மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 93
வேதாகமப் பகுதி : யோசுவா 15, 16, 17
முடிவுத் திகதி : 2021-09-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. யூதா மக்களின் குலத்தைச் சார்ந்த குடும்பங்களுக்குக் கிடைத்த நிலப்பகுதி யாவை?

தெற்கே ஏதோம் வரையிலும் அதன் தென்கோடி எல்லை சீன் பாலைநிலம் வரையிலும் அமைந்திருந்தது
அவர்களது தென் எல்லை சாக்கடலின் தென்முனை வளைவிலிருந்து, தெற்குநோக்கி அக்கிரபிம் மேட்டைத்தாண்டி, சீன் பாலைநிலத்தைக் கடந்து, தெற்கே காதேசு பர்னேயாவை நோக்கி மேலே ஏறுகிறது
எஸ்ரோனைக் கடந்து அத்தார்வரை ஏறி கர்க்காவை நோக்கித் திரும்புகிறது; அட்சமோனைக் கடந்து, எகிப்தின் நதியைத் தொட்டுக் கடலுடன் முடிவடைகிறது. இதுவே உங்கள் தென் எல்லை
கிழக்கு எல்லை யோர்தானின் முகத்துவாரம் வரை உள்ள சாக்கடல்; வட எல்லை யோர்தானின் முகத்துவாரத்திலிருந்து தொடங்கி பெத்தொகிலா வரை மேலேறி, வடக்கே பெத்தராபா வரை செல்கிறது. இவ்வெல்லை தொடர்ந்து ரூபனின் மகன் போகனின் கல்வரை செல்கிறது
இவ்வெல்லை ஆக்கோர் பள்ளத்தாக்கிலிருந்து தெபீர்வரை சென்று பள்ளத்தாக்கிற்குத் தெற்கே அதும்மிம் மேட்டுக்கு எதிரே உள்ள கில்காலுக்குப் பக்கமாக வடக்கே ஓடி, ஏன்செமசு நீர்நிலைகளைத் தொட்டு ஏன்ரோகேல்வரை செல்கிறது

2. கோடிட்ட இடத்தை நிரப்புக:

-----------, ---------------, -------------- என்ற ஆனாக்கின் மூன்று புதல்வர்களை காலேபு அங்கிருந்து துரத்திவிட்டார்.

சேசாய்
அகிமான்
தல்மாய்
காலேபு
ஆனாக்

3. தெபீரின் முன்னாளைய பெயர் என்ன?

கிரியத்து அர்பா
எபிரோன்
கிரியத்சேபர்
யோசுவா
ரூபன்

4. காலேபின் மகள் பெயர் என்ன?

அக்சா
சாரா
சேசாய்
அகிமான்
தல்மாய்

5. “எனக்கு ஓர் அன்பளிப்புத் தரவேண்டும். நீர் எனக்கு வறண்ட நிலத்தைக் கொடுத்துள்ளீர். இப்பொழுது எனக்கு நீரூற்றுகளையும் தாரும்” – இது யார் கூற்று?

இராக்கேல்
சாரா
அன்னா
மரியா
அக்சா

6. கோடிட்ட இடத்தை நிரப்புக:

யூதா குலத்திற்குச் சொந்தமான நகர்கள் பின்வருமாறு; ----------, -----------, ---------, ----------, --------.

கப்சாவேல், ஏதேர், யாகூர்
கீனா, தீமோனா, அதாதா
கெதேசு, ஆட்சோர். இத்னான்
சீபு, தெலேம், பெயலோத்து
ஆட்சோர்—அதாத்தா, கெரியோத்து, எட்சரோன் என்னும் ஆட்சோர்

7. எப்ராயிம் புதல்வருக்கு உரிமைச் சொத்தாக கிடைத்த நிலப்பகுதிகள் என்ன?

கிழக்கே எல்லை அற்றரோத்து-அதார் முதல் மேல் பெத்கோரோன்வரை செல்கின்றது
மேற்கு எல்லை மிக்மெத்தாத்துக்கு வடக்கே சென்று கிழக்கே தானத்து சீலோவுக்குத் திரும்பி, அதை யானோவாவுக்குக் கிழக்காகக் கடந்து
யானோவாவிலிருந்து அற்றரோத்து நகருக்கு இறங்கி, எரிகோவைத் தொட்டு யோர்தானில் முடிவடைகின்றது
இவ்வெல்லை தப்பூவாகிலிருந்து மேற்காக கானா நதிவரை ஏறிக் கடலில் முடிவடைகின்றது
இதுவே எப்ராயிம் மக்களின் குலத்தைச் சார்ந்த குடும்பங்களுக்குக் கிடைத்த உரிமைச் சொத்து


8. மனாசேயின் குலத்திற்குக் கிடைத்த நிலப்பகுதி யாவை?

