மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 86
வேதாகமப் பகுதி : மாற்கு 15, 16
முடிவுத் திகதி : 2021-02-28

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. பிலாத்துவிடம் இயேசுவை ஒப்புவிக்க ஆலோசனை செய்தவர்கள் யாவர்?

மூப்பர்
மறைநூல் அறிஞர்
தலைமைச் சங்கத்தார்
தலைமைக் குருக்கள்
யூதாஸ் ஸ்காரியோத்

2. "நீ யூதரின் அரசனா?" இது யார் கூற்று?

இயேசு
தலைமைக்குருக்கள்
மறைநூல் அறிஞர்
யூதாஸ்
பிலாத்து

3. பரபா – சிறுகுறிப்பு வரைக:

ஒரு கலகத்தில் கொலை செய்த கலகக்காரரோடு பிடிபட்டவன் அவன்.
தலைமைக் குருக்கள் தங்களுக்குப் பரபாவையே அவன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்குமாறு கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள்.
பாஸ்கா விழாவின்போது விடுதலை செய்யப்பட்டவர்
அவன் ஓர் அப்பாவி
இயேசுவின் சீடர்

4. ஆளுநர் மாளிகையின் முற்றத்தில் இயேசுவுக்கு நடந்த நிந்தனை என்ன?

அவருக்குச் செந்நிற ஆடையை உடுத்தினர்;
ஒரு முள் முடி பின்னி அவருக்குச் சூட்டினர்.
“யூதரின் அரசே வாழ்க!” என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்;
மேலும் கோலால் அவர் தலையில் அடித்து. அவர்மீது துப்பி, முழந்தாள்படியிட்டு அவரை வணங்கினர்.
அவரை ஏளனம் செய்த பின் செந்நிற ஆடையைக் கழற்றி விட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக வெளியே கூட்டிச் சென்றனர்.

5. இயேசுவுக்காக சிலுவை சுமக்க கட்டாயப்படுத்தப்பட்டவர் யார்?

பேதுரு
அன்னை மரியா
சிரேன் ஊராகிய சீமோன்
பிலாத்து
பரபா

6. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“அப்படியானால் நீங்கள் ------------------ என்று குறிப்பிடும் இவனை நான் என்ன செய்ய வேண்டும்?”

யூதரின் அரசர்
யூதரின் கடவுள்
யூதரின் மகன்
யூதரின் மெசியா
யூதரின் இறைமகன்

7. “கொல்கொதா“ என்ற சொல்லின் பொருள் என்ன?

யெருசலேம்
மண்டை ஓட்டு இடம்
பெத்லகேம்
சிலுவை
மலை

8. இயேசுவை சிலுவையில் அறைந்த போது மணி என்ன?

காலை ஆறு மணி
காலை ஏழு மணி
காலை ஒன்பது மணி
மாலை ஒன்பது மணி
மாலை ஆறு மணி

9. “இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்” – இது யார் கூற்று?

பிலாத்து
பரபா
தலைமைக் குருக்கள்
நூற்றுவர் தலைவர்
பேதுரு

10. சிலுவையடியில் நின்று கொண்டிருந்த பெண்கள் யாவர்?

மகதலா மரியா
சின்ன யாக்கோபின் தாய் மரியா
யோசேவின் தாய் மரியா
சலோமி
வேறு பல பெண்கள்

11. விண்ணேற்படையுமுன் இயேசு சீடர்களுக்குச் சொன்னது என்ன?

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்;
நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும்அடையாளங்களைச் செய்வர்.
அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர்.
கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது.
அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்

12. அரிமத்தியா யோசேப்பு – சிறு குறிப்பு வரைக:

அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவர்
துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார்
அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர்
அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்
யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார்.

13. கல்லறையில் வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் பெண்களிடம் கூறியது என்ன?

திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்;
அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை;
இதோ, அவரை வைத்த இடம்.
நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், “உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்;
அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்” எனச் சொல்லுங்கள்

14. இயேசு உயிர்த்தெழுந்த பிறகு முதன்முதலில் இயேசு யாருக்கு காட்சியளித்தார்?

சலோமி
மகதலா மரியா
அன்னை மரியா
சீடர்கள்
பேதுரு

15. மகதலா மரியா – சிறு குறிப்பு வரைக

இயேசு இவரிடமிருந்து ஏழு பேய்களை ஓட்டியிருந்தார்.
இயேசுவின் உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் கொண்டு சென்றவர்.
உயிர்த்த இயேசுவை முதன்முதலில் கண்டவர்
புறப்பட்டு சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார்
மகதலா மரியா இயேசுவின் தாய்