மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 90
வேதாகமப் பகுதி : யோசுவா 8, 9
முடிவுத் திகதி : 2021-06-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. ஆயி நகரைக் கைப்பற்றும் முன் ஆண்டவர் யோசுவாவிடம் கூறியது என்ன?

அஞ்சாதே, கலங்காதே; உன்னுடன் எல்லாப் போர்வீரர்களையும் சேர்த்துக் கொள்
ஆயியை நோக்கிப் புறப்பட்டுச்செல்!
இதோ! ஆயியின் மன்னனையும், அதன் மக்களையும், அவனது நகரையும் அவனது நாட்டையும் உன் கையில் ஒப்படைக்கிறேன்
எரிகோவிற்கும் அதன் மன்னனுக்கும் செய்ததுபோல் ஆயிக்கும் அதன் மன்னனுக்கும் செய்வாய்
கைப்பற்றப்பட்ட பொருள்களையும் கால்நடைகளையும் உங்களுக்கு வைத்துக் கொள்ளுங்கள். நகருக்குப் பின்புறத்தில் ஒரு பதுங்கிடம் அமை

2. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"யோசுவா -------------------- வலிமை வாய்ந்த போர் வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை இரவில் அனுப்பினார்."

பத்தாயிரம்
இருபதாயிரம்
முப்பதாயிரம்
நாற்பதாயிரம்
ஐம்பதாயிரம்

3. யோசுவா ஆயி நகரை கைப்பற்றும் பொருட்டு போர் வீரர்களுக்கு கூறியது என்ன?

பாருங்கள், நீங்கள் அந்நகருக்குப் பின்புறம் பதுங்கி இருங்கள். நகரிலிருந்து மிகவும் தொலையில் போய்விடாதீர்கள். அனைவரும் தயாராக இருங்கள்
நானும் என்னுடன் இருக்கும் மக்கள் எல்லாரும் நகருக்கு அருகில் வருவோம். நம்மைப் பிடிக்க முன்புபோல் அவர்கள் வெளியே வருவார்கள். அவர்கள்முன் நாங்கள் ஓடுவோம்
அவர்கள் எங்கள்பின் வெளியே வருவார்கள். நகரிலிருந்து வெகுதூரம் வரும்வரை அவர்களைக் கொண்டுவந்து விடுவோம். அவர்கள் “முன்புபோலத் தப்பி ஓடுகின்றார்கள்” என்று சொல்லிக்கொள்வார்கள். நாங்கள் அவர்கள் முன் ஓடுவோம்
நீங்கள் பதுங்கிடத்திலிருந்து எழுந்து நகரைக் கைப்பற்றுங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அதை உங்கள் கையில் கொடுப்பார்
நீங்கள் நகரைக் கைப்பற்றியதும், அதை நெருப்பினால் எரியுங்கள். கடவுள் கூறியது போலவே செய்யுங்கள். உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். கவனமாயிருங்கள்

4. உன் கையிலுள்ள ஈட்டியை ஆயியை நோக்கி ஓங்கு. ஏனெனில் நான் அதை உன் கையில் ஒப்படைப்பேன்“ – இவ்வாறு ஆண்டவர் யாரிடம் கூறுகிறார்?

மோசே
யோசுவா
இஸ்ரயேல் மக்கள்
இயேசு
மரியா

5. ஆயி நகரை யோசுவா எப்படி கைப்பற்றினார்?

யோசுவா தம் கையில் இருந்த ஈட்டியை ஆயியை நோக்கி ஓங்கினார்.பதுங்கியிருந்தவர் வேகமாகத் தம் இடத்திலிருந்து எழுந்தனர்
யோசுவா கையை ஓங்கியதும் அவர்கள் வேகமாக ஓடிவந்து நகரினுள் புகுந்து அதைக் கைப்பற்றி விரைவாக அந்நகரை நெருப்பால் எரித்தனர்
ஆயியின் மக்கள் திரும்பிப் பார்த்தனர். இதோ நகரினின்று எழும்பிய புகை விண்ணை நோக்கிப் போவதைக் கண்டனர். எப்பக்கமும் தப்பியோட அவர்களுக்கு வாய்ப்பு இல்லை. பாலைநிலம் நோக்கி ஓடிய இஸ்ரயேல் மக்கள் தங்களைத் துரத்தியவர்மீது திரும்பிப் பாய்ந்தனர்
பதுங்கியிருந்தவர்கள் நகரைக் கைப்பற்றியதையும் ஆயியின் புகை மேலே எழும்புவதையும் கண்ட யோசுவாவும் எல்லா இஸ்ரயேல் மக்களும் திரும்பிச்சென்று ஆயி மக்களைத் தாக்கினார்
இந்நேரத்தில் பதுங்கியிருந்தோரும் நகரிலிருந்து வெளியே வந்து அவர்களைத் தாக்கினர். எனவே, இருபக்கமும் இஸ்ரயேலருக்கு இடையே அவர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களுள் ஒருவனும் உயிரோடு தப்பிக்காதபடி அவர்கள் தாக்கப்பட்டனர். இஸ்ரயேலர் ஆயியின் மன்னனை உயிருடன் பிடித்து யோசுவாவிடம் கொண்டுவந்தனர்

6. எத்தனை ஆயி நகர் மக்கள் இஸ்ரயேல் மக்களால் கொல்லப்பட்டனர்?

பதினைந்தாயிரம் பேர்
பதினான்காயிரம் பேர்
பதிமூன்றாயிரம் பேர்
பன்னிரண்டாயிரம் பேர்
பதினோராயிரம் பேர்

7. ஆயி நகர் மன்னன் எப்படி கொல்லப்பட்டான்?

வாளால் கொன்றனர்
தூக்கிலேற்றினர்
சிறையில் அடைத்தனர்
வதை முகாமுக்கு அனுப்பினர்
சிலுவையில் அறைந்தனர்

8. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"------------------, -----------------, --------------, -------------, நீதிபதிகளுடன் பேழைக்கு முன்னே இருமருங்கிலும் நின்றுகொண்டிருந்தனர்."

இஸ்ரயேல் மக்களும்
வெளிநாட்டவரும்
முதியோர்
அலுவலர்
யோசுவா

9. இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு எந்த மலையில் பீடம் எழுப்பினார்?

சீனாய் மலை
சீயோன் மலை
தாபோர் மலை
எருசலேம்
ஏபால் மலை

10. கிபயோன் மக்கள் யோசுவாவை ஏமாற்ற எப்படி சென்றனர்?

கிபயோன் குடிமக்கள் எரிகோவிற்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைப் பற்றிக் கேள்வியுற்றனர்
கிபயோன் குடிமக்கள் தூதர் போல் தந்திரமாகச் சென்றார்கள்
அவர்கள் தங்கள் கழுதைகளின் மீது கிழிந்த மூட்டைகளையும், பழைய கிழிந்து தைக்கப்பட்ட திராட்சை இரசத் தோல்பைகளையும் ஏற்றிக் கொண்டு, பழைய தைக்கப்பட்ட காலணிகளையும், பழைய ஆடைகளையும் அணிந்துகொண்டு, காய்ந்து சாம்பல் பூத்துவிட்ட அப்பங்களை உணவாக எடுத்துக்கொண்டு சென்றனர்
அவர்கள் கில்காலில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவிடம் சென்றார்கள்
அவர்கள் யோசுவாவை சந்திக்கவில்லை

11. இஸ்ரயேல் மக்கள் இவ்வியரிடம் கூறியது என்ன?

நாங்கள் தொலைநாட்டிலிருந்து வருகின்றோம். இப்பொழுது எங்களோடு உடன்படிக்கை செய்துகொள்ளுங்கள்
நீங்கள் எங்கள் நடுவில் வாழ்கின்றீர்கள்
நாங்கள் உங்களோடு உடன்படிக்கை செய்துகொள்ளமாட்டோம்
நாங்கள் உங்கள் பணியாளர்கள்
நீங்கள் யார்? எங்கிருந்து வருகின்றீர்கள்?

12. எமோரிய மன்னர்கள் யாவர்?

சீகோன்
யோசுவா
மோசே
ஆயி
ஓகு

13. யோசுவா யாரோடு உடன்படிக்கை செய்துகொண்டார்?

இஸ்ராயேல் மக்களோடு
ஆயி நகர் மக்களோடு
மோசேவுடன்
கிபயோன் மக்களோடு
கடவுளோடு

14. யோசுவா யாரை மரம் வெட்டுபவர்களாகவும், சபைக்கும் ஆண்டவரின் பீடத்திற்கும் தண்ணீர் எடுப்பவர்களாகவும் நியமித்தார்?

கிபயோன் மக்கள்
இஸ்ரயேல் மக்கள்
எகிப்து மக்கள்
மோசே
ஆபிரகாம்

15. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு, மூன்றாம் நாள் அவர்கள் நகருக்கு வந்தனர். -------------, --------------, --------------, -------------- ஆகியவையே அந்நகர்கள்."

கிபயோன்
கெபிரா
பெயரோத்து
கிரியத்து எயாரிம்
எகிப்து