யோசேப்பின் முதல் மகனான மனாசேயின் குலத்திற்குக் கிடைத்த நிலப்பகுதியின் விவரம்
மனாசேயின் முதல் மகனும் கிலயாதின் தந்தையுமான மாக்கிர் போர்வீரனாக இருந்ததால் அவனுக்குக் கிலயாதும் பாசானும் அளிக்கப்பட்டன
மனாசேயின் ஏனைய மக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் பங்கு கொடுக்கப்பட்டது
அவர்கள் அபியேசர், ஏலக்கு, அசிரியேல், செக்கேம், ஏபேர், செமிதா ஆகியோரின் புதல்வர்கள்
இவர்கள் யோசேப்பின் மகனான மனாசேயின் ஆண்மக்களும் அவர்கள் குடும்பத்தாரும் ஆவர்

9. ஏபேரின் புதல்வன் செலோபுகாதுக்கு பிறந்த பெண்மக்கள் யாவர்?

மக்லா
நோவா
ஒகுலா
மில்கா
தீரட்சா

10. கோடிட்ட இடத்தை நிரப்புக:

மனாசேயின் ஏனைய மக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் பங்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் -----------, ----------, ------------, ---------, ---------- ஆகியோரின் புதல்வர்கள்.

அபியேசர்
ஏலக்கு
அசிரியேல்
செக்கேம்
ஏபேர், செமிதா

11. “எங்கள் சகோதரர்கள் நடுவில் எங்களுக்கு உடைமைகள் அளிக்க ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டார்” – இது யார் கூற்று?

செலோபுகாதுவின் பெண் மக்கள்
செலோபுகாதுவின் ஆண் மக்கள்
மனாசேயின் மக்கள்
யோசேப்பின் மக்கள்
கிலயாதின் மக்கள்

12. நூனின் மகன் யார்?

எலயாசர்
யோசுவா
மனாசே
யோசேப்பு
ரூபன்

13. கோடிட்ட இடத்தை நிரப்புக:

யோர்தானுக்கு அப்பால் உள்ள ------------, ---------- நிலம் தவிர மனாசேக்குப் பத்துப் பங்குகள் விழுந்தன.

கிலயாது
எருசலேம்
யூதேயா
பெத்லகேம்
பாசான்

14. யோசேப்பின் புதல்வர் யோசுவாவிடம் கூறியது என்ன?

ஏன் எங்களுக்கு உரிமைச் சொத்தாக ஒரே ஒரு பங்கு அளித்தீர்?
எங்கள் மக்கள் பெருந்தொகையினர்
ஆண்டவர் எங்களுக்கு இத்துணை ஆசி வழங்கியுள்ளார்
நீங்கள் திரளான மக்களாக இருப்பதால் பெரிசியர், இரபாயிம் ஆகியோரின் காட்டு நிலத்திற்குப் போய் அதைத் திருத்திக் கொள்ளுங்கள்
எப்ராயிம் மலைப்பகுதியோ உங்களுக்கு மிகவும் குறுகலானது

15. யோசுவா யோசேப்பின் வீட்டாரான எப்ராயிமிடமும் மனாசேயிடமும் கூறியது என்ன?

நீங்கள் திரளான மக்கள். வலிமை மிக்கவர்கள்
உங்களுக்கு ஒரு பங்கு மட்டும் இல்லை. மலைப்பகுதியும் உங்களுடையதே
அது காட்டுப் பகுதியாக இருப்பதால் அதை நீங்கள் திருத்திக் கொள்ளுங்கள்
அதன் எல்லை அனைத்தும் உங்களுக்குச் சொந்தம்
ஏனெனில், கானானியருக்கு இரும்புத் தேர்கள் இருந்தாலும், அவர்கள் வலிமையுள்ளவர்களாய் இருந்தாலும் நீங்கள் அவர்களை விரட்டுவீர்கள்