மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 89
வேதாகமப் பகுதி : யோசுவா 6, 7
முடிவுத் திகதி : 2021-05-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. இஸ்ரயேல் மக்களுக்கு அஞ்சி, எரிகோ அடைக்கப்பட்ட பிறகு, யோசுவாவிடம் கடவுள் கூறியது என்ன?

பார்! எரிகோவையும், அதன் மன்னனையும், அதன் வலிமை மிக்க போர்வீரர்களையும் உன் கையில் ஒப்படைத்துவிட்டேன்
போர்வீரர்களாகிய நீங்கள் அனைவரும் நகரை வளைத்துக் கொண்டு அதை ஒருமுறை சுற்றி வாருங்கள். இவ்வாறு, ஆறு நாள்கள் செய்யுங்கள்
ஏழு குருக்கள் கொம்புகளால் ஆகிய எக்காளங்களைப் பேழைக்கு முன் ஏந்திச் செல்லட்டும்
ஏழாம் நாளில் நீங்கள் நகரை ஏழுமுறை சுற்றி வாருங்கள். அப்பொழுது குருக்கள் எக்காளங்களை முழங்கட்டும்
அவர்களுடைய எக்காளத்தின் நீண்ட முழக்கத்தை நீங்கள் கேட்டவுடன்,நீங்கள் அனைவரும் பேரொலி எழுப்புங்கள். அப்பொழுது நகரின் மதில்கள் இடிந்துவிழும்

2. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொள்ளுங்கள். --------- குருக்களும் -------- எக்காளங்களை ஆண்டவரது பேழைக்குமுன் ஏந்திக்கொண்டு போகட்டும்.”

ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
ஒன்பது

3. யோசுவா மக்களுக்கு அறிவுறுத்தியவுடன், மக்கள் என்ன செய்தனர்?

யோசுவா மக்களுக்குக் கூறியவுடன் கொம்புகளால் ஆகிய ஏழு எக்காளங்களை ஏந்திய ஏழு குருக்கள் ஆண்டவரின் முன் எக்காளம் முழங்கிக்கொண்டே நடந்து சென்றனர்
உடன்படிக்கைப் பேழை அவர்களுக்குப் பின் சென்றது
முன்னணி வீரர் எக்காளங்களை ஊதிய குருக்களுக்குமுன் நடந்து சென்றனர்
பின்னணி வீரர் பேழைக்குப்பின் நடந்து சென்றனர்
எக்காளங்கள் தொடர்ந்து முழங்கின

4. ஏழாவது முறை குருக்கள் எக்காளங்களை முழங்குகையில் யோசுவா மக்களிடம் கூறியது என்ன?

இப்பொழுது ஆரவாரம் செய்யுங்கள். ஏனெனில், ஆண்டவர் உங்களிடம் நகரை ஒப்படைத்துவிட்டார்
நகரும் அதனுள் இருக்கும் அனைத்தும் ஆண்டவருக்குரியன. ஆகவே, அவை அழிவுக்குரியன
விலைமாது இராகாபும் அவருடன் வீட்டில் உள்ள அனைவரும் உயிருடன் இருப்பர். ஏனெனில், நாம் அனுப்பிய போர்வீரர்களை அவர் ஒளித்துவைத்தார்
நீங்கள் அழிந்து போகாதபடி கைப்பற்றிய பொருள்களிலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் அழிவுக்குரியவற்றிலிருந்து எதையாவது கவர்ந்தால், இஸ்ரயேலின் பாளையத்தையும் அழிவுக்குரியதாக்கிக் கலங்கச் செய்வீர்கள்
எல்லா வெள்ளியும் பொன்னும் வெண்கல இரும்புப் பாத்திரங்களும் ஆண்டவருக்குப் புனிதமானவை. எனவே,ஆண்டவரின் கருவூலத்தைச் சேரும்

5. வீரர்கள் எத்தனை நாள்கள் எரிகோ நகரைச் சுற்றிவந்தார்கள்?

மூன்று நாள்கள்
நான்கு நாள்கள்
ஐந்து நாள்கள்
ஆறு நாள்கள்
ஏழு நாள்கள்

6. கோடிட்ட இடத்தை நிரப்புக:

„எல்லா ----------, --------------, ----------------- ஆண்டவருக்குப் புனிதமானவை. எனவே,ஆண்டவரின் கருவூலத்தைச் சேரும்.”

வெள்ளியும்
பொன்னும்
பூக்களும்
வெண்கல இரும்புப் பாத்திரங்களும்
காணிக்கைகளும்

7. ஏழாம் நாள் எரிகோ நகருக்கு நடந்தது என்ன?

மக்கள் ஆரவாரம் செய்தனர். எக்காளங்கள் முழங்கின
எக்காளத்தின் ஓசையைக் கேட்ட மக்கள் பேரொலி எழுப்பினர்
மதில் இடிந்து விழுந்தது. மக்கள் நகரினுள் நுழைந்தனர்
அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு முன்னிருந்த பகுதியைத் தாக்கி நகரைக் கைப்பற்றினர்
நகரில் இருந்த அனைத்தையும் அழித்தனர். ஆண்பெண், இளைஞர் முதியோர், ஆடு, மாடு கழுதை அனைத்தையும் வாள் முனையால் அழித்தனர்


8. “விலைமாதின் வீட்டுக்குச் செல்லுங்கள். அவருக்கு வாக்களித்தபடி அங்கிருந்து அப்பெண்ணையும், அவருக்குரிய அனைத்தையும் வெளியே கொண்டுவாருங்கள்.” இது யார் கூற்று?

