மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 87
வேதாகமப் பகுதி : யோசுவா 1, 2
முடிவுத் திகதி : 2021-03-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. யோசுவா என்பவர் யார்?

நூனின் மகன்
ஆபிரகாமின் மகன்
மோசேயின் சகோதரர்
மோசேயின் உதவியாளர்
கானானை கைப்பற்ற ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்

2. மோசே இறந்தபின் ஆண்டவர் யோசுவாவிடம் கூறியது என்ன?

இப்பொழுது நீ புறப்பட்டு, யோர்தானைக் கடந்து, இந்த மக்கள் அனைவரோடும் நான் இஸ்ரயேலருக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் செல்.
மோசேக்கு நான் கூறியவாறு உன் காலடிபடும் இடத்தை எல்லாம் உங்களுக்குக் கொடுப்பேன்.
பாலைநிலத்திலிருந்து இந்த லெபனோன் வரையிலும், யூப்பிரத்தீசு பேராறு தொடங்கி இத்தியர் நாடு முழுவதுமாகக் கதிரவன் மறையும் பெருங்கடல் வரையிலும் உங்கள் நிலமாக இருக்கும்.
உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான்.
மோசேயுடன் நான் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன். உன்னைக் கைநெகிழ மாட்டேன்; கைவிடவும் மாட்டேன்.

3. யோசுவா மக்களின் மேற்பார்வையாளருக்குக் கட்டளையிட்டது என்ன?

வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே!
பாளையத்தின் நடுவே சென்று இவ்வாறு மக்களுக்குரிய கட்டளையாகக் கூறுங்கள்
உங்களுக்கு வேண்டிய உணவைத் தயார் செய்யுங்கள்.
ஏனெனில், இன்னும் மூன்று நாள்களில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் உடைமையாக உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை உரிமையாக்கிக்கொள்ள இந்த யோர்தானைக் கடப்பீர்கள்.
ஏனெனில், உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்.

4. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"உங்கள் -----------, ------------, -------------, மோசே உங்களுக்குக் கொடுத்த கீழை யோர்தானில் தங்கலாம்."

மனைவியரும்
குழந்தைகளும்
கால்நடைகளும்
கணவரும்
பெற்றோரும்

5. ரூபன், காத்தின் மக்களுக்கு யோசுவா கூறியது என்ன?

உங்களுக்கு ஆண்டவரின் ஊழியர் மோசே கட்டளையிட்டதை நினைவுகொள்ளுங்கள்.
உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு அமைதி அருள்வார்.
இந்நாட்டை உங்களுக்கு அளிப்பார். உங்கள் மனைவியரும், குழந்தைகளும், கால்நடைகளும், மோசே உங்களுக்குக் கொடுத்த கீழை யோர்தானில் தங்கலாம்.
ஆனால், வலிமைமிக்க நீங்கள் படைக்கலம் தாங்கிய போர் வீரர்களாக உங்கள் சகோதரர்களுக்கு முன்பாகக் கடந்து சென்று அவர்களுக்கு உதவுங்கள்.
ஆண்டவர் உங்களுக்குச் செய்ததுபோல் உங்கள் சகோதரர்களையும் அந்நாட்டில் குடியேற்றி அவர்களுக்கும் அமைதி அருள்வார்.

6. ரூபன், காத்தின் மக்கள் யோசுவாவுக்கு அளித்த பதில் என்ன?

நீர் எங்களுக்குக் கட்டளை இடுவதை நாங்கள் செய்வோம்.
நீர் அனுப்பும் இடத்திற்கெல்லாம் நாங்கள் செல்வோம்.
நாங்கள் மோசேக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்ததுபோல் உமக்கும் கீழ்ப்படிவோம்.
உம் கடவுளாகிய ஆண்டவர் மோசேயுடன் இருந்ததுபோல் உம்மோடும் இருப்பாராக.
உம் வாய் மொழியை எதிர்ப்பவன் எவனும், நீர் எங்களுக்குக் கட்டளை இடுபவை அனைத்திற்கும் செவிகொடுக்காதவன் எவனும் கொல்லப்பட வேண்டும். வீறுகொண்டு துணிந்து நிற்பீராக

7. எத்தனை ஒற்றர்களை யோசுவா வேவு பார்க்க அனுப்பினார்?

ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து

8. ஒற்றர்கள் யாருடைய வீட்டில் தங்கினர்?

யோசுவா
மோசே
ரூபன்
காத்து
இராகாபு

9. ஒற்றர்கள் எந்த நகரை வேவு பார்க்கச் சென்றனர்?

கலிலேயா
எருசலேம்
எரிகோ
எகிப்து
சமாரியா

10. விலைமாது இராகாபை பற்றி எந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது?

யோசுவா 2:1
யோசுவா 1:2
எபிரேயர் 11:31
யாக்கோபு 2:25
யாக்கோபு 3:1

11. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"நீங்கள் கீழை யோர்தானில் இரண்டு எமோரிய அரசர்களான ---------------, -------------- செய்ததையும் அவர்களை அழித்ததையும் அவர்கள் அறிவார்கள்."

யோசுவாவுக்கும்
சீகோனுக்கும்
ஓகுக்கும்
இராகாபுக்கும்
ரூபனுக்கும்

12. இராகாபு ஒற்றர்களிடம் கூறியது என்ன?

இந்நாட்டை ஆண்டவர் உங்களுக்கு அளிப்பார் என்று நான் அறிவேன். ஏனெனில், உங்களைப் பற்றிய அச்சம் எங்களிடையே எழுந்துள்ளது.
உலகில் வாழ்வோர் அனைவரும் உங்கள்முன் நடுங்குகின்றனர்.
எகிப்தினின்று நீங்கள் வெளியேறும்பொழுது செங்கடலின் நீரை ஆண்டவர் வற்றச்செய்தது பற்றி அவர்கள் கேள்விப்பட்டுள்ளனர்.
நீங்கள் கீழை யோர்தானில் இரண்டு எமோரிய அரசர்களான சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் அவர்களை அழித்ததையும் அவர்கள் அறிவார்கள்.
அதைக் கேள்விப்பட்டவுடன் எங்கள் இதயம் கலக்கமுற்றது. உங்கள் முன்னிலையில் எங்கள் உள்ளம் தளர்ந்திருக்கிறது. ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர், மேலே விண்ணுலகம் முதல் கீழே மண்ணுலகம் அனைத்திற்கும் கடவுள்.

13. ஒற்றர்கள் இராகாபிடம் கூறியது என்ன?

அதைக் கேள்விப்பட்டவுடன் எங்கள் இதயம் கலக்கமுற்றது.
உங்கள் முன்னிலையில் எங்கள் உள்ளம் தளர்ந்திருக்கிறது.
எங்கள் உயிர் உம்கையில் உள்ளது.
எங்களைப் பற்றி வெளியில் சொல்லாமல் இருந்தால் ஆண்டவர் எங்களுக்கு நாட்டை அளிக்கும்போது நாங்கள் உங்களுக்கு இரக்கம் காட்டுவோம்.
நம்பிக்கையுடன் நடந்துகொள்வோம்

14. “உங்கள் வார்த்தைப்படியே ஆகட்டும்” இது யார் கூற்று?

யோசுவா
ஒற்றர்கள்
நூன்
இராகாபு
ஆபிரகாம்

15. நாடு அனைத்தையும் கடவுள் நம் கையில் ஒப்படைத்துள்ளார். நாட்டில் வாழ்பவர் அனைவரும் நம்மைக் கண்டு நடுங்குகின்றனர்” இது யார் கூற்று?

யோசுவா
ஒற்றர்கள்
நூன்
இராகாபு
ஆபிரகாம்