா தெற்கில் தங்கள் எல்லையில் தங்கியிருப்பர். யோசேப்பின் வீட்டார் வடக்கில் அதன் எல்லையில் தொடர்ந்து தங்கியிருப்பர்
நீங்கள் நிலத்தை ஏழு பிரிவுகளாக வரைந்து என்னிடம் கொண்டு வருவீர்கள். நான் இங்கு உங்களுக்குக் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் திருவுளச்சீட்டுப் போடுவேன்
லேவியர்க்கு உங்கள் நடுவில் பங்கு இல்லை. ஏனெனில், ஆண்டவருக்குக் குருத்துவப்பணி புரிவதே அவர்கள் உரிமைச் சொத்து

4. பென்யமீனுக்கு அளிக்கப்பட்ட பகுதிகள் யாவை?

அவர்களது எல்லை வடக்குப் பகுதியில் யோர்தானிலிருந்து தொடங்கிப் பின்னர் எரிகோவில் வட சரிவில் ஏறி, பிறகு மேற்கில் மலைப்பக்கம் சென்று பெத்சாவேன் பாலைநிலத்தில் முடிவடைகிறது
மீண்டும் அவ்வெல்லை அங்கிருந்து தெற்குப்பக்கமாகப் பெத்தேல் என்னும் லூசின் சரிவை நோக்கிச் சென்று அதனைக் கடக்கிறது
பின்னர், அவ்வெல்லை கீழ் பெத்கோரோனுக்குத் தெற்கே மலைமீது உள்ள அத்தராத்து அதாரை நோக்கிச் செல்கிறது
பின்பு, அவ்வெல்லை மேற்கு முகமாகத் திரும்பி அங்குள்ள மலைக்குத் தெற்காக பெத்கோரோனுக்கு எதிராக யூதா மக்களுக்குரிய கிரியத்துஎயாரிம் எனப்படும் கிரியத்துபாகாலில் முடிவடைகிறது. இதுவே மேற்கு எல்லை
அதன் தென் எல்லை கிரியத்து எயாரிமின் எல்லைப்புறத்தில் தொடங்கி மேற்காகச் சென்று, பிறகு நெப்தோவாகு நீர்நிலைகள்வரை போகிறது

5. பென்யமின் மக்களின் குலத்திற்கு உடைமையான பன்னிரு நகர்கள் யாவை?

எரிக்கோ, பெத்தொகிலா
ஏமக்கசீசு, பெத்தராபா
செமாரயிம், பெத்தேல்
அவ்விம், பாரா, ஒபிரா
கெபரம்மோனி, ஒப்னி, கேபா

6. சிமியோனின் குலத்தாருக்கு அளிக்கப்பட்ட பகுதிகள் யாவை?

அவர்களுக்கு உடைமையான நகர்கள்; பேயேர்செபா, சேபா, மோலாதா, அட்சர்சூவால், பாலா எட்சேம், எல்தோலகு, பெத்தூல், ஓர்மா, சிக்லாகு, பெத்மர்க்கபோத்து, அட்சர்சூசா, பெத்லாபாவோத்து, சாருகன் ஆக பதின்மூன்று நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க
அயின், ரிம்மோன், எக்தேர், ஆசான், ஆக நான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க
இவைகளன்றித் தெற்கே இராமாது எனப்படும் பாகலாத்பெயேர்வரை உள்ள நகர்களும் அவற்றின் சிற்றூர்கள் அனைத்தும்
இதுவே சிமியோன் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்து
சிமியோன் மக்களின் உரிமைச்சொத்து யூதா மக்களுக்குரிய பங்கில் ஒரு பகுதி

7. செபுலோன் குலத்தாருக்கு அளிக்கப்பட்ட பகுதிகள் யாவை?

அவர்கள் உடைமையின் எல்லை சாரீதுவரை சென்றது
அவர்களது எல்லை மேற்கே மரியலாவுக்கு ஏறி, தபா சேத்துக்கு வந்து யோக்னயாமுக்கு எதிரில் உள்ள ஓடையைத் தொடுகின்றது
சாரீதிலிருந்து கதிரவன் உதிக்கும் கிழக்குப்பக்கம் திரும்பி கிஸ்லோத்து தாபோரையும், தாபராத்தையும் நோக்கிச் சென்று யாப்பியாமேல் ஏறுகிறது
அங்கிருந்து கிழக்காகக் காத்கேப்பேரையும் இத்தகாச்சினையும் ரிம்மோனையும் கடந்து சென்று நேயா பக்கம் வளைகிறது
மேலும் இவ்வெல்லை வடக்கில் அன்னாத்தோனைச் சுற்றுகிறது. இது இப்தாவேல் பள்ளத்தாக்கில் முடிவடைகிறது


8. இசக்காரின் மக்களுக்கு அளிக்கப்பட்ட பதிமூன்று நகர்கள் யாவை?

இஸ்ரியேல், கெசுல்லோத்து, சூனேம்
அப்பாராயிம், சியோன், அனகராத்து
இரப்பீத்து, கிசியோன், எபெசு
இரமேத்து, ஏன்கன்னிம்
ஏன்கத்தா, பெத்-பசேசு

9. ஆசேர் மக்களின் குலத்திற்கு அளிக்கப்பட்ட பகுதிகள் யாவை?

அவர்களின் எல்லை; எல்காத்து, அலீ, பெத்தேன், அக்சாபு, அல்லமெலக்கு, அமாது, மிசால் என்பவை
மேற்குப்பக்கம் கர்மேலையும் சகோர் லிப்னாத்தையும் தொட்டு, கிழக்குப் பக்கம் திரும்பி, பெத்தாகோன் சென்று செபுலுன், இப்தாவேல் பள்ளத்தாக்கையும், பெத்தேமக்கு நெகியேலுக்கு வடக்காகத் தொட்டு, காபூலில் இடப்பக்கம் திரும்புகின்றது
எபிரோன், இரகோபு, அம்மோன், தானா, பெரிய சீதோன்வரை சென்று, பிறகு இராமா பக்கம் திரும்புகின்றது
அரண்சூழ் நகரான தீர் வரை சென்று, கோசா பக்கம் திரும்பிக் கடலில் முடிவடைகிறது
மேகேபல், அக்சீபை ஒட்டிய கடலில் முடிவடைகிறது

10. நப்தலியின் மக்களுக்கு அளிக்கப்பட்ட பகுதிகள் யாவை?

அவர்களது எல்லை ஏலப்பிலிருந்து சானான்னிமிலுள்ள கருவாலி மரத்திலிருந்து, அதாமி நெகேபு, யப்னவேல், இலக்கம்வரை சென்று யோர்தானில் முடிகின்றது
பிறகு, அவ்வெல்லை மேற்கில் அசனோத்துதாபோர் பக்கம் திரும்புகின்றது; அங்கிருந்து உக்கோகில் வெளியேறுகின்றது
தெற்கில் செபுலோனையும், மேற்கில் ஆசேரையும் கிழக்கில் யோர்தானையும் எல்லையாகக் கொண்டுள்ளது
அரண்சூழ் நகர்கள்; சித்திம், சேர், அம்மாத்து, இரக்காத்து, கினரேத்து, அதாமா, இராமா, ஆட்சோர், கெதேசு, எதிரேயி, ஏன் ஆட்சோர், ஈரோன்
மிக்தலேல், ஒரேம், பெத்தனாத்து, பெத்சமேசு, ஆக பத்தொன்பது நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க

11. தாண் மக்களின் குலத்தாருக்கு அளிக்கப்பட்ட பகுதிகள் யாவை?

சோரா, எசுத்தாவோல், ஈர்சமேசு சாயலாபிம்
அய்யலோன், இதிலா, ஏலோன்
திமினா, எக்ரோன், எல்தெக்கே
கிபதோன், பாகலாத்து, எகூது
பெனபராக்கு, காத்ரிம்மோன், மேயர்க்கோன், இரக்கோன்

12. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"தங்கள் மூதாதையான தாணின் பெயரை ஒட்டி, இலசேமிற்குத் ----------- என்று பெயரிட்டார்கள்."

நப்தலி
தாண்
ஆசேர்
இசக்கார்
செபுலோன்

13. ஆண்டவர் யோசுவாவை நோக்கிக் கூறியது என்ன?

இஸ்ரயேல் மக்களிடம் அவர்களுக்கு மோசே வழியாகக் கூறியபடி, ‛அடைக்கல நகர்களை உங்களுக்கெனத் தேர்ந்துகொள்ளுங்கள்’ என்று கூறுவாய்
அறியாமல் தவறுதலாக ஒருவரைக் கொன்றவர் இரத்தப்பழி வாங்குபவரிடமிருந்து தப்பி ஓடித் தஞ்சம்புக இந்நகர்கள் உங்களுக்கு அடைக்கலமாக அமையும்
கொலையாளி இந்நகர்களில் ஒன்றனுள் ஓடி, நுழைவாயிலில் நின்று, அந்நகர்ப் பெரியவர்களின் காதில்படும்படியாக தம் நிலையை எடுத்துரைப்பார்
அவர்கள் அவரைத் தங்கள் நகருக்குள் அழைத்துச்சென்று தங்களுடன் தங்கியிருப்பதற்கு ஓர் இடம் கொடுப்பர்
இரத்தப்பழி வாங்குபவர் துரத்திவந்தால், கொலையாளியை அவர் கையில் ஒப்படைக்க மாட்டார்கள்

14. தேர்ந்துகொள்ளப்பட்ட அடைக்கல நகர்கள் யாவை?

நப்தலி மலைநாட்டில் கலிலேயாவில் கெதேசு எப்ராயிம் மலைநாட்டில் செக்கேம்
யூதா மலைநாட்டில் எபிரோன் எனப்படும் கிரியத்து அர்பா
யோர்தானுக்கு அப்பால் எரிகோவுக்குக் கிழக்காக ரூபனின் குலத்திற்குரிய பாலைநிலச் சமவெளியில் பெட்சேர்
காத்து குலத்திற்குரிய கிலயாதில் இராமோத்து
மனாசேயின் குலத்திற்குரிய பாசானில் கோலான்

15. அடைக்கல நகர்களை உங்களுக்கெனத் தேர்ந்துகொள்ளுங்கள்“ – இது யார் கூற்று?

ஆபிரகாம்
யோசுவா
ஆண்டவர்
மரியா
ஈசாக்கு