மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 8
வேதாகமப் பகுதி : மத்தேயு நற்செய்தி அதிகாரம் 15 மற்றும் 16
முடிவுத் திகதி : 2014-08-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. எசாயா வெளிவேடக்காரரை பற்றி இறைவாக்குரைத்தது என்ன?

பெற்றோர்களை மதிக்கிறார்கள்
மக்கள் உதட்டினால் என்னை போற்றுகின்றனர்
உள்ளம் என்னைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது
மனிதக் கட்டளைகளை கோட்பாடுகளாக கற்பிக்கின்றனர்
இவர்கள் என்னை வழிபடுவது வீண்

2. இயேசுவிடம் உவமையைப்பற்றி விளக்கும்படி கேட்டவர் யார்?

பரிசேயர்
மறைநூல் அறிஞர்
மக்கள்
வெளிவேடக்காரர்
பேதுரு

3. மனிதரை தீட்டுப்படுத்துவது என்ன?

பழிப்புரை
பரத்தமை
கொலை
களவு
பொய்ச்சான்று

4. கோடிட்ட இடத்தை நிரப்புக
----------------- உணவை எடுத்து -------------------------போடுவது முறையல்ல.

கடவுளுக்குரிய, நாய்களுக்கு
பிள்ளைகளுக்குரிய, பேய்க்கு
பிள்ளைகளுக்குரிய, நாய்களுக்கு
எல்லா, ஏழைக்கு
மனிதருக்குரிய, நாய்களுக்கு

5. கலிலேய கடற்கரையில் இயேசுவால் குணம்பெற்ற மக்கள் யார்?

ஊனமுற்றோர்
முடக்குவாதமுற்றோர்
பிற நோயாளர்
பேச்சற்றோர்
பார்வையற்றோர்

6. இயேசு 4000 பேருக்கு எத்தனை அப்ப, மீன்களை வைத்து உணவளித்தார்?

ஏழு அப்பங்கள்
ஐந்து அப்பங்கள்
ஐந்து மீன்கள்
சில மீன்கள்
ஏழு அப்பங்களும், ஐந்து மீன்களும்

7. இயேசுவை சோதிக்கும் நோக்குடன் வானத்திலிருந்து அடையாளம் கேட்டவர்கள் யார்?

சீடர்கள்
பரிசேயர்
மக்கள் கூட்டத்தினர்
சதுசேயர்
மறைநூல் அறிஞர்


8. இயேசு சீடர்களை எச்சரித்தது ஏன்?

சீடர்களின் நம்பிக்கை குறைவால்
சீடர்கள் புரிந்துகொள்ளாததால்
சீடர்கள் பொறுப்பில்லாமல் இருந்ததால்
பரிசேயர், சதுசேயர் போதனையால்
சீடர்கள் தூங்கியதால்

9. மானிடமகன் யாரென்று மக்கள் கூறினார்கள்?

திருமுழுக்கு யோவான்
எலியா
மெசியா
எரேமியா
இறைவாக்கினர்களுள் ஒருவர்

10. "நீர் மெசியா; வாழும் கடவுளின் மகன்" என்று கூறியவர் யார்?

ஏரோது
இயேசுவின் அன்புச்சீடர்
தோமா
சீமோன் பேதுரு
யோனாவின் மகன்

11. கோடிட்ட இடத்தை நிரப்புக
உன் பெயர்-------------------. இந்த பாறையின் மேல் என் ------------------- கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் --------------- நான் உன்னிடம் தருவேன்.

பேதுரு
சாவி
பாறை
திறவுகோல்களை
திருச்சபையை

12. என் கண்முன்னே நில்லாதே சாத்தானே என்று யார் யாரிடம் கூறியது?

இயேசு பேய்களிடம்
இயேசு பரிசேயரிடம்
இயேசு பேதுருவிடம்
இயேசு சீடர்களிடம்
இயேசு பேய்பிடித்தவரிடம்

13. இயேசு தம் சீடரிடம் கூறியது என்ன?

தாய்தந்தையை விட்டுவிட்டு என்னை பின்பற்று
என்னை பின்பற்ற விரும்புபவர் தன்னலம் துறக்கவேண்டும்
தம் சிலுவையை தூக்கி பின்பற்றவேண்டும்
தம் உயிரை காக்க விரும்புபவர் அதை இழந்துவிடுவர்
உடைமைகளை விட்டுவிட்டு பின்பற்று

14. மானிடமகனின் வருகை எப்படி இருக்கும்?

தம் தந்தையின் மாட்சியோடு வருவார்
வெண்ணிற ஆடை அணிந்து வருவார்
தம் வானத்தூதர்களோடு வருவார்
பொன், தூபம், வெள்ளைப்போளத்துடன் வருவார்
கதிரவன் போன்ற ஒளியுடன் வருவார்

15. இவ்விரு அதிகாரங்களில் இயேசுவின் கோபமான சொற்கள் என்ன?

தீய தலைமுறையினர்
விபச்சார தலைமுறையினர்
வெளிவேடக்காரரே
குருட்டு வழிகாட்டிகள்
என் கண்முன் நில்லாதே சாத்தானே