மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 84
வேதாகமப் பகுதி : மாற்கு நற்செய்தி 12
முடிவுத் திகதி : 2020-12-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. இயேசுவின் கொடிய குத்தகைக்காரர் உவமை எந்தெந்த நற்செய்தியில் இடம்பெற்றுள்ளது?

மத்தேயு 21: 33-46
யோவான் 2:34-47
லூக்கா 20: 9-19
யோவான் 3: 34-47
மாற்கு 12:1-9

2. திராட்சைத் தோட்ட முதலாளி நெடும்பயணம் மேற்கொள்ளும் முன் என்ன செய்தார்?

ஒரு திராட்சைத் தோட்டம் போட்டுச் சுற்றிலும் வேலியடைத்தார்
பிழிவுக்குழி வெட்டினார்
ஒரு காவல் மாடமும் கட்டினார்
பிறகு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும்பயணம் மேற்கொண்டார்.
திராட்சைத் தோட்டத்தை அவரே காவல் செய்தார்.

3. கோடிட்ட இடத்தை நிரப்புக:

அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான --------------- போட்டார்.

ஒரு காசை
இரண்டு காசுகளை
மூன்று காசுகளை
நான்கு காசுகளை
ஐந்து காசுகளை

4. உரிமையாளர் பருவகாலம் வந்ததும் குத்தகைக்கு விட்ட தொழிலாளர்களிடமிருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு பணியாளர்களுக்கு கூறி அனுப்பியதும் நடந்தது என்ன?

அவரைப் பிடித்து நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்
மீண்டும் அவர் வேறொரு பணியாளரை அனுப்ப அவரையும் தலையில் அடித்து அவமதித்தார்கள்
மேலும் ஒருவரை அனுப்ப, அவரை கொலை செய்தார்கள்
அவர் வேறு பலரையும் அனுப்பினார். அவர்களுள் சிலரை நையப்புடைத்தார்கள்
சிலரைக் கொன்றார்கள்.

5. இன்னும் எஞ்சியிருந்த அவருடைய அன்பு மகனுக்கு நடந்தது என்ன?

தம் மகனை அவர்கள் மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு இறுதியாக அவரை அவர்களிடம் அனுப்பினார்.
அப்பொழுது அத்தோட்டத் தொழிலாளர்கள், இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள் நாம் இவனைக் கொன்று போடுவோம்.
அப்போது சொத்து நமக்கு உரியதாகும் என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்
அவ்வாறே அவரைப் பிடித்து கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்
அவரை அடித்து விரட்டினர்.

6. கோடிட்ட இடத்தை நிரப்புக:

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு ------------- ஆயிற்று. ---------------------நிகழ்ந்துள்ள இது நம் கண்களுக்கு வியப்பாயிற்று.

எல்லைக்கல்
மூலைக்கல்
மாற்குவால்
மத்தேயுவால்
ஆண்டவரால்

7. பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க என்ன செய்தனர்?

ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பிவைத்தனர்.
அவர்கள் அவரிடம் வந்து, „போதகரே, நீர் உண்மையுள்ளவர் ஆள் பார்த்துச் செயல்படாதவர்.
எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்ப கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும்.
சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?
நாங்கள் செலுத்தவா, வேண்டாமா? என்று கேட்டார்கள்


8. பரிசேயரின் வரி குறித்த கேள்விக்கு இயேசுவின் பதிலென்ன? ஏரோதியர் இயேசுவைக் குறித்து ஏன் வியப்படைந்தனர்?

இயேசு அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்து கொண்டு, “ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?
என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும்” என்றார்.
அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?” என்று கேட்டார்.
அவர்கள் அவரிடம், “சீசருடையவை” என்றார்கள்.
அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.

9. கோடிட்ட இடத்தை நிரப்புக:

 “சீசருக்கு உரியவற்றைச் ------------- கடவுளுக்கு உரியவற்றைக் --------------- கொடுங்கள்”.

மரியாவுக்கும்
சீசருக்கும்
கடவுளுக்கும்
பேதுருவுக்கும்
பவுலுக்கும்

10. உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடையோர் யார்?

பரிசேயர்
சதுசேயர்
மறைநூல் அறிஞர்கள்
மூப்பர்கள்
கிறிஸ்தவர்கள்

11. இறந்து உயிர்த்தெழும்போது எவ்வாறு மனிதர் இருப்பர் என இயேசு கூறுகிறார்?

இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை
மாறாக அவர்கள் விண்ணகத்தூதரைப்போல் இருப்பார்கள்
இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர் பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்ததில்லையா?
ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே என்று கடவுள் அவரிடம் சொன்னாரே?
அவர் இறந்தோரின் கடவுள் அல்ல. மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கூறினார்.

12. அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? என்று கேட்டதற்கு இயேசுவின் பதில் எது?

இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.
என் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக என்பது முதன்மையான கட்டளை.
உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக என்பது இரண்டாவது கட்டளை.
இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை என்றார்.
எதுவும் இல்லை என்றார்.

13. மறைநூல் அறிஞரைக் குறித்து இயேசுவின் கருத்து என்ன?

அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்
தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்
கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்
நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள்.
கடுந்தண்டனை தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் இவர்களே, என்று கூறினார்.

14. ஏழைக்கைம்பெண்ணின் காணிக்கை நிகழ்வு எங்கே இடம்பெற்றுள்ளது?

மத்தேயு 12: 41-44
மாற்கு 12: 41-44
லூக்கா 21:1-4
யோவான் 21:1-4
தொடக்க நூல் 21:1-4

15. கோயிலுக்கு வந்த ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கைப் பற்றி இயேசு கூறியது என்ன?

அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார்.
அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, „இந்த ஏழைக்கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர்.
இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே போட்டார்.
ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார் என்று அவர்களிடம் கூறினார்.