மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 85
வேதாகமப் பகுதி : மாற்கு 13, 14
முடிவுத் திகதி : 2021-01-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. “இங்குக் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும்“ இயேசு இங்கு எதை குறிப்பிடுகிறார்?

தன் வீட்டைக் குறித்து
எருசலேம் கோவிலின் அழிவை குறித்து
இஸ்ராயேல் மக்களின் அழிவை குறித்து
சீடர்களை குறித்து
அன்னை மரியாவை குறித்து

2. கோடிட்ட இடங்களை நிரப்புக:

இயேசு கோவிலுக்கு எதிராக உள்ள ஒலிவ மலைமீது அமர்ந்திருந்த போது -----------, -----------, -----------, ----------ஆகியோர் அவரிடம் தனியாக வந்து பேசினர்.

பேதுரு
யாக்கோபு
யோவான்
அந்திரேயா
இயேசு

3. “நீர் கூறியவை எப்போது நிகழும்? “சீடர்களின் இந்த கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன?

உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, “நானே அவர்” என்று சொல்லிப் பலரை நெறிதவறச் செய்வர்.
போர் முழக்கங்களையும் போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கும் பொழுது நீங்கள் திடுக்கிடாதீர்கள்.
இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இவையே முடிவாகா.
நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்; பல இடங்களில் நில நடுக்கங்கள் ஏற்படும்; பஞ்சமும் உண்டாகும். இவை கொடும் வேதனைகளின் தொடக்கமே.

4. இயேசு சீடர்களிடம் எச்சரித்தது என்ன?

நீங்கள் கவனமாயிருங்கள்
உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள்
தொழுகைக்கூடங்களில் உங்களை நையப்புடைப்பார்கள்
என் பொருட்டு ஆளுநர் முன்னும் அரசர் முன்னும் நிறுத்தப்பட்டு அவர்கள் முன் எனக்குச் சான்று பகர்வீர்கள்.
ஆனால் எல்லா மக்களினத்தவர்க்கும் முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும்.

5. வரப்போகும் கொடும் வேதனை குறித்து இயேசு கூறியது என்ன?

நடுங்க வைக்கும் தீட்டு” நிற்கக்கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள்.
வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்க வேண்டாம்.
தம் வீட்டினின்று எதையும் எடுக்க அதில் நுழையவும் வேண்டாம்.
வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வர வேண்டாம்.
அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோர் நிலைமை அந்தோ பரிதாபம்!

6. போலி இறைவாக்கினர்களை குறித்து இயேசு கூறியது என்ன?

இந்த மாபெரும் கட்டடங்களைப் பார்க்கிறீர் அல்லவா!
இங்குக் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும்” என்றார்.
அப்பொழுது யாராவது உங்களிடம், “இதோ, மெசியா இங்கே இருக்கிறார்; அதோ, அங்கே இருக்கிறார்” எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம்.
ஏனெனில் போலி மெசியாக்களும் போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறிதவறச் செய்ய அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்து காட்டுவர்.
நீங்களோ கவனமாயிருங்கள். அனைத்தையும் முன்னதாகவே உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.

7. மானிடமகன் வருகை எப்படி இருக்கும்?

அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்
நிலா ஒளிகொடாது
விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்
வான்வெளிக் கோள்கள் அதிரும்.
அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.


8. கோடிட்ட இடங்களை நிரப்புக:

விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் ---------ஒழியவேமாட்டா.

என் உடல்
என் இரத்தம்
என் உணவு
என் பெயர்
என் வார்த்தைகள்

9. இயேசு மானிட மகன் வருகையை எந்த உவமையுடன் ஒப்பிடுகிறார்?

அத்திமர உவமை
நல்ல சமாரியன் உவமை
கடுகு விதை உவமை
ஊதாரி மகன் உவமை
புளிப்பு மாவு உவமை

10. கோடிட்ட இடங்களை நிரப்புக:

அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர்------,------ ,------- ,----- எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.

மாலையிலோ
நள்ளிரவிலோ
சேவல் கூவும் வேளையிலோ
காலையிலோ
நண்பகலிலோ

11. பெத்தானியாவில் தொழு நோயாளர் சீமோன் இல்லத்தில் இயேசு இருந்த போது அங்கு வந்த பெண் செய்தது என்ன?

அங்கே பந்தியில் அமர்ந்திருந்தபோது இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார்.
அந்தத் தைலம் கலப்பற்றது.
அந்த பெண் எதுவும் செய்யவில்லை
விலையுயர்ந்தது
அவர் அப்படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையில் ஊற்றினார்.

12. இந்த பெண்ணின் செயலை எதிர்த்தவர்களுக்கு இயேசு கூறியது என்ன?

அவரை விடுங்கள். ஏன் அவருக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்?
அவர் எனக்குச் செய்தது முறையான செயலே.
ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள். நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யமுடியும்.
ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை.
இவர் தம்மால் இயன்றதைச் செய்தார். என் அடக்கத்திற்காக இவர் முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசிவிட்டார்.

13. இயேசுவை காட்டிக் கொடுக்க வாய்ப்பு தேடி கொண்டிருந்தவர் யார்?

ஏரோது
பிலாத்து
தலைமை குருக்கள்
யூதாசு இஸ்காரியோத்து
பேதுரு

14. தன்னை காட்டி கொடுப்பவனை பற்றி இயேசு கூறியது என்ன?

அவன் பன்னிருவருள் ஒருவன்
என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன்
ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு!
அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்
என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்

15. ஆண்டவர் திருவிருந்தை ஏற்படுத்துதல் எங்கே இடம் பெற்றுள்ளது?

மாற்கு 14: 22-25
மத்தேயு 26: 26-30
லூக்கா 22: 15-20
1 கொரிந்தியர் 11: 23-25
யோவான் 6: 1-10