மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 92
வேதாகமப் பகுதி : யோசுவா 12, 13, 14
முடிவுத் திகதி : 2021-08-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. யோசுவா தோற்கடித்த மன்னர்கள் எத்தனை பேர்?

முப்பது மன்னர்கள்
முப்பத்தொரு மன்னர்கள்.
முப்பத்திரண்டு மன்னர்கள்
முப்பத்து மூன்று மன்னர்கள்
முப்பத்து நான்கு மன்னர்கள்

2. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"இரபாயியருள் எஞ்சி இருந்தவனும் பாசானின் மன்னனுமான ------------ எல்லை இதுவே; அவன் அஸ்தரோத்திலும் எதிரேயிலும் வாழ்ந்தான்."

ஆபிரகாம்
ஆயி
மோசே
யோசுவா
ஓகின்

3. மோசே நிலப்பகுதிகளை இறுதியில் யாருக்கு உரிமையாகக் கொடுத்தார்?

ரூபன்
காத்து
மனாசே
ஆபிரகாம்
ஈசாக்கு

4. யோசுவா வயதானவுடன் அவரிடம் ஆண்டவர் கூறியது என்ன?

உனக்கு வயதாகி, நீ முதுமை அடைந்துவிட்டாய். இன்னும் உடைமையாக்க வேண்டிய நிலம் ஏராளமாக உள்ளது
எஞ்சியுள்ள நிலங்கள் இவையே; பெலிஸ்தியர், கெசூரியரின் எல்லாப் பகுதிகள்
லெபனோனிலிருந்து மிஸ்ரபோத்துமயிம் வரை உள்ள அனைத்து மலைவாழ் மக்கள், அனைத்து சீரோனியர் — இவர்களை இஸ்ரயேல் முன்னிலையில் நானே வெளியேற்றுவேன்
நான் உனக்குக் கட்டளையிட்டபடி நீயும் அதை இஸ்ரயேலுக்கு உடைமையாகக் கொடு
இப்போது இந்த நாட்டை ஒன்பது குலங்களுக்கும் மனாசேயின் பாதிக் குலத்திற்கும் உடைமையாகக் குறித்துக்கொடு

5. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"கானானியருடையதாகக் கருதப்பட்ட ----------, -----------, ------------, -----------, -----------ஆகிய பகுதிகளின் ஐந்து பெலிஸ்திய மன்னர்கள்."

காசா
அஸ்தோத்து
அஸ்கலோன்
காத்து
எக்ரோன்

6. ஏன் லேவியர் குலத்திற்கு உடைமை அளிக்கவில்லை?

கெசூரியர், மாக்காத்தியரின் நாடுகளையோ இஸ்ரயேலர் கைப்பற்றவில்லை
கெசூரியரும் மாக்காத்தியரும் இந்நாள்வரை இஸ்ரயேலர் இடையே வாழ்கின்றனர்
லேவியர் குலத்திற்கு மட்டும் அவர் உடைமை அளிக்கவில்லை
அவர் அவர்களுக்குக் கூறியபடி அவர்களது உடைமை இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் செலுத்தப்படும் எரிபலியாகும்
ஆனால், அவர்கள் தங்குவதற்கு நகர்களும் அவர்களின் கால்நடைகளுக்கும் மற்ற உடைமைகளுக்கும் மேய்ச்சல் நிலங்களும் தரப்பட்டன

7. இஸ்ரயேல் மக்கள் வாளால் கொல்லப்பட்டவன் யார்?

மோசே
யோசுவா
பிலயாம்
ரூபன்
காத்து

8. ரூபன் குலத்திற்கு மோசே அளித்த பகுதிகள் யாவை?

எஸ்போனும் அதன் எல்லா நகர்களும்
தீபோன் பாமோத்துபாகால், பெத்பாகால்மெகோன்
யாகசு, கெதமோத்து, மேபாத்து
கிரியத்தாயிம், சிப்மா
கர் சமவெளியில் உள்ள செரெத்துசாகர்

9. காத்து குலத்திற்கு மோசே அளித்த பகுதிகள் யாவை?

யாசேர், கிலயாதின் எல்லா நகர்கள்
இரபாவின் கிழக்கில் அரோயேர்வரை
அம்மோனியரின் நிலத்தில் பாதி
எஸ்போனிலிருந்து இராமத்து மிட்சப்பே வரை
பெத்தோனிம் மகனயிம் இவற்றிலிருந்து தெபீரின் எல்லைவரை

10. மனாசேக்கு மோசே அளித்த பகுதிகள் யாவை?

மகனயிமிலிருந்து பாசான் முழுவதும்
பாசானின் அரசன் ஓகின் அரசு முழுவதும்
பாசானில் உள்ள அறுபது நகர்களும் யாயிரின் குடியிருப்புகள் முழுவதும்
கிலயாதில் பாதி, அஸ்தரோத்து, எதிரேயி
பாசானில் இருந்த ஓகின் அரசு நகர்கள்

11. யோசேப்பின் புதல்வர்கள் யாவர்?

மோசே
மனாசே
எப்ராயிம்
ரூபன்
காத்து

12. கானான் நாட்டில் இஸ்ரயேலர் பெற்ற உடைமைகள் யாரால் தரப்பட்டது?

மோசே
நூன்
குரு எலயாசர்
நூனின் மகன் யோசுவா
குலங்களின் தந்தையர்களின் தலைவர்கள்

13. “நீ என் கடவுளாகிய ஆண்டவரை முற்றிலும் பின்பற்றியதால், உன் காலடி பட்ட நிலத்தை எல்லாம் உறுதியாகவே உனக்கும் உன் மக்களுக்கும் என்றும் உடைமையாக அளிப்பேன்” – இது யார் கூற்று?

மோசே
யோசுவா
காலேபு
ரூபன்
மனாசே

14. காலேபு – சிறு குறிப்பு வரைக.

கெனிசியன்
எபுன்னேயின் மகன்
மோசேவால் உளவறிய அனுப்பப்பட்டவர்
எண்பத்தைந்து வயதானவர்
யோசுவா காலேபுக்கு ஆசி வழங்கி, எபிரோனை உடைமையாக அளித்தார்

15. எபிரோனுக்கு முந்தைய பெயர் என்ன?

எருசலேம்
யூதா
பெத்லகேம்
கிர்யத்து அர்பா
யோசுவா