இயேசு
இராகாபு
மரியா
யோசுவா
ஆபிரகாம்

9. யோசுவா கட்டளையிட்டவுடன் நாட்டின் இரு உளவாளிகள் என்ன செய்தார்கள்?

உளவு பார்த்த இளைஞர்கள் சென்றனர். இராகாபையும் அவர் தந்தையையும் தாயையும் அவர் சகோதரர்களையும் அவருக்கிருந்த அனைத்தையும் வெளியே கொண்டுவந்தனர்
அவருடைய உறவினர்களையும் அழைத்து வந்தனர்
அவர்களை இஸ்ரயேலின் பாளையத்திற்கு வெளியே தங்கச் செய்தனர். நகரையும் அதனுள் இருந்த அனைத்தையும் நெருப்பிலிட்டு எரித்தனர்
வெள்ளியையும், பொன்னையும், வெண்கல இரும்புப் பாத்திரங்களையும் மட்டுமே ஆண்டவரது வீட்டின் கருவூலத்தின் சேர்த்தனர்
விலைமாது இராகாபையும் அவர் தந்தையின் வீட்டாரையும் அவரைச் சார்ந்த அனைவரையும் யோசுவா உயிருடன் காப்பாற்றினார். அவர் இஸ்ரயேல் நடுவில் இன்றுவரை வாழ்கின்றார்

10. ஆக்கான் – சிறு குறிப்பு வரைக.

யூதா குலத்தைச் சேர்ந்தவன்
செராகின் வழிமரபில் பிறந்தவன்
கர்மியின் மகன்
இவன் அழிவுக்குரியவற்றிலிருந்து சிலவற்றை கவர்ந்து கொண்டான்
யோசுவாவின் மகன்

11. ஆயி நகரை உளவு பார்க்கச் சென்ற உளவாளிகள் யோசுவாவிடம் வந்து சொன்னது என்ன?

சென்று, நாட்டை உளவறிந்து வாருங்கள்
மக்கள் எல்லாரையும் அனுப்பவேண்டாம்
இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பேர் சென்று ஆயி நகரைத் தாக்கட்டும்
மக்கள் எல்லாரும் அங்குச் சென்று களைப்படைய வேண்டாம். ஏனெனில், அங்குள்ளவர்கள் சிலரே
என் ஆண்டவரே, என் கடவுளே

12. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"ஆயி நகரின் ஆள்கள் நகரின் வாயிலிலிருந்து செபாரிம் வரை அவர்களைத் துரத்திச்சென்று மலைச்சரிவில் அவர்களில் --------------- பேரைக் கொன்றார்கள்."

இருபத்தாறு
முப்பத்தாறு
நாற்பத்தாறு
ஐம்பத்தாறு
அறுபத்தாறு

13. ஆயி நகரின் ஆள்களுக்கு முன் தோற்றப்பிறகு, யோசுவாவும், இஸ்ரயேல் மக்களும் செய்தது என்ன?

யோசுவா தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்
அவரும் அவருடன் இஸ்ரயேலின் முதியோரும் ஆண்டவரின் பேழைக்குமுன் மாலைவரை தரையில் முகம்குப்புற விழுந்து கிடந்தனர்
தம் தலைமீது புழுதியைப் போட்டுக் கொண்டனர்
அனைவரும் மகிழ்ந்தனர்
யோசுவா, “சென்று, நாட்டை உளவறிந்து வாருங்கள்” என்றார்

14. ஆயி நகரில் தோற்றப்பிறகு, யோசுவாவின் புலம்பல் என்ன?

ஐயோ, என் தலைவராகிய ஆண்டவரே! மக்களை எமோரியர் கையில் ஒப்படைத்து, அழிப்பதற்காகவா யோர்தானைக் கடக்குமாறு செய்தீர்?
நாங்கள் யோர்தானுக்கு அப்பாலேயே மனநிறைவோடு தங்கி இருந்திருக்க வேண்டும்
என் ஆண்டவரே! இஸ்ரயேலர் தங்கள் எதிரிகளின்முன் புறமுதுகுகிட்டு ஓடிவிட்டார்களே! நான் இப்போது என்ன சொல்வேன்?
கானானியரும் நாட்டில் வாழும் அனைவரும் இதைக் கேட்டு எங்களைச் சூழ்ந்துகொண்டு எங்கள் பெயரை உலகிலிருந்தே அழித்துவிடுவார்களே?
அப்போது உமது பெருமை மிக்க பெயரைக் காக்க என்ன செய்வீர்?

15. புலம்பிய யோசுவாவிடம் ஆண்டவர் கூறியது என்ன?

எழுந்திரு! ஏன் முகம்குப்புற விழுந்து கிடக்கின்றாய்? இஸ்ரயேலர் பாவம் செய்தனர். நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையை மீறிவிட்டனர்
அவர்கள் அழிவுக்குரியவற்றிலிருந்து எடுத்துக்கொண்டனர்; களவுசெய்தனர்; வஞ்சித்தனர்
அவற்றைத் தங்கள் பொருள்களுடன் சேர்த்துக் கொண்டனர். ஆகவேதான், இஸ்ரயேல் மக்கள் தங்கள் எதிரிகளின்முன் நிற்க முடியவில்லை; புறமுதுகிட்டு ஓடினர்
அவர்கள் அழிவுக்குரியவர்கள். உங்கள் நடுவிலிருந்து அழிவுக்குரியவற்றை நீங்கள் அழிக்காவிடில் நான் இனி உங்களுடன் இருக்கமாட்டேன்
எழுந்திரு. மக்களைப் புனிதமாக்கு; ‘நாளையதினம் உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறு