1. கோடிட்ட இடத்தை நிரப்புக: „எபிரோன் மன்னன் ----------, யார்முத்து மன்னன் ----------, இலாக்கிசு மன்னன் ---------, எக்லோன் மன்னன் -----------“
2. எருசலேம் மன்னன் அதோனிசெதக்கு யார் யாரை உதவிக்கு அழைத்தான்?
3. கிபயோன் மக்கள் யோசுவாவுக்குச் சொல்லி அனுப்பியது என்ன?
4. ஆண்டவர் கில்காலில் இருந்த யோசுவாவிடம் சொல்லியது என்ன?
5. “கதிரவனே! கிபயோனில் நில்! நிலவே! அய்யலோன் பள்ளத்தாக்கில் நில்” இது யார் கூற்று?
6. கோடிட்ட இடத்தை நிரப்புக: "அந்த ஐந்து எமோரிய மன்னர்களும் தப்பி ஓடி, --------------- ஒரு குகையில் ஒளிந்து கொண்டார்கள்."
7. எமோரிய மன்னர்கள் மக்கேதாக் குகையில் ஒளிந்திருப்பதை அறிந்த யோசுவா கூறியது என்ன?
8. மக்கேதாக் குகையில் எத்தனை எமோரிய மன்னர்கள் ஒளிந்துகொண்டனர்?
9. எமோரிய மன்னர்கள் எப்படி கொல்லப்பட்டனர்?
10. யோசுவா எப்படி மக்கேதாவைக் கைப்பற்றினார்?
11. யோசுவா லிப்னாவை எப்படி கைப்பற்றினார்?
12. ஆட்சோர் மன்னன் யாபின் மற்றும் மற்ற மன்னர்களும் ஒன்று சேர்ந்து யோசுவாவுக்கு எதிராக திரண்டுள்ள நிலையில் ஆண்டவர் யோசுவாவிடம் கூறியது என்ன?
13. ஆட்சோர் நகர் எவ்வாறு அழிக்கப்பட்டது?
14. யோசுவா கைப்பற்றிய நிலப்பகுதிகள் யாவை?
15. கோடிட்ட இடத்தை நிரப்புக: "இஸ்ரயேல் நாட்டில் அனாக்கியர் பெருமளவில் எஞ்சி இருக்கவில்லை. ----------, ---------, ---------- ஆகிய இடங்களில் மட்டும் எஞ்சி இருந்தனர